இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

அய்யாக்கண்ணு ஆட்டம் ஆரம்பம்? கோவனத்துடன் ஊர்வலமாக சென்று மனு அளிக்க திட்டம்? 20 இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தற்காக? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மத்திய நிதிஅமைச்சரின் கொரோனா நிதி 20 இலட்சம் கோடி அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே தந்தது என்பதை வலியுறுத்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கோவனதுடன் ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

advertisement by google

பெறுநர்:
மாண்புமிகு. நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,
புதுடெல்லி.

advertisement by google

வழி : உயர்திரு. திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலமாக.

advertisement by google

பொருள் : கடனிலே பிறந்து, கடனோடு வாழ்ந்து, சாகும்வரை கடனை வைத்திருந்து, சாவிற்கு பிறகு தனது வாரிசுகளான மகன், மகள்களுக்கு கடன்களை சொத்தாக விட்டு செல்லும் நிலை மாறி, மாண்புமிகு. பாரத பிரதமர் மோடி ஐயா கொரோனா நிதி 20 இலட்சம் கோடியிலிருந்து காப்பாற்றுவார் என்று எண்ணி ஏமாந்தது – சம்பந்தமாக.

advertisement by google

மாண்புமிகு. நிதி அமைச்சருக்கு,

advertisement by google
 இந்திய ஜனத்தொகை130 கோடியில் 85 கோடி பேர் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்.

 *மாண்புமிகு. பாரத பிரதமர் மோடி ஐயா* கொரோனா-வால் பாதித்த மக்களுக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணநிதி ஒதுக்கியவுடனே இந்திய விவசாயிகள் எல்லோரும் விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும் என்றும் ( கொரோனா-க்கு முன்பு  ரூ.400/- விற்ற வாழைதார், இப்பொழுது ரூ.50-க்கு விலை போனது, வெற்றிலை விசேஷங்கள், ஹோட்டல்கள் இல்லாததால் ஏக்கருக்கு 3 இலட்சம் செலவு செய்து சாகுபடி செய்த வெற்றிலை வயலிலேயே காய்ந்துவிட்டது, வாழைஇலைகள் அறுக்காமல் வயிலிலேயே காய்ந்துவிட்டது, தர்ப்பூசணி, குச்சிவள்ளி கிழங்கு, வெள்ளரி, மலர்கள், காய்கறிகள், ஜூஸ் கரும்புகள், எலுமிச்சை, மக்காசோளம், பருத்தி மற்றும் தானிய பயிர்கள் மார்க்கெட் இல்லாததாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் விற்பனை செய்யமுடியாததால் வயலிலேயே அழிந்துவிட்டது, வெள்ளரியை மாடு சாப்பிடுகிறது.)

 40 கிலோ நெல்லுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை லஞ்சம் கொடுத்துதான் விற்றோம். சூறாவளியால் அழிந்த வாழை மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம், *ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்ட ஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்*. ஆனால், நிதியமைச்சரின் அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. ஜனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் விவசாயத்தை சார்ந்தவர்களுக்கு சுமார் 14 இலட்சம் கோடி  நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.

 ஆனால், விவசாயிகளை கடன்காரர்களாக ஆக்குவதற்காகவும், வங்கி மேலாளர்களை கண்டு விவசாயிகள் ஓடி ஒழியும் அடிமைகளாக்குவதற்காகவும், விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுப்பது எதுவும் இல்லாமலும், கடன் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுவது, விவசாயிகள் கடனிலேயே பிறக்க வேண்டும், கடனோடு வாழ வேண்டும், இலாபகரமான விலை இல்லாததாலும், இயற்கை சீற்றங்களாலும் (அதிக மழை பெய்ததாலும், அதிக வெயில் அடித்ததாலும், அதிக வறட்சி என்றாலும் அழிவது விவசாயிகளே) விவசாயிகளை அழிவில் இருந்து காப்பாற்றுவது சம்மந்தமாகவோ, மாண்புமிகு. நிதியமைச்சர் அறிக்கையில் எதுவும் இல்லையே.! விவசாயிகள் அணிந்திருக்கின்ற உடைகளையும் இந்த கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட நஷ்ட ஈடு அடைப்பதற்கு வங்கி மேலாளர்கள் அவிழ்த்துக்கொள்ளும் நிலையை உண்டாக்கி உள்ளீர்களே.! இது நியாயமா..!

 சிறு, குறு விவசாயிகளை மட்டும் குறிப்பிடும் தாங்கள், நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளை கண்டுகொள்வது இல்லையே ஏன்? சிறு, குறு விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைபொருட்களை அவர்கள் குடும்பத்திற்க்கே பாதி வைத்து கொள்வார்கள், தொழிலர்களாகவும் இருந்து சம்பாதிக்கிறார்கள், ஆனால் நடுத்தர, பெரிய விவசாயிகள் சாகுபடி செய்யும் உணவு பொருட்களை பொதுமக்களுக்கு நஞ்சில்லாத உணவாக கொடுத்து காப்பாற்றுகிறார்கள். வெள்ளம் வந்தாலும், வறட்சி வந்தாலும் எல்லா விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் எல்லோரையும் காப்பாற்றுங்கள்.

 எனவே, மாண்புமிகு. நிதியமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்கும்வரை, அதுவரை கடன் தள்ளுபடியும், *ஏக்கருக்கு ரூ.20,000/- நஷ்டஈடும்*, 60 வயதடைந்த விவசாயிகளுக்கு சிறு, குறு, பெரிய விவசாயிகள் என்று பார்க்காமல் மகன், மகள் இருந்தாலும், நிலம் இருந்தாலும்( அரசு ஊழியருக்கு பென்ஷன் கொடுப்பதுபோல்) மாதம் ரூ.5,000/- ஓய்வூதியமும், தனிநபர் இன்சூரன்ஸ்-ம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்றுவீர்கள்!! என்று நம்பி இந்த கடிதத்தை அனுப்பி உள்ளோம்.

 உங்கள் கவனத்தை ஈர்க்க 18.06.2020-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க *மாநில தலைவர் P. அய்யாக்கண்ணு* BABL அவர்களின் தலைமையிலும், திருச்சி மாநகர தலைவர் P. மேகராஜன், மாநில செய்தித்தொடர்பாளர் S. பிரேம்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் கோவணம் கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு கொடுக்க உள்ளோம்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button