இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

விண்மீன்நியூஸின் மே-தின தொழிலாளர் தினவாழ்த்துக்கள்?உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாள் மே1??வாழ்த்துகள்?? அனைவருக்கும்?விண்மீன்நியூஸ் cell:9444433119??✍️✍️✍️✍️

advertisement by google

விண்மீண்நியூஸ்:
⚜உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த நாள், மே தினம் என்னும் சர்வதேச தொழிலாளர் தினம் (Labour Day) (மே 1)

advertisement by google

⚜தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day) என்பது மே 1ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. தொழிலாளர் தினத்தின் கொண்டாட்டம் அதன் மூலங்களை எட்டு மணிநேர நாள் இயக்கத்தில் கொண்டிருக்கின்றது. இது எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர பொழுதுபோக்கு மற்றும் எட்டு மணிநேர ஓய்வு ஆகியவற்றை குறிப்பதாகும்.

advertisement by google

⚜உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். பாட்டாளி வர்க்கத்தின் தியாகத்தையும், வலிமையையும் மே தினம் தன்னுள்ளே கொண்டுள்ளது. காலம் காலமாக மறுக்கப்படும் தங்களது உரிமைகள் குறித்து எந்த விழிப்புணர்வு இல்லாமலே இருந்தது தொழிலாளர் வர்க்கம். பல உயிர் தியாகங்கள் அர்ப்பணிப்புகள் ஆர்ப்பாட்டங்கள் ஊடாக இத்தினம் வரலாற்றில் பதியப்பட்டு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கமைய தமது 18 மணிநேர வேலையை 10 மணிநேர வேலையாக குறைக்க வேண்டுமென உலகின் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். அதற்கமைய இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 1830ம் ஆண்டு பிரான்சில் நெசவு தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 15 மணிநேரம் உழைக்க வேண்டி வலியுறுத்தப்பட்டு வந்தனர்.

advertisement by google

⚜அதனையடுத்து கடந்த 1834ம் ஆண்டு ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து நெசவு தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் குறித்த போராட்டங்கள் தோல்விலேயே முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த 1856ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் கட்டிடத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முதன்முதலாக 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வெற்றிபெற்றனர். இதுவே உலக தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 1895ம் ஆண்டிற்கும் 1899ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ரஷ்யாவில் சார் மன்னனின் ஆட்சியின் கீழ் தொழிலாளர்கள் பல இன்னல்களை சந்தித்ததோடு அதனை எதிர்த்து நூற்றுக்கணக்கான வேலைநிறுத்த போராட்டங்களையும் மேற்கொண்டனர்.

advertisement by google

⚜இந்நிலையில் கடந்த 1896ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் புரட்சிக்கு வித்திட்ட தலைவரான லெனின் மே தினம் தொடர்பில் பிரசுரமொன்றினை வெளியிட்டார். அதற்கமைய ரஷ்ய தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களே ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டது. இதனிடையே கடந்த 1832ம் ஆண்டு அமெரிக்காவிலும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட போராட்டங்களையும் நடத்தியிருந்தனர். அதற்கமைய கடந்த 1886ம் ஆண்டு அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள தொழிலாளர்கள் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தினை உருவாக்கினர். இவ்வியக்கம் 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராடியது. அதன் ஒரு கட்டமாக கடந்த 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

advertisement by google

*⚜அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அதற்கமைய குறித்த வேலைநிறுத்தத்தில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். அதில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சியினால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதோடு ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. தொழிலாளர்களின் குறித்த வேலைநிறுத்தம் மற்றும் போராட்ட ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. அதன் தொடர்ச்சியாக மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசாருக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் மோதல் ஏற்ப்பட்ட நிலையில் தொழிலாளர் தலைவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டு, 1886ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் திகதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1887ம் ஆண்டு ஓகஸ்ட் ஸ்பைஸ், எல்பர்ட் பேர்சன்ஸ், எடொல்ப் பிஷர் மற்றும் ஜோர்ச் ஏங்கல்

advertisement by google

ஆகிய தொழிலாளர் தலைவர்களும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 இலட்சம் பேர் கலந்துகொண்டதுடன் அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.*

advertisement by google

⚜இவர்களின் மரணமும் தியாகமும் மே தினம் என்ற உழைக்கும் வர்க்கத்தின் அடையாள தினத்தை உருவாக்கியது. அதற்கமைய கடந்த 1889ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி பாரீசில் சோசலிச தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் ஒன்றுகூடியது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குறித்த ஒன்றுகூடலின் போது கால்மார்க்சின் 8 மணிநேர போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு சிக்காக்கோவில் நடைபெற்ற கொலை சம்பவங்கங்களும் வன்மையாக கண்டிக்கப்பட்டது. இத்தருணத்திலேயே 1890ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அனைத்துலகில் தொழிலாளர் இயக்கங்களை நடத்திட வேண்டுமென அறைகூவல் விடப்பட்டது. அதுவே மே மாதம் முதலாம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக அனுஷ்டிக்க வழிவகுத்தது.

⚜தன் உழைப்பை உலகிற்கு தந்து இரத்தத்தை வேர்வையாக்கி மற்றவர்களின் வாழ்க்கைக்காக தங்களது வாழ்க்கையை அர்ப்பணம் செய்யும் தொழிலாளர்கள் இத்தினத்தில் உலகளாவிய ரீதியில் கௌரவிக்கப்படுகிறார்கள். எனினும் இன்னம் சில நாடுகளில் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள இன்றும் போராடி வருகின்றனர். எவ்வாறெனினும் 18 மணிநேர வேலை செய்வதை எதிர்த்து நாம் 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமென்ற போராட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றிபெற்று இன்று தொழிலாளர் தினத்தை கொண்டாடும்.

⚜உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அதனால், அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தகையப் பெருமையையும், சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டாது, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். உலகில் பலவிதமான அறிவியல் புதுமைகள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவற்றுக்கும் உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பு மிகவும் முக்கியம். வீட்டை உயர்த்திட, நாட்டை உயர்த்திட, நாளைய உலகை வாழ வைத்திட இன்று உழைத்திடும் உன்னதத் தொழிலாளர்களின் கரங்களை போற்ற வேண்டும். எனவே நாம் அனைவரும் ஒன்றினைந்து இன்றைய இரத்தம் சித்தி போராடிப்பெற்ற இந்த மே தினத்தினை தொழிலாளர்களின் எதிர்கால கனவுகளின் கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்தி பிரார்த்திப்போம். அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கும், தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

advertisement by google

Related Articles

Back to top button