இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அமெரிக்கா உச்சநீதிமன்ற அடுத்த நிலையிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்ற தலைமைநீதிபதியாக தமிழரான ஸ்ரீநிவாசன் நியமனம்?

advertisement by google

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம்.

advertisement by google

இந்த நீதிமன்றத்தின், தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரான ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்

advertisement by google

52 வயதாகும் இவர், தமிழர் என்பது மற்றொரு சிறப்பு.

advertisement by google

கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக, 2013ம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டார். அப்போது, அவர் பதவியேற்பு விழாவில், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

advertisement by google

சண்டிகரில் இருந்த நாட்களில் மன்மோகன்சிங் குடும்பத்திற்கு, ஸ்ரீஸ்ரீநிவாசன் குடும்பம் பழக்கமாம்.தற்போது, அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இது நமது நாட்டில் ஹைகோர்ட் போன்ற அமைப்பு. எனவே, அமெரிக்க ஹைகோர்ட் ஒன்றின் தலைமை நீதிபதியாக இந்திய பூர்வீகத்தை சேர்ந்தவர் பணியாற்றுகிறார் என சொல்ல முடியும். ஸ்ரீ ஸ்ரீநிவாசனின், பூர்வீகம், திருநெல்வேலியாகும். தமிழர் கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதில் மற்றொரு விஷயமும் முக்கியமானது.

advertisement by google

ஏனெனில், இந்தப் பதவிக்கு, தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை. இதுதான் முதல் முறையாகும்.பூர்வீகம் நெல்லை என்றபோதிலும், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்தான் அவர் பிறந்தார்.

advertisement by google

பின்னர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். சட்டம் பயின்ற அவர், பிறகு, அரசு தரப்பு வழக்கறிஞராக பணியை துவங்கினார். முன்னாள், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இவரை கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button