இந்தியாகிரைம்மருத்துவம்

மும்பையில் அதிர்ச்சி 53 பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மும்பையில் ஷாக்… 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு- தனிமைப்படுத்தப்பட்டனர்!

advertisement by google

மும்பை: மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. சுமார் 200 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். மும்பையில் கொரோனா உக்கிரமாக இருந்து வருகிறது.
மும்பையில் கொரோனாவால் 132 பேர் நேற்று வரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
மொத்தம் 171 பத்திரிகையாளர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களை சோதனைக்குட்படுத்திக் கொண்டனர். கடந்த 16,17 ஆகிய நாட்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.

advertisement by google

இதுவரை பாதிப்பில்லாத புதுக்கோட்டையிலும் கால் வைத்த கொரோனா.. தப்பி வருவது 2 மாவட்டங்கள் மட்டுமே
இதில் மொத்தம் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் விஜய் கபாலே கூறியுள்ளார். மேலும் இவர்கள் அனைவருக்குமே கொரோனா அறிகுறியே இல்லாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.
தற்போது கொரோனா பாதித்த 53 பேரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த 53 பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னையிலும்..
சென்னையிலும் சில பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செய்தியாளர்கள் சந்திப்புகளையே நிறுத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button