இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

மதியவிரிவான செய்திகள்(17.9.2019) தமிழகம் இந்தியா உலகம்

advertisement by google

????விண்மீன்நியூஸ் ? ???: திருப்பூர்: உற்பத்தி இடம் உறுதிச்சான்று பெறும் நடைமுறை, ‘ஆன்லைன்’ மயமாக்கப்பட்டுள்ளன. இதனால், சான்று பெறுவதில் ஏற்றுமதியாளருக்கு ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விலகுகின்றன.பின்தங்கிய, வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் வரிச்சலுகைகள் வழங்கு கின்றன. இச்சலுகை, வளர்ந்த நாடுகளின் இறக்குமதியாளர்களுக்கு கிடைக்கும்.
இறக்குமதியாளர்கள் இச்சலுகை பெற, தங்களது நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் சான்று அளிக்க வேண்டும்.திருப்பூரில், ஏ.இ.பி.சி.,- ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில்வர்த்தக சபை, டெக்ஸ்டைல் கமிட்டி ஆகியவை, உற்பத்தி இடம் உறுதிச்சான்று அளிக்கின்றன.மூலப்பொருளும் கொள்முதல்; இறக்குமதி செய்த மூலப்பொருள் விவரம் என, அனைத்துவகை ஆவணங்களுடன், இம்மையங்களுக்கு நேரடியாக சென்று, சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும்.அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் அமைப்புகள், ஆவணங்களை பரிசோதித்து, ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தி இடம் உறுதிச்சான்று வழங்குகின்றன. நேரடியாக விண்ணப்பிப்பதில், ஏராளமான சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், இந்த சான்று வழங்கும் நடைமுறைகளை, ‘ஆன்லைன்’ மயமாக்கவேண்டும் என்பது ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.இந்த எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல், டிஜிட்டல் உற்பத்தி இடம் உறுதிச் சான்று வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு வர்த்தகர்கள், வளரும், பின்தங்கிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குகின்றன.
பெரும்பாலும், பின்தங்கிய நாடுகளின் பொருட்களுக்கு முழு வரிச்சலுகை; வளரும் நாடுகளின் பொருட்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.இந்த சலுகை, இறக்குமதியாளர்களுக்கு மிகவும் கைகொடுக்கிறது. இவற்றை யெல்லாம் கணக்கிட்டுதான், இறக்குமதியாளர்கள், குறிப்பிட்ட நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வழங்குவர்.இறக்குமதியாளர்கள் இச்சலுகை பெறுவதற்கு, உற்பத்தி இடம் உறுதிச்சான்று அவசியம். நேரடியாக சென்று சான்று பெறுவதில், காலதாமதங்கள் ஏற்படுகின்றன.
குறித்த காலத்துக்குள் உற்பத்தி முடிந்தாலும்கூட, சான்று பெறுவதற்கு தாமதம் ஏற்பட்டால், அது ஏற்றுமதியை பாதிக்கும்.தொழில் துறையினரின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பித்து சான்று பெறும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.அதனால், சான்று பெறுவதில் ஏற்பட்டுவரும் காலதாமதம் நீங்கும். சான்று பெறுவதற்காக செலவிடும் நேரத்தை, உற்பத்தி சார்ந்த வேறு பணிகளுக்கு செலவிடமுடியும். அரசின் இந்த திட்டம், ஏற்றுமதி வர்த்தகத்தை எளிமைப்படுத்தும் ஓர் அம்சமாகவே உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: சென்னை: தலைமை அஞ்சலக அதிகாரி கனகராஜன் வெளியிட்ட அறிவிப்பு:அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் வரும் 25ம் தேதி மாலை 3 மணியளவில் குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. மணியார்டர், பதிவுத் தபால், சேமிப்பு வங்கி முதலிய சேவைகளை பெற்றுவரும் பயனாளிகள் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் வாயிலாகவோ அல்லது doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மின் அஞ்சல் வாயிலாக 22ம் தேதி தலைமை அஞ்சலக அதிகாரி, அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், சென்னை 600 002க்கு குறைதீர்வு முகாம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும். முகாமில் நேரிலும் கலந்துகொள்ளலாம்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: சென்னை: அமெரிக்க மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ், அதிமுக அரசுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியிருக்கிறது. இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ், சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது. தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது எப்ஐஆர் கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: மதுரை : மதுரை பெரியார், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் பணிக்காக அறிவித்த போக்குவரத்து மாற்றத்தை முழுமையாக அமல்படுத்தாததால் கடும் நெரிசல் நிலவுகிறது. அத்துமீறும் அரசு பஸ்களால் வாகன ஓட்டிகளுக்கு தலைவலி தொடர்கிறது.

advertisement by google

மாநகராட்சி சார்பில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் இந்த பஸ் ஸ்டாண்டுகளை இடித்து விட்டு ஒரே பஸ் நிலையமாக கட்டமைக்கும் பணி ரூ.159 கோடியில் நடக்கிறது. இதற்காக டி.பி. ரோடு, மேலவெளிவீதி, டி.பி.கே., ரோடு, கிரைம்பிராஞ்ச், ஹயத்கான் ரோடு ஆகிய 5 இடங்களில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, அலங்காநல்லுார், சோழவந்தான் பகுதிக்கு செல்லும் பஸ்களுக்கு டி.பி., ரோட்டில் (மகபூப்பாளையம்) இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தை புறந்தள்ளிவிட்டு, பெரியார் பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே பஸ்கள் நின்று செல்கின்றன.

advertisement by google

இதனால் இவ்வழியை பயன்படுத்தும் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாமல் நிற்பதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

advertisement by google

நெரிசல் அதிகரிக்கும்
பஸ் ஸ்டாண்ட் பணிக்காக மேலவெளி வீதி ஒரு வாரத்தில் மூடப்படும் என ஜூலையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை அந்த ரோடு மூடப்படவில்லை. ரோடு மூடப்படும் போது ஒட்டுமொத்த வாகனங்களும் பெரியார் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து பாலத்தையொட்டி உள்ள பாதை வழியாக செல்லும் போது இன்னும் கடும் நெரிசல் ஏற்படும். தவிர பழைய விரைவு போக்குவரத்துக்கழக டெப்போவும் கடும் நெரிசலுக்கு வித்திடுகிறது.

advertisement by google

தற்போது அரசு பஸ்களுக்கு டீசல் நிரப்பும் இடமாக இது மாற்றப்பட்டுள்ளது. பகலில் பஸ்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர். இதனால் மேலவெளி வீதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே டீசல் நிரப்பும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். ஆம்னி பஸ்களும் இப்பகுதி வழியே வருவதை தவிர்ப்பது நல்லது. பஸ் ஸ்டாண்டை சுற்றி தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவுகட்ட வேண்டியது அவசியம். மாநகராட்சி, போக்குவரத்து, போலீஸ் அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக டி.பி., ரோடு தற்காலிக பஸ் நிறுத்தத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

advertisement by google

வேகமாக பஸ் ஸ்டாண்டு பணி நடக்க அனைவரும் ஒத்துழைப்பது அவசியம். பொதுமக்களும் பஸ் ஸ்டாண்டு பணிகள் முடியும் வரை, முடிந்த அளவு இந்த வழியே வாகன போக்குவரத்தை தவிர்ப்பது நலம்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

advertisement by google

திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம், கொரடாச்சேரி, பூந்தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் நேரடி சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, கும்பகோணம் ஆகிய பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, அன்னவாசல், ஆலங்குடி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காந்திநகர், காரியாபட்டி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

advertisement by google

சென்னையில் பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தூரம் மழை பெய்தது. இதேபோல் நாகப்பட் டினம், கடலூர், அருப்புக்கோட்டை, சேலம், திண்டிவனம் பகுதிகளிலும் கனமழை வெளுத்துவாங்கியது.

இதற்கிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறினார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனத்தாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் நீதிமன்ற உத்தரவையும் மீறி பேனர்கள் வைக்கப்படுவதோடு, ஏற்கனவே வைக்கப்பட்டவை இன்னும் அகற்றப்படாத நிலைதான் உள்ளது.

சாலையோரங்களில் மக்களின் உயிரை காவு வாங்க காத்திருக்கும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. அரசியல் கூட்டங்கள், மாநாடுகள் மட்டுமின்றி அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்களின் வீட்டு விசேஷங்களுக்கும் அதிகளவில் பேனர்கள் வைக்கப்படுகிறது.

இது குறித்து நீதிமன்றம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த நிலையில் அரசியல்வாதிகளால் வைக்கப்படும் பேனர்களை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடை பிடிக்கின்றனர். இதனால் சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்களால், வாகனங்களில் செல்பவர்கள் கவனச்சிதறலுக்கு ஆளாகி விபத்திற்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

மெத்தனப்போக்கு: இது குறித்துநீதிமன்றம் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாத நிலைதான் இருந்தது. பேனரில் ஜாதிமற்றும் மத ரீதியாக மற்றவர்களின் மனம் புண்படும் வகையில் வாசகங்கள் இடம்பெறுவதால் பல நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் வாகனம் தடுமாறி லாரிக்குள் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து நீதிமன்றம் தடை விதித்தும் அதிகாரிகள் மெத்தனப்போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சாலையோரங்களில் யாருடைய அனுமதியும் பெறாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் அதிகாரிகள் மெத்தன போக்கையே கடைபிடிக்கின்றனர்.

கண் துடைப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டதால் கண்துடைப்பாக சில இடங்களில் மட்டுமே பேனர்கள் அகற்றப்பட்டன. இன்னும் பெரும்பாலான இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது. அதிகாரிகள் உண்மையில்நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுக்கின்றனர். நீதிமன்றம் உத்தரவிட்டும், அதிகாரிகள் அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்வதில்லை.கலெக்டர் வீரராகவ ராவ் இதில் முனைப்பு காட்ட வேண்டும்.

மீண்டும் முளைக்கும்: பல இடங்களில் அகற்றப்படாமல் உள்ள பேனர்களை காட்டி, மீண்டும் பேனர்கள் முளைக்கும். தற்போது அனைத்து அரசியல்கட்சிகளும், பெரும்பான்மை அமைப்புகளும் பேனர் அமைக்க எதிர்ப்புதெரிவித்துள்ளன. அப்படி இருந்தும் மீண்டும் கட்சியினர், தனி நபர் விசேஷங்கள், வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை முழுமையாக அகற்றி துாய்மையாகவும், நேர்மையாகவும், பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: கோவை: தமிழகத்தை ஒட்டிய அண்டை மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 15 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகியவற்றில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான குழந்தைகள், பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், கோவை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறப்பு குழு அமைத்து டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறும்போது, ‘‘தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை ஆய்வு செய்து, ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வகங்களில் டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், டைபாய்டு குறித்த ஆய்வு செய்ய வேண்டும். காய்ச்சல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காணப்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.17) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில்….: சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூரில் 80 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 70 மி.மீ., திருச்சி மாவட்டம் லால்குடியில் 60 மி.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் தலா 50 மி.மீ. மழை
பதிவானது.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: திருச்சி: கடைமடைக்கு காவிரிநீர் வராததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.மேட்டூரிலிருந்து கடந்த மாதம் 13ம் தேதியும், கல்லணையிலிருந்து 17ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. அதேசமயம் கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலந்து வீணானது. இதையடுத்து கடை மடைக்கு வராமல், காவிரிநீரை கடலுக்கு திருப்பி விட்ட எடப்பாடி அரசை கண்டித்தும், தூர் வாருவதில் கொள்ளையை கண்டித்தும் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை மண்டல பொறியாளர் அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று முற்றுகையிட வந்தனர்.

அப்போது அவர்களை, கன்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள், ெதாடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதால் 2 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: மதுரை: மதுரை பாரா கிரிக்கெட் வீரர் ‘சச்சின்’ சிவா 30, செப்., 22ல் நேபாளத்தில் நடக்கும் சர்வதேச பாரா கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.இவர் தமிழக அணி சார்பில் விளையாடிய 120 போட்டிகளில் 80 போட்டிகளில் வென்றுள்ளார்.

2018ல் மேற்குவங்க அணிக்கு எதிராக விளையாடி 64 பந்துகளில் 115 ரன்களை எடுத்து ‘நாட் அவுட் பேட்ஸ்மேன்’ என பெயர் பெற்றார். இது தேசிய அளவில் டி-20 போட்டியில் பாரா கிரிக்கெட் வீரர் நிகழ்த்திய சாதனையாகும்.

சச்சின் சிவா கூறியதாவது: இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பாரா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பை வென்றது. அந்த போட்டிக்கு தேர்வாகிய நான் சில காரணங்களால் பங்கேற்கவில்லை. 2011ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றதை போல தான் இன்று பாரா கிரிக்கெட் போட்டியில் வென்றுள்ளோம். ஆனால், இந்த வெற்றி குறித்து மத்திய, மாநில அரசுகள் பாராட்டவில்லை. பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் கொடுத்து அங்கீகரிக்கவில்லை. மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் வீரர்களால் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.

அம்மா தமிழரசி மளிகை கடை வைத்துஉள்ளார். அப்பா செல்லம் டிரைவராக இருக்கிறார். மனைவி, மகன், மகள் உள்ளனர். பிளக்ஸ் பேனர் டிசைனராக இருந்த நான் அடிக்கடி கிரிக்கெட் போட்டிக்கு சென்றதால் அந்த வேலை பறிபோனது. பொருளாதார வசதி இல்லாததால் என்னால் முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. எனவே அரசு, என்னை போன்ற வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும். பிற வீரர்கள் போல எங்களையும் அங்கீகரிக்க வேண்டும், என்றார்.

இவரை வாழ்த்த 96777 79277.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வர முடியும் என கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் மேலவீதியில் சீர்காழி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன் பேசியது:
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைப் பதவிக்கு வரமுடியும். ஆனால், திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின் ஆகியோர்தான் பதவிக்கு வரமுடியும்.
சாதாரண திமுக தொண்டரால் ஒருபோதும் முதல்வராக முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டும் வகையில், ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்து வருகிறார் என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: புதுடெல்லி: தாமும் வர்த்தகர் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் அவர்களின் வேதனையை புரிந்து கொண்டுள்ளதாகவும், அதே சமயத்தில், டெல்லி மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களால் பொருளாதார மந்தநிலையை பற்றி கவலை கொள்ளவில்லை என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் வர்த்தக மற்றும் தொழில்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: நான் ஒரு வர்த்தகர் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் வேதனை, வலிகள் மற்றும் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டுக்ளளேன். தற்போது வர்த்தகம் “மந்தமாக” உள்ளது. மக்களின் சம்பளம் உயரவில்லை. அதேசமயத்தில் அவர்களின் செலவுகள் அதிகரித்து வருகின்றன. எனினும் அவற்றை உணராத வகையில் டெல்லி மாநில அரசு ஏராளமான ஆதரவை வழங்கியுள்ளது. அதனால் அவர்கள் பொருளாதாரத்தின் மந்தநிலையின் தாக்கத்தை உணரவில்லை.

குறிப்பாக, நாங்கள் 200 யூனிட் வரை மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளோம். இலவச குடிநீரை வழங்கியு–்ளளோம். குடிநீர் நிலுவை கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளோம். தற்போது, பெண்களுக்கு இலவச ​​பேருந்து பயணத்தை அறிவித்துள்ளோம். பொருளாதார மந்தநிலையின் பெரும் தாக்கதில் சிக்கியுள்ளது. அதனை மீட்டுக் கொண்டுர தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் இன்று பல வர்த்தகர்களை சந்தித்தேன். அவர்கள் விற்றுமுதல் சுமார் 30 முதல் 40 சதவிகிதம் குறைந்துவிட்டது என்று என்னிடம் கூறினர். எனினும் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்று நம்புகிறேன். இதனால் வர்த்தகமும் மேம்படும். பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இவ்வாறு கூறினார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: * தமிழக அரசு உத்தரவு

  • வாழ்க்கை இருண்டு போனதாக ஊழியர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 59,405 கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளின் பராமரிப்பு பணியை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளரின் தலைமையில் 41 கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் சாலை புதுப்பிப்பது மற்றும் பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர். தற்போது இந்த கோட்டங்களின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த சாலைகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2013-14ல் பொள்ளாச்சி கோட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை பணிகள் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2015-16ல் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர் கோட்டங்களிலும், 20171-8ல் விருதுநகர் கோட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

1564 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகளும், 1382 கி.மீ நீள மாவட்ட முக்கிய சாலைகளும் தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழனிகோட்டத்தில் உள்ள 205 கி.மீ நீள மாநில நெடுஞ்சாலைகளிலும், 302 கி.மீ நீள மாவட்ட முக்கிய சாலைகளிலும் 688 கோடியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு பணிகள் நடந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது இப்பணிக்காக 321.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த நிறுவனம் 5 ஆண்டுகள் சாலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வரும் சாலை பணியாளர்கள், சாலை ஆய்வாளர்கள் வேறொரு கோட்டங்களில் பணி அமர்த்தப்படவுள்ளனரா அல்லது அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று சாலை பணியாளர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தஞ்சாவூர் சாலையை தனியாரிடம் ஒப்படைக்கும் பணிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: ஸ்ரீநகர்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த மாதம் 5-ந் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது.

இதனால் அந்த மாநிலத்தில் பதற்றநிலை ஏற்பட்டதால், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பரூக் அப்துல்லா, அவரது மகனும் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா, மற்றொரு முன்னாள் முதல்-மந்திரியான மெகபூபா முக்தி மற்றும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

பரூக் அப்துல்லா 3 முறை காஷ்மீர் மாநிலத்தின் முதல்-மந்தியாக பதவி வகித்து இருக்கிறார். 5 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், 81 வயதான பரூக் அப்துல்லா நேற்று மதியம் திடீரென்று பொது பாதுகாப்பு சட்டத்தின் (பி.எஸ்.ஏ.) கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான நோட்டீஸ் நேற்று மதியம் 1 மணி அளவில் அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீநகர் குப்கார் ரோடு பகுதியில் உள்ள பரூக் அப்துல்லாவின் வீடு சிறையாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்கு அவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இந்த பொது பாதுகாப்பு சட்டம் பிற மாநிலங்களில் அமலில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை போன்ற சட்டம் ஆகும். இந்த பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை 3 முதல் 6 மாதங்கள் விசாரணை இன்றி சிறையில் வைக்கலாம். பின்னர் இதை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாரமுல்லா தொகுதியின் எம்.பி.யுமான அக்பர் லோனே நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்தநிலையில், பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்த ஆட்கொணர்வு மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் ஆஜரான வக்கீல் அஜ்மல்கான் வாதாடுகையில், “பரூக் அப்துல்லா வீட்டு காவலில் வைக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் அவரைப்பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை. இது தொடர்பான அரசியல் சட்ட நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டதா? என்றும் தெரியவில்லை” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், இதுபற்றி மத்திய அரசிடம் உறுதி செய்து கொண்டு தெரிவிப்பதாக கூறினார். அத்துடன், எந்த மாநாட்டுக்காக பரூக் அப்துல்லா அழைக்கப்பட்டாரோ அந்த மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால் மனு செயலற்றதாகி விட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய பரூக் அப்துல்லாவுக்கு வைகோ உறவினர் அல்ல என்பதால், அவரது மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் துஷார் மேத்தா கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் வைகோ மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், காஷ்மீர் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்ததற்கு அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி அவருக்கு மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ப.சிதம்பரம் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

‘பின்வருபவற்றை என் சார்பாக டுவிட்டரில் பகிருமாறு எனது குடும்பத்தினரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் வெளியிட்டு இருக்கும் அந்த செய்தியில், ‘என் நண்பர்கள், கட்சியை சேர்ந்த சக தலைவர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளை எனது குடும்பத்தினர் என்னிடம் தெரிவித்தனர். எனக்கு 74 வயதாகிறது என்று நினைவூட்டப்பட்டேன். உண்மையில், 74 வயது இளைஞர் என்றுதான் நான் உணர்கிறேன். எனது பலம் அதிகரிக்கிறது. அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைப்போல நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்தே தனது எண்ணம் எல்லாம் இருப்பதாக மற்றொரு பதிவில் அவர் கவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வெறும் ஒரு புள்ளிவிவரமே ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் தெரிவித்து உள்ளது. அதாவது ஆகஸ்டு மாத ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மைனஸ் 6.05 ஆக இருக்கிறது. ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 20 சதவீதத்தை எட்டாத எந்த நாடும் 8 சதவீத ஜி.டி.பி.யை எட்டியதில்லை. இந்த நாட்டை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு கடந்த ஜூன் 24-ந்தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், காஷ்யப், ராஜ்பார், திவார், பிந்த், கும்ஹார் உள்ளிட்ட 17 இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் தலித் பட்டியலில் சேர்க்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களும், கமிஷனர்களும் இந்த சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு தலித் சமுதாயத்தினருக்கான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசும் இதனை விமர்சித்தது. சமூக நீதிக்கான மத்திய மந்திரி தாவர்சந்த் கெலாட் மாநிலங்களவையில் பேசும்போது, “உத்தரபிரதேச மாநில அரசின் இந்த நடவடிக்கை அரசியல்சாசனப்படி அமையவில்லை” என்று கூறியிருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், “இது சட்டவிரோதமானது, அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்பட்டது. 341-வது சட்டப்பிரிவுபடி தலித் பட்டியலில் இதர சமுதாயங்களை சேர்க்கவோ, நீக்கவோ எந்த மாநில அரசுக்கும் அதிகாரம் இல்லை. ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இந்த அதிகாரம் உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர் கோரக் பிரசாத் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதிர் அகர்வால், ராஜீவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த உத்தரவுக்கு தடை விதித்தது. தலித் பட்டியலை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எந்த அரசுக்கும் இந்த அதிகாரம் இல்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

ஏற்கனவே 2005-ம் ஆண்டு முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசும் 11 சமுதாயத்தினரை தலித் பட்டியலில் சேர்த்தது. கோர்ட்டு இதற்கு தடை விதித்ததும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது. பின்னர் மாயாவதி தலைமையில் அமைந்த பகுஜன் சமாஜ் கட்சி அரசு இந்த அறிவிக்கையை ரத்துசெய்தது. அகிலேஷ் தலைமையிலான அரசு மீண்டும் அதனை இணைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: புதுடெல்லி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பினாய் விஸ்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நவீன இந்தியாவை உருவாக்கியதில் இந்தி மொழிக்கு உள்ள முக்கியத்துவத்தை யாரும் மறுக்கவில்லை. இந்தி மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்க ஒரே வழி என்று கூறுவது உண்மை நிலவரம் தெரியாமல் நமது கண்களை மூடிக்கொள்வது போலாகும். தேச ஒருங்கிணைப்புக்கு மகத்தான பங்காற்றிய மற்ற இந்திய மொழிகளை அவமதிக்கும் செயல்.

நாட்டின் உள்துறை மந்திரி நமது அரசியல்சாசனத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. இது மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான தந்திரம். இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இந்தி மொழி பற்றிய கருத்தை திரும்பப்பெறும்படியும் அமித்ஷாவுக்கு நீங்கள் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: ஆசியான் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அரசின் நிதியுதவியுடன் பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை பயில்வதற்கான திட்டத்தை தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
இதில், 3 கட்டங்களாக, மொத்தம் 1,000 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இத்திட்டத்தின் கீழ் பயில்வதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளத்தை எஸ்.ஜெய்சங்கர் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இந்தத் திட்டத்தினால், இந்தியாவும், ஆசியான் நாடுகளும் பரஸ்பரம் பயன்பெறும். செயற்கை நுண்ணறிவு, குறியீடுகளை படிக்கும் இயந்திரங்கள், வினைபுரியும் பொருள்கள், நவீன உற்பத்தி முறை, பயோ மெடிக்கல் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
தில்லி ஐஐடி இந்த திட்டத்தை ஒருங்கிணைக்கும். இத்திட்டத்துக்காக, மனித வள மேம்பாட்டுத் துறை ரூ.300 கோடி செலவிடவுள்ளது. நிகழாண்டில் 250 மாணவர்கள், அடுத்த ஆண்டில் 300 பேர், அதற்கு அடுத்த ஆண்டில் 450 பேர் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
ஆசியான் அமைப்பில், புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
[9/17, 12:53 PM] விண்மீன்நியூஸ்: புதுடெல்லி,

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆராய முந்தைய மோடி ஆட்சிக்காலத்தில், ராஜ்நாத்சிங் தலைமையில் மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. மோடி அரசு மீண்டும் அமைந்த பிறகு, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை தலைவராக கொண்டு குழு மாற்றி அமைக்கப்பட்டது. இக்குழுவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ரமேஷ் பொக்ரியால், ஸ்மிரிதி இரானி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுப்பது பற்றியும், அதற்கான சட்டங்களை வலுப்படுத்துவது பற்றியும் குழு ஆலோசனை நடத்தியது.

மேலும், பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, யோசனைகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button