தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் தனிப்படை போலீசாரால் கைது✍️ – ரூபாய் 6.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் தனிப்படை போலீசாரால் கைது – 6.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

✍தூத்துக்குடியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த வாலிபரை தனிப்படையினர் கைது செய்து, 6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தங்கநகைகளை கைப்பற்றியுள்ளனர்.

✍தூத்துக்குடி தாளமுத்துநகர் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு தொடர்ந்து கொள்ளை நடந்தது. இதில் சுமார் 20 பவுன் மதிப்பிலான நகைகள் எல்இடி டிவிகள், செல்போன்கள், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடரும் கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் பரிந்துரையில், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், மகாராஜா, சரண்யா, ஏட்டுகள் ஆறுமுகம், செந்தில், சிலம்பரசன், முத்துப்பாண்டி மற்றும் சுந்தர்சிங் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் டேவிஸ்புரம் பகுதியில் கொள்ளையன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவன் வேலூர் மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை யை சேர்ந்த சாந்தகுமார் மகன் அப்பன்ராஜா (வயது 31) என்பதும், அவர் சென்னையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. மேலும் அவன் மீது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தூத்துக்குடி விவேகானந்தா நகரில் வீடு எடுத்து தங்கியிருந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. தூத்துக்குடியில் தங்கியிருந்த நிலையில் ஏழு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளான். அவனிடம் இருந்து சுமார் 16 பவுன் தங்கநகைகள், 3 எல்இடி டிவிகள், 4 செல்போன்கள், 2 ஹோம் தியேட்டர் மற்றும் கோவில் உண்டியல் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூபாய் 6.50 லட்சம் ஆகும். பிடிபட்ட அப்பன்ராஜாவை தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *