இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

காலைநேர மிகுதியான பரபரப்பானசெய்திகள் (17.9.2019)

advertisement by google

??? விண்மீண்நியூஸ் ????✍✍?5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு கிடையாது

advertisement by google

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தற்போது நடைமுறையை தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
[9/17, 11:59 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

advertisement by google

? உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்

advertisement by google

?கர்நாடக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் சந்தனகவுடர் விலகல்
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவையில் பணத்திற்காக கடத்தியவரை மேட்டுப்பாளையத்தில் வைத்து கொலை செய்து புதைத்த 14 பேர் கொண்ட கொலை கும்பலில் 3 பேர் கைது. புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவ பிரேத பரிசோதனைக்குப் பின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது.
கோவை கா.க சாவடியைச் சேர்ந்த மாரிமுத்து, இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் குடும்பத்தகராறு ஏற்பட்டு, அவரது மனைவி இவரைவிட்டுப் பிரிந்து சென்ற நிலையில் மாரியப்பன் அவரது தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மாரிமுத்து அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி மாதக் கணக்கில் வெளியே இருந்து விட்டு பின்னர் அவ்வப்போது வீட்டிற்கு வருவார் என்றும் சிலரிடம் கூட்டு சேர்ந்து பல்வேறு ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதுவரை கூலிக்கு வேலைக்கு சென்று வந்த மாரிமுத்து, பின்னர் கார், பைக் என ஆடம்பர வாழ்க்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட ஒரு கும்பல், மாரிமுத்து கடத்த திட்டமிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாச்சிப்பாளையம் பகுதியில் வைத்து பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளது. பின்னர், கோவில்பாளையம் அருகே கொண்டு சென்று மாரிமுத்துவை தாக்கிய அந்த கும்பல், அங்கு வலியால் மாரி முத்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன் குன்று அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். அதற்கு அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் உதவியுள்ளார்.
இந்த நிலையில், அங்கு வைத்து மாரிமுத்துவை பணம் கேட்டு அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது, இந்த தாக்குதலில் மாரிமுத்து உயிரிழந்துவிடவே, அவரது உடலை அங்கே உள்ள காட்டுப் பகுதியில் குழி தொண்டி புதைத்துள்ளனர். பின்னர் தனது மகன் வீட்டிற்கு ஆறு மாதமாகியும் வராத நிலையில், மகனை காணவில்லை என அவரது தாய் கருப்பம்மாள் கா.கா சாவடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே கோவையில் கடந்த வாரம் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், மாரிமுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்தது. இதனையடுத்து இந்த கொலை சம்பவத்தில் 14 பேர் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சுந்தர் ராஜன், பழனி என்கின்ற பழனிவேல், ஈஸ்வரன் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மாரிமுத்து கொலை செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, புதைக்கப்பட்ட சடலத்தை இன்று குற்றவாளிகள் அடையாளம் காட்டப்பட்டதைத் தொடர்ந்து குமரன் குன்று அருகே அன்னூர் வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவர்களை கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

advertisement by google

பின்னர் தடயங்களை சேகரித்த போலீசார், மருத்துவ பிரேத பரிசோதனைக்குப் பின் அதன் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் உள்ள 11 பேரை பிடிக்க கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்ட இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து உதகை குன்னூர் இரயில்வே பணிமனை முன்பு இரயில்வே ஊழியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

advertisement by google

மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த இந்த ஆர்ப்பாட்டம், இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் இரயில்வே துறையில் சில இரயில்களை தனியார் மையமாக்குவது, பென்சன் தொகையை பங்கு சந்தையில் முதலீடு செய்வது, 30 ஆண்டுகளாக பணிபுரியும் இரயில்வே தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து SRMU மற்றும் ARF சார்பில் குன்னூரில் SRMU தலைவர் ஜான் ஜேவியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இரயில்வே பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர் : உறவினர்கள் சொத்தை அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

advertisement by google

திருப்பூர் எம்.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிங்கப்பெருமாள். அவருக்கு மதுரை எஸ்.கல்லிப்பட்டி பகுதியில் 2 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. இதனை தனது உறவினர்கள் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவர்களிடம் இருந்து தனது சொத்தை காப்பாற்றித் தருவதோடு உயிர் பாதுகாப்பும் வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர்,
திடீரென தன் கையில் கொண்டு வந்திருந்த எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

advertisement by google

?இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை தூக்கிவந்து திருமணம் செய்‌யப்போவதாக 70 வயது முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தமிழக அரசின் அறிவிப்பைக் கண்டித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட இரு வேறு அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்தும் திரும்பப் பெற கோரியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற அமைப்பினர், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பதன் மூலம் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவும், இது தனியார் பள்ளியை ஊக்குவிக்கும் முயற்சி என்றும் முழக்கமிட்டனர். இதனையடுத்து, முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதே போல, தமிழக அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டகேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 30 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?இன்று காலை 10 மணிக்கு மாவீரன் காடுவெட்டி குரு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற உள்ளது

? அரியலூர் மாவட்டத்தில் காடுவெட்டி மாவீரன் காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் திறப்பு விழா இன்று காலை நடைபெற உள்ளது
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????சென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம்

சென்னை: சென்னை சூளைமேட்டில் நடந்த தீமிதி விழாவில் 2 வயது குழந்தை உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தீமிதி விழாவில் தனது சகோதரர் மகன் பரணியை தூக்கிக் கொண்டு தீயில் இறங்கிய கணேசன், கால் இடறி கீழே விழுந்தார். நெருப்பில் விழுந்ததில் தீக்காயம் அடைந்த கணேசன், 2 வயது குழந்தை பரணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????மேன்ஹோல்களை உயர்த்தி அமைக்காததால் பாதாள சாக்கடை இணைப்பு பெற முடியாமல் மக்கள் அவதி

ஆலந்தூர்: ஆலந்தூர் அடுத்த உள்ளகரம், புழுதிவாக்கம் நகராட்சி பகுதி கடந்த 2011ம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சி 168, 169வது வார்டாக மாறியது. நகராட்சியாக இருந்தபோது தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை பணி மாநகராட்சியாக மாறியபின் பொதுமக்கள் போராடியதின் விளைவாக முடிக்கப்பட்டது. இந்த பணி முடிந்த இடங்களில் ஆங்காங்கே மேன்ஹோல்களும் அமைக்கப்பட்டு சாலைகளும் போடப்பட்டது. சாலைகள் அமைத்த போது மேன்ஹோல்கள் அனைத்தையும் மூடிவிட்டனர். தற்போது இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேன்ஹோல்கள் மூடப்பட்டுள்ளாதால், இதனை மேலே உயரத்தி அமைக்க டெண்டர் விடப்பட்டது.

சிலபகுதிகளில் மட்டும் மேன்ஹோல்களை உயர்த்தி அமைக்கும் பணி நடந்தது. ஆனால் சீனிவாசா நகர், ராமலிங்கம் நகர், பாகிரதி தெரு, ராம்நகர் போன்ற பகுதிகளில் இந்தப்பணியினை முடிக்காமல் விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் புதிய இணைப்புக்காக அனுமதி பெற்றவர்கள் மேன்ஹோல்கள் தென்படாததால் இதுவரை இணைப்பு பெறமுடியாமல் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஒப்பந்ததாரர் சரிவர பாதாள சாக்கடை இணைப்புகளை முடிக்கததால் ஆங்காங்கே மேன்ஹோல்கள் உள்வாங்கி காணப்படுகிறது. மீண்டும் இதற்காக தனியாக டெண்டர் விட்டு சில இடங்களில் மேன்ஹோல்கள் உயர்த்தப்பட்டது. ஆனால் சிமெண்ட் பூச்சு சரி வர செய்யப்படாமல் உள்ளது. மேலும் பல இடங்களில் இந்த வேலையும் துவங்கப்படாமல் உள்ளது. எனவே கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் பணிகளை முடிக்க உத்தரவிடவேண்டும்” என்றனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவையில் முதல் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முன்னாள் ஐ.சி.சி தலைவர் என்.சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்து வைத்தார். இதன் மூலம் கோவை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது.

73 மீட்டர் நீள எல்லை பவுண்டரிகள் கொண்ட இந்த மைதானத்தில் அணிகளுக்கு தனித்தனி பெவிலியன், நடுவர்கள், மூன்றாம் நடுவர்கள், போட்டி நடுவர்கள், ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என அனைவருக்கும் அறைகள் உள்ளன. இதில், அமைக்கப்பட்டுள்ள பெவிலியன், சர்வதேச தரத்திற்கு இணையாக கட்டப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பேசிய என்.சீனிவாசன், இதுபோன்ற உயர்தர கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான இடத்தை வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (சி.டி.சி.ஏ) அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

“சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமான கோவை மாவட்டம், தமிழ்நாட்டிற்கு தரமான வீரர்களை உருவாக்கி வருகிறது”. மேலும், பல இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டுகொள்ள இந்த கிரிக்கெட் மைதானம் அடித்தளமாக இருக்கும் என்றார்.
தமிழ்நாடு மற்றும் மாவட்ட கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த மைதானம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று கூறிய அவர், டி.என்.சி.ஏ போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படும் எனவும் விளக்குகள் பொருத்தப்பட்டால் பகலிரவு போட்டிகள் நடத்த உதவிகரமாக இருக்கும் என்றார்.

டி.என்.பி.எல் குறித்து கருத்து தெரிவித்த என்.சீனிவாசன், மாவட்டங்களில் இருந்து பல திறமைகளைக் கண்டறிய டி.என்.பி.எல் அவர்களுக்கு உதவியதாக என்றார். மேலும், வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ள மைதானத்தில், 6 விக்கெட் களம்(பிட்ச்) உள்ளதால் டி.என்.பி.எல் போட்டிகள் நடத்தப்படும் போது வீரர்கள் பயிற்சி பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். வீரர்கள் விளையாட்டில் அதிக உயரத்தை அடைவதற்கு டி.என்.பி.எல் சிறந்த அடித்தளமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு தமிழக வீரர்களை அடையாளம் காண டி.என்.பி.எல் உதவிகரமாக இருப்பதாகவும், இது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மிகப்பெரிய வெற்றியாகும் என்று கூறினார். .
இந்த விழாவில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.லட்சுமிநாராயசாமி, செயலாளர் கௌதமன், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், மகாலிங்கம் மற்றும் தமிழக மாநில மூத்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்

சேலம்: போக்குவரத்து விதி மீறல் அபராதத்தை குறைக்க வலியுத்தி நாடு முழுவதும் வரும் 19ம் தேதி லாரி ஸ்டிரைக் நடக்கிறது. அன்று தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை இயக்க மாட்டோம் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார். மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுபோக, கனரக வாகனங்களுக்கான டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை ஏற்றம், டீசல், சுங்க கட்டண உயர்வு போன்றவற்றால், லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடும் 10 கோடி பேர் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது. லாரி தொழில் நசிவடைய காரணமான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதத்தை குறைக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முடிவெடுத்து அறிவித்துள்ளது.

இதன்படி, அதன் தலைவர் மிட்டல் தலைமையிலான குழுவினர், அனைத்து மாநில லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள், சம்மேளனங்கள் போன்றவற்றுக்கு வரும் 19ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி கடிதம் அனுப்பியுள்ளனர். இது குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, பேக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதத்தை விதித்து வசூலிக்கின்றனர்.

இதனை ராஜஸ்தான், குஜாராத் போன்ற பிற மாநிலங்களில், மாநில அரசு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல், தமிழகத்தில் அபராத தொகையை அரசு குறைத்து அறிவிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மத்திய அரசே குறைத்து அறிவித்திருக்க வேண்டும் என்பதே எங்களது கருத்து. மோட்டார் வாகன சட்ட பாதிப்பு, சுங்கக்கட்டணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி வரும் 19ம் தேதி நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.

இதற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவை அளிக்கிறது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள 4.50 லட்சம் லாரிகளும் ஓடாது. டோல்கேட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கும் நிறுவனங்களாக உள்ளது.
லாரி உரிமையாளர்களை கசக்கி பிழியும் வகையில் செயல்படுகிறது. வருடத்திற்கு 15 சதவீத உயர்வு என்றிருக்கிறது. ஆனால், 6 மாதத்திற்கு ஒருமுறை 10 முதல் 15 சதவீதம் வரை சுங்கக்கட்டணத்தை அதிகப்படுத்தி விடுகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை ஒட்டுமொத்தமாக சுங்கக்கட்டணத்தை செலுத்துகிறோம் என நாங்கள் கூறுவதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

அதற்கு மத்திய அரசும் துணை போவது வருத்தத்தை தருகிறது. ஒவ்வொரு முறையும் மோட்டார் வாகன போக்குவரத்தில் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், அதை ஏற்பதாக ஆகிவிடும். அதனால் தான், நாடு தழுவிய அளவில் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம். இதற்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.

*மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடும் 10 கோடி பேர் வேலையிழக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
*லாரி தொழில் நசிவடைய காரணமான மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அபராதத்தை குறைக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் 19ம் தேதி நடக்கிறது.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?ஈ . வெ . ரா. பெரியார் பிறந்த நாள் இன்று =செப் -17

?பெரியார் தனது இறுதிக் காலம் வரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

?நிற்காத பயணம்! ஓயாத பேச்சு! சளைக்காத உழைப்பு!
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர் : ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக் கழகங்களில் ஆய்வு செய்தவற்றைச் சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த இருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கைப்பேசிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் புரோட்டின் அதிகமிக்க பால் உற்பத்தி செய்யும் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ததாகவும், அவற்றை சேலத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவில் செயல்படுத்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சேர்ந்த பல்கலைக்கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதுகுறித்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்ய இருப்பதாக கூறினார்.

அதே போல், தமிழகத்தின் கால்நடை பல்கலைக் கழகங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகளும் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்வர் என்று தெரிவித்த அவர், சிட்னியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகம் தமிழகத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் அவர்கள் செலவு செய்யவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் தமிழகம் முழுவதும் கேபிள் கட்டணத்தை உயர்த்தி தர கோரிக்கை வைப்பது குறித்து கேள்வி கேட்டபோது, தமிழகத்தில் 21,000 கேபிள் ஆபரேட்டர்கள் தமிழக அரசின் சிக்னலை பெற்று அரசு கேபிளை வழங்கி வருவதாகவும், 6000 கேபிள் ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களின் சிக்னலை பெற்று தனியார் கேபிள் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். அதனால் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கொடுப்பதை அரசு செயல்படுத்த விரும்புவதாகவும் இதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????போக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு

ராஞ்சி: மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் இது
அமலுக்கு வந்தது. ஆனால், அபாரத தொகை அதிகம் காரணமாக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், ‘மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கான அபராதத் தொகையை தளர்த்திக் கொள்ளலாம்,’ மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அபராதத் தொகையை குறைத்தும், தளர்த்தியும் உத்தரவிட்டு வருகின்றன.

இதுவரை குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா மாநிலங்கள் போக்குவித்து விதிமுறை மீறல்களுக்கான அபராதத் தொகையை குறைத்துள்ளன. உத்தரப் பிரதேச அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், ஜார்கண்ட் அரசும், வரும் டிசம்பர் வரை பழைய அபராதத் தொகையையே வசூலிக்க திட்டமிட்டுள்ளளது.இதன்படி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் டிசம்பர் மாதம் வரை போக்குவரத்து விதிமீறல்களுக்கு பழைய அபராதத் தொகையே வசூலிக்கப்படும். இந்த கால கட்டத்தில் புதிய சட்ட திருத்தம் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????இந்தாண்டில் இதுவரை பாக். தாக்குதலில் 21 இந்தியர்கள் பலி

புதுடெல்லி: மத்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படைகளால் நடத்தப்படும் அத்துமீறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், எல்லைதாண்டிய தீவிரவாத ஊடுருவல்களுக்கு ஆதரவு தரும் சம்பவங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் மற்றும் எல்லையில் உள்ள நிலைகளை குறிவைத்து தாக்குதல் உள்ளிட்டவை குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா கவலை தெரிவித்து

வருகிறது. இந்த ஆண்டு எல்லையில் அத்துமீறி 2,050 முறை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில், 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். இந்தியா மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை அழைத்து 2003ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கும்படி கூறி வருகிறது. மேலும், சர்வதேச எல்லை அருகே அமைதியையும், இணக்கமான சூழலையும் அந்நாடு பாதுகாக்க வேண்டும். இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாடோடு செயல்படுகின்றன என்றார்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????தண்டராம்பட்டு அருகே வாணிபக் கிடங்கில் வெயில், மழையில் வீணாகும் அம்மா உப்பு: பொதுமக்கள் வேதனை

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே வாணிபக் கிடங்கில் அம்மா உப்பு மூட்டைகள் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.கூடலூர் சமத்துவபுரம் அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கிருந்து தண்டராம்பட்டு தாலுகாவில் உள்ள 113 நியாயவிலை கடைகளுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில், உப்பு போன்ற ரேஷன் பொருட்கள் லாரி மூலம் தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி, ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, 200க்கும் மேற்பட்ட அம்மா உப்பு மூட்டைகள் வாணிபக் கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் அனைத்து உப்பு மூட்டைகளும் வெளியிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே, உப்பு மூட்டைகள் வீணாகி வருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளிடம் கேட்டபோது, `தற்போது கிடங்கில் போதிய இடவசதியில்லை. எனவே, வெளியிலேயே வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உப்பு மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைத்து மூட்டைகளும் இங்கிருந்து எடுத்து செல்லப்படும்’’ என்றனர்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ?% நெல்லை : சங்கரன்கோவி்லை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கடையடைப்பு நடைபெற்று வருகிறது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

?தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம மழை பெய்து வருகிறது

?அதன் தொடர்சியாக நேற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது

?அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் 11.4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ??????பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: அரசுக்கு குமரி அனந்தன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார். காந்தி பேரவை சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். மேலும், போராட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், விசிக தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சேம.நாராயணன், பி.ஆர்.பாண்டியன், எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து குமரி அனந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:அண்ணா முதல்வராக இருந்த போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் எந்த ஒரு மாநிலத்திலும் மதுவிலக்கு கோரி போராட்டங்கள் நடந்தாலும் அதற்கு ஆதரவாக தன்னுடைய முதல் குரலை எழுப்பினார். தற்போது தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு பூரண மதுவிலக்கு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருந்தாலும் அண்ணாவின் பெயரில் உள்ள கட்சியாக இருப்பதால் ஆளும் அதிமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டுவர நிச்சயம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதற்காகவே, அண்ணாவின் பிறந்த நாளில் நாங்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு கூறினார்.
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ?% ராஜஸ்தானில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ?% தமிழகத்தில் 24 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/17, 12:07 PM] விண்மீண்நியூஸ்2: ?% சென்னை : குரோம்பேட்டை அருகே சிட்லபாக்கத்தில் சிதலமடைந்த மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி சேது (42) என்பவர் உயிரிழந்தார்

════ ?% N҉ e҉ w҉ s҉ ════

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button