இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

டாஸ்மாக்கில் மதுவாங்க டைம் டேபுள்? முதியவர்களுக்கு மார்னிங்? இளையவர்களுக்கு ஈவ்னீங்?மதுவாங்க நேரம் ஒதுக்கி தமிழகரசு புது அறிவிப்பு?முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கி தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

advertisement by google

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் 45 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடியே இருந்தன.

advertisement by google

இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள், தொழில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

advertisement by google

அது போல் டாஸ்மாக் கடைகளுக்கும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டது.

advertisement by google

இதையடுத்து நேற்று முன் தினம் டெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, சண்டீகர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன.

advertisement by google

அது போல் நம் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கடைகள் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டன.

குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்

மேலும் கோயம்பேடு காய்கறி சந்தையில் கூட்டம் கூடியதை போல் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் கூடினால் அடுத்தது கொரோனா பரப்பும் இடமாக டாஸ்மாக் கடைகள் மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

45 நாட்களுக்கு பிறகு நாளை கடை திறக்கப்படவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி நாளை ஒவ்வொரு டாஸ்மாக் முன்பும் 2 போலீசார் நிற்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்

அது போல் மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:

50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் நாளை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மதுபானங்களை வாங்கலாம். அது போல் 40-50 வயதிற்குள் உள்ளவர்கள் பகல் 1 மணி முதல் 3 மணி வரையும் 40- வயதிற்குள்ளவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதாவது முதியவர்களுக்கு காலையிலும், இளசுகளுக்கு மாலையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்னி வெயில் கொளுத்தும் வேளையில் நேரம் ஒதுக்கியுள்ளதற்கு முதியவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button