இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடியில் முழுஊரடங்கு – பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடியில் முழுஊரடங்கு – பாதுகாப்பு பணிகளை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார்

advertisement by google

✍கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று மாவட்டம் முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (02.08.2020) ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

advertisement by google

✍காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி இன்று காலை தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு ஆய்வு செய்தார். அப்பகுதியில் தென்பாகம் காவல்நிலையம் சார்பாக கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

advertisement by google

✍ ‘இன்று ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, மாஸ்க், கபசுர குடிநீர் வழங்கி அனுப்பி வைத்தார். சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

advertisement by google

அப்போது காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறுகையில்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 200 இடங்களில் சுமார் 2000 போலீசார் இதுபோல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 7000வழக்குகள் போடப்பட்டு, 3600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இதில் 3400 வாகனங்களுக்கு, வழக்கு போடப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் மீதம் 190 வாகனங்கள் மட்டுமே காவல்துறை வசமுள்ளது எனவும், சட்ட மீறல் செயலில் மீறும் எந்த நபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

advertisement by google

✍இந்த ஆய்வின்போது தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button