கல்விபயனுள்ள தகவல்

பணம் தான் வாழ்க்கையா?’’.. ?இன்றைய சிந்தனை..( 26..07.2019..)✍️முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

?மலரும் நினைவுகள்?

advertisement by google

❤இன்றைய சிந்தனை..( 26..07.2019..)
…………………………………….

advertisement by google

”’ பணம் தான் வாழ்க்கையா?’’..
…………………………………….

advertisement by google

வாழ்வதற்குப் பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்.

advertisement by google

“பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஆட்கொண்டு இருக்கிறார்கள்”..

advertisement by google

பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைத்து இருப்பது தான் தவறு..

advertisement by google

பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படுகிறது…

advertisement by google

ரூட்ஷெல்ட் என்பவர் பிரிட்டனில் மிகப் பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர். பிரிட்டன் அரசாங்கம் இவரிடம் இருந்து கடனாகப் பெற்று தனது நாட்டை வழி நடத்தும் அளவிற்கு மகா செல்வந்தராக வாழ்ந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரு நாள் தனது பணம், தங்கம் உள்பட நிறைந்த அறைக்குள் நுழைந்து கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது திடீரென திறக்க முடியாதவாறு கதவுகள் மூடப்பட்டு விட்டது.

எவ்வளவோ முயன்றும் அவரால் கதவைத் திறக்க இயலவில்லை.
பல நாட்கள் பசி பட்டினியாக இருந்து மரணம் அடையும் முன் சுவற்றில் சில வரிகளை எழுதினார்

அதில் சில…

”நான் உலகில் மிகவும் உயர்ந்த மனிதனாக வாழ்ந்தேன் .ஆனால் எனது சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது பசி, தாகத்தைக் கூட போக்க முடியாத ஏழையாக மரணம் அடையப் போகின்றேன் என்று எழுதி இருந்தார்.”

அவர் மரணம் அடைந்து பல வாரங்களுக்குப் பின்னரே அவரின் உறவினர்களுக்குத் தெரிய வந்தது.

பணத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு இந்தக் கதை ஒரு பாடமாக அமையும்.

ஆம்.,நண்பர்களே..,

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக எண்ணி, பணமே குறிக்கோள் என்று எண்ணி வாழ்பவர்களோடு பழகாதீர்கள்.

பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிப்பவர்களோடு பழகுங்கள்.???❤

ஆக்கம்.
உடுமலை.
சு.தண்டபாணி.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button