இந்தியாஇன்றைய சிந்தனைமருத்துவம்

அபார்ஷன் ஆன பெண்ணுக்கு கொரானாவும் தொற்றி ஐசியூவில் அனுமதி ?சீரழித்த கொடூரன்? பீகாரில் அதிர்ச்சி -விண்மீன்நியூஸ்

advertisement by google

அபார்ஷன் ஆன பெண்.. கொரோனாவும் தொற்றியதால் ஐசியூவில் அனுமதி.. அங்கு சீரழித்த கொடூரன்.. பீகாரில் ஷாக்!

advertisement by google

பாட்னா: அபார்ஷன் ஆன நிலையில்தான் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் அந்த இளம்பெண்.. திடீரென கொரோனா தொற்று தென்படவும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.. அப்போது கொரோனா வார்டுக்குள் நுழைந்த ஒரு டாக்டரே பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.. இதில் மேலும் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது!

advertisement by google

நாட்டிற்குள் கொரோனாவைரஸ் பரவல் ஊடுருவி அனைவரையும் கிலிக்கு உள்ளாக்கி வருகிறது.. தொற்று பரவலின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. மத்திய அரசு ஊரங்கினை அமல்படுத்தி இதன் தீவிரத்தை கட்டுப்படுத்தினாலும், பாதிக்கப்பட்டோர் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிகள், வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்… தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர்!!

advertisement by google

இந்நிலையில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரை டாக்டரே நாசம் செய்த சம்பவம் பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்துள்ளது.. 25 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து புத்தகயா மாவட்டத்துக்கு கடந்த மாதம் 25-ம் தேதி வந்திருக்கிறார்.. கயாவுக்கு வரும் முன்னரே, லுதியானாவில் தனது 2 மாத கருவை அபார்ஷன் செய்துவிட்டு வந்ததால், ரத்தப்போக்கு அதிகமாக அந்த பெண்ணுக்கு இருந்திருக்கிறது.
அதனால் கயாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி பெண்ணை அவருடைய கணவர் அனுமதித்தார்… அங்கு ஐசியூவில்தான் அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டது.. இந்த சமயத்தில் பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்தன.. எனவே ஏப்ரல் 1-ம் தேதி கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

advertisement by google

அங்கு 2 நாட்கள் சிகிச்சையும் தரப்பட்டது.. பிறகு கொரோனா தொற்று இல்லை என்பதை டெஸ்ட்டுகள் எடுத்து உறுதி செய்யப்பட்டது.. அதற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படவும் வீடு திரும்பிவிட்டார்.. ஆனால் வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒருவித பயத்திலேயே இருந்தார்.. முகம் வெளிறி காணப்பட்டது.. எதனால் நடுக்கம் என்று தெரியாமல் அவரது மாமியார் அதை பற்றி விசாரித்துள்ளார்.

advertisement by google

அப்போதுதான், கொரோனா வார்டில் இருந்தபோது, டாக்டர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்ற அதிர்ச்சிகர தகவலை சொன்னார்.. இதையடுத்து தொடர்ந்து ரத்த போக்கு அதிகமாகிவிட்டது… ஏற்கனவே அபார்ஷன் ஆகி அதிக ரத்தப் போக்கு என்பதால்தான் ஐசியுவிலேயே அனுமதிக்கப்பட்ட நிலையில், டாக்டர் பலாத்காரம் செய்ததில், இன்னும் ஏராளமான ரத்தப்போக்கு ஏற்படவும், ஏப்ரல் 6-ம் தேதி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் கொதித்துபோன உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனில் இதை பற்றி புகார் சொன்னார்கள்.. வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டாக்டரை அடையாளம் காட்ட சொல்லி அவரது மாமியாரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துள்ளனர். எனினும், இதுவரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது.
இதனிடையே, டாக்டர் உடையை அணிந்து கொண்டு 2 பேர் கொரோனா தனி வார்டுக்குள் சென்றுள்ளதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருபவர் என்றும் சொல்லப்படுகிறது.. இந்த ஆஸ்பத்திரியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கொண்டு ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அந்த டாக்டர் யார் என இன்னும் தெரியவில்லை.. அவரை தேடும் பணியும் நடக்கிறது.
கொரோனா வார்டுக்குள்ளேயே பெண்ணை பலாத்காரம் செய்ததும், ரத்த போக்கு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. கொரோனாவைவிட மிக மோசமாக நடமாடும் கொடியன்களை கைது செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் !!

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button