இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திபயனுள்ள தகவல்வரலாறு

ஒரு லாரிநிறைய தண்ணீரில் கிடந்த பழைய துணி தினம் தினம்? ஐயா ஜோதிடர்களே தண்ணீரில் பழைய துணியை கழட்டி போட சொல்லாதீங்க???????????

advertisement by google

ஒரு லாரி நிறைய பழைய துணி…

advertisement by google

சேகரித்து சுத்தம் செய்த இடம் திருச்சி காவரி அம்மா மண்டபம்..

advertisement by google

இது ஒரு பகுதி மட்டும்…

advertisement by google

அங்கே குளிக்க வந்தவர்கள் பரிகாரம் என்ற பெயரில் விட்டுச் சென்ற துணிகள் தான் இவை..

advertisement by google

வெட்கப்படணும் நாம்..

advertisement by google

நம் முன்னோர்கள் நம்மிடம் விட்டுச் சென்ற நீர்நிலைகளை எந்த அளவு அசுத்தமாக வைத்துள்ளோம் என்பதை நினைத்து..

advertisement by google

இது காவிரி மட்டுமல்ல… தமிழகத்தில் எல்லா நீர்நிலைகளிலும் நடக்கின்றது..

advertisement by google

தண்ணீரைக் கண்டாலே பழையதை அவுத்துப் போட்டுச் சென்றால் பாவம் குறையும் என யார் கற்றுத் தந்தது..?

வஸ்திர தானம் தான் செய்யச் சொல்லி இருக்கிறார்களே தவிர, பழையதை அவிழ்த்து விட்டு நீர்நிலைகளை மாசுபடுத்தச் சொல்லவில்லை…

தண்ணீரை நாம் தாயைப் போல வணங்குகின்றோம். அந்தத் தாய்க்கு நீங்க செய்யும் மரியாதை இந்தப் பழை துணி போடுவது தானா..?

நீங்கள் செய்வது பாவம்…உங்களை மட்டுமல்ல உங்கள் வருங்கால சந்ததிக்கும் சேர்த்துப் பாவத்தை சேர்க்குறீங்களே..

அய்யா ஜோதிடர்களே…

நீர்நிலைகள் மாசு தடுப்பது என்பது உங்களுக்கு பெரும்பங்கு உண்டு…

உங்களிடம் வருபவர்களிடம் தண்ணீரில் துணியை கழட்டி விடாதீங்க எனச் சொல்லுங்க…

அதே போல நீர்நிலைகளில் கிடக்கும் துணிகளை எடுத்து சுத்தம் செய்வது பெரும் புண்ணியம் எனச் சொல்லுங்க..

வேட்டி சேலையை கழட்டி விட்னா உங்க குடும்பத்தில் எவனுக்கும் எவளுக்கும் கல்யாணம் ஆகாது…கடன் தொல்லை வரும்…

அட உள்ளாடை எல்லாமா கழட்டி போடுவீங்க. உள்ளாடைகளைக் கழட்டி ஆத்துல போட்டா ஆண்மைக் குறைவு வரும் எனச் சொல்லுங்க….

வேற எவன் சொன்னாலும் கேட்க மாட்டாங்க…

தமிழகத்தில் ஜோதிடர்கள் பேச்ச மட்டும் தான் கேக்குறாங்க மக்கள்…..

எனவே ஜோதிடர்களே நீர்நிலைகளைக் காப்பாற்றுவதில் உங்கள் பங்கு முக்கியம்..

இதில் அடுத்தக் கொடுமை கேவலம் ..

நண்பர்கள் காவிரியை சுத்தப்படுத்தும் போது துணிகளுக்கு இணையாக குப்பையாகக் கிடைத்தது பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின். குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயப்பர் போன்றவை இருந்தால் கூட நியாயம்….ஆனால் காவிரியில் நாப்கின்? கொடுமை…

இந்தக் காவிரி சுத்தப்படுத்தும் காரியத்தில் இதையும் முகம் சுழிக்காமல் அப்புறப்படுத்தி தங்களை ஈடுபடுத்திக் கொண்ட விவேகானந்தா இளைஞர் பேரவைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்….

advertisement by google

Related Articles

Back to top button