இந்தியா

லண்டன் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியில் சிறப்புரை ஆற்ற போகும் ராகுல்காந்தி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்

advertisement by google

புதுடெல்லி,

advertisement by google

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது நடைபயணத்தை சமீபத்தில் காஷ்மீரில் நிறைவு செய்தார். தற்போது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.

advertisement by google

இந்நிலையில் வரும் பிப்.24 முதல் 26 வரை சத்தீஷ்கர் தலைநகர் ராய்ப்பூரில் காங். கட்சியின் மாநாடு நடக்கிறது.

advertisement by google

இதில் வரும் 2024 மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதில் ராகுல்காந்தி பங்கேற்பார் என கூறப்பட்டாலும், இங்கிலாந்து சென்று, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் அங்கு புவிசார் அரசியல், ஜனநாயகம், சர்வதேச உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

advertisement by google

இந்த தகவலை பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி, “புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், ஜனநாயகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களுடன் உரையாட போகிறேன். நான் படித்த கல்லூரிக்கு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

advertisement by google

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், “நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்று உரையாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button