இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்வரி விளம்பரங்கள்

ஓய்வுக்கு பிறகு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட சென்னை ராஜீவ்காந்தி பொதுமருத்துவமனை தலைமை செவிலியர் ஜோன்மேரி பிரிசில்லா கொரோனா பாதித்து உயிர் தியாகம் செய்துள்ளார் என்ற உருக்கமான தகவல்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமைச் செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா…..

advertisement by google

ஓய்வுக்கு பிறகு பணி நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில்,

advertisement by google

கொரோனா பாதித்து, உயிரை தியாகம் செய்துள்ளார் என்ற உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன

advertisement by google

கொரோனா பிரச்சினை காரணமாக, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 58லிருந்து, 59ஆக உயர்த்தி, தமிழக அரசு மே 7ல் அரசாணை பிறப்பித்தது.

advertisement by google

இதன்படி, மே 31ல் ஓய்வு பெறுவோர், மேலும் ஓராண்டு பணியில் நீட்டிப்பர். அதேநேரம், கொரோனா பிரச்சினையால், பல அரசு ஊழியர்களுக்கும் ஏற்கனவே பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஏப்ரலில் பணி ஓய்வு பெறவிருந்த ஊழியர்களுக்கு மே 31 வரை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது.

advertisement by google

பதவி நீட்டிப்புஇப்படித்தான், பதவி நீட்டிப்பு பெற்றார், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ஜோன் மேரி பிரிசில்லா. சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் தலைமை நர்சாக வேலை பார்த்தார். இவருக்கு 58 வயதாகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார். ஆனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடந்துவந்ததால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது

எனவேதான், தொடர்ந்து பணியாற்றி வந்தார்.மூச்சுத் திணறல்இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அவருக்கு லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனால், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே 3வது மாடியில் இவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்

அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. அதில் ஜோன் மேரி பிரிசில்லாவுக்கு அந்நோய் தாக்கியிருந்தது உறுதிசெய்யப்பட்டது

நீரிழிவுஇதனால் அவரது குடும்பத்தினர், அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், நோயிலிருந்து மீண்டுவிடுவார் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும் நேற்று இரவு 11 மணியளவில் ஜோன் மேரி பிரிசில்லா உயிரிழந்தார்

இவருக்கு நீரிழிவு நோயும் இருந்துவந்துள்ளது. எனவேதான், அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தியாகம்ஒருவேளை பதவி நீட்டிப்பு பெற்றிராவிட்டால், ஜோன் மேரி ஓய்வு எடுத்துவிட்டு, குடும்பத்தாரோடு, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்திருக்க கூடும். ஆனால், பொதுச் சேவையை அவர் வயது முதிர்வையும், நீரிழிவையும், காரணம் காட்டி புறக்கணிக்கவில்லை. தனது கடமையை செவ்வனேயாற்றி, நோய் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரை இழந்துள்ளார்.. இல்லை, இல்லை. தியாகம் செய்துள்ளார் என்று சொன்னாலும், அந்த வார்த்தைக்கு தகுதியானவர்தான் இந்த செவிலி.

அரசு மருத்துவமனை சேவைசென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்ட பெட்களில் 70% காலியாக இருப்பதாக கூறுகிறது ஒரு புள்ளி விவரம்.

ஒவ்வொரு நாளும், தனியார் மருத்துவமனைகளிலிருந்து குறைந்தது இரண்டு நோயாளிகளாவது சீரியசான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள்” என்கிறார் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, டீன் ஆர்.ஜெயந்தி. தனியார் மருத்துவமனைகள் முக்கியமான கட்டத்தில் நோயாளிகளை கைவிடுகின்றன. ஆனால் அரசு மருத்துவமனைகள்தான் இறுதிவரை போராடுகின்றன. அப்படியான ஒரு மருத்துவமனையின், தலைமை செவிலியராக இருந்து, கடைசிவரை மக்களுக்காக போராடி உயிரை தியாகம் செய்துள்ளார் ஜோன் மேரி பிரிசில்லா.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button