இந்தியாஉலக செய்திகள்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

காலைவிரிவானசெய்திகள்(19.9.2019) மோடியைச்சந்திதார் மம்தா பரபரப்பு

advertisement by google

???விண்மீண்நியூஸ்???????மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன்: மம்தா பானர்ஜி

advertisement by google

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக கூறிய மம்தா பானர்ஜி, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்தும் பிரதமரிடம் விவாதித்தாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

advertisement by google

?©®?
[9/19, 12:01 PM] விண்மீண்நியூஸ்2: ????டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

advertisement by google

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு குர்தா ஒன்றை பரிசாக வழங்கினார். இதனையடுத்து மேற்கு வங்கத்துக்கான மத்திய நிதி ஒதுக்கீடு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை பற்றி மோடியுடன் ஆலோசிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

?©®?
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ உச்சநீதிமன்றத்திற்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம் :

advertisement by google

நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ரவீந்திர பட், ராமசுப்பிரமணியன், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்..
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪திருச்சி : மணப்பாறை அருகே கீரனூர் பக்கிரிகாடு பகுதியில் இளம்பெண் கடத்தல் – 3 பேருக்கு தர்ம அடி

advertisement by google

இளம்பெண்ணை கடத்தி சென்ற போது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் இருந்த 3 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்

advertisement by google

மேலும் தப்பியோடிய 3 பேரை வையம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ இந்தி திணிப்புக்கு எதிராக செப். 20-ல் நடைபெற இருந்த திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் வாபஸ்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் விளக்கத்தை ஏற்று போராட்டம் ஒத்திவைப்பு

இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் குறித்து ஆளுநரிடம் விளக்கினோம்

இந்தி திணிப்பை என்றுமே நாங்கள் எதிர்ப்போம் – ஸ்டாலின்

இந்தி திணிக்கப்படாது என ஆளுநர் பன்வாரிலால் கூறினார் – ஸ்டாலின்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு பேட்டி :

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக 4 பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது, அந்த குழு கடந்த 13ம் தேதி அறிக்கை அளித்தது – நாராயணபாபு

உதித் சூர்யா என்ற மாணவர் முறைகேடாக கல்லூரியில் சேர்ந்ததாக புகார் – நாராயணபாபு

தற்போது மாணவர் உதித் சூர்யா தாம் படிப்பை தொடர இயலாது என கடிதம் அளித்துள்ளார் – நாராயணபாபு

உதித், நீட் தேர்வை எழுதினாரா என விசாரணை நடக்கிறது – மருத்துவ கல்வி இயக்குனர்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் :

சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவருக்கு உதவிய அடையாளம் தெரியாத நபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இபிகோ 419, 420, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் தேனி க.விலக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு..
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ சென்னையில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பான 45 டெண்டர்களுக்கு இடைக்கால தடை :

சென்னை சேர்ந்த மகாதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சி 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு..
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முழு உறுதுணையாக இருக்கும் என்று சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார் – கார்த்தி சிதம்பரம்

நான் எப்படி அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் கைது செய்யப்பட்டேனோ அதே போன்று ப.சிதம்பரமும் கைது செய்யப்பட்டுள்ளார் – கார்த்தி சிதம்பரம்

ப.சிதம்பரத்தை சட்டரீதியில் வெளியே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – கார்த்தி சிதம்பரம்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி மேல்முறையீடு :

நாளை மறுநாள் வெளியாக உள்ள காப்பான் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு – நாளை விசாரணை

தனது கதையை பயன்படுத்தி காப்பான் படம் எடுக்கப்பட்டதால் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மேல்முறையீடு.
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு :

நவம்பர் 16-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் – தேர்தல் ஆணையகம் தெரிவிப்பு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக். 7-ம் தேதி தொடங்குகிறது – தேர்தல் ஆணையகம்..
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪நாடு முழுவதும் லாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் :

சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்

வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஈடுபட்டுள்ளன.

பல மடங்கு உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்கவும், சுங்கக்கட்டணத்தைக் குறைக்கவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்

அகில இந்திய மோட்டார் போக்குவரத்‌து காங்கிரஸ், இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 காசு உயர்ந்து 75.56க்கு விற்பனை

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 20 காசு அதிகரித்து ரூ.69.77க்கும் விற்பனை செய்யப்படுகிறது
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ♨மும்பையில் கனமழை எச்சரிக்கை-அனைத்து பள்ளி கூடங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு

?மகாராஷ்டிராவில் மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

?பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்தும் சிவப்பு நிற எச்சரிக்கையும் (ரெட் அலர்ட்) விடப்பட்டு உள்ளது.

?இதேபோன்று ராய்கட், பால்கர், கோலாப்பூரிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இந்த ஆண்டு இதுவரை 346.76 செ.மீ. மழை பெய்து உள்ளது. மும்பையில் இதுவரை பருவமழை காலத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

?இதனிடையே, கல்வி துறை மந்திரி ஆஷிஷ் ஷெலார் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள முடிவின்படி, மும்பை, தானே மற்றும் கொங்கன் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள் மற்றும் இளநிலை கல்லூரிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை முன்னிட்டு இன்று விடுமுறை விடப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

?இதேபோன்று மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் உள்ள உள்ளூர் நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்திடுவார்கள் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

?மும்பையில் நாளையும் (வெள்ளி கிழமை) கனமழை பெய்யும் என்றும், ராய்காட்டில் மிக மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

♦Friends Social Media
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪#NIGALVU SEITHIGAL :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்

விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் சீதாலெட்சுமி, மகேஸ்வரி அறிவிப்பு
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?⚪ நேற்றிரவு முதல் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை :

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சென்னையில் இடைவிடாத மழை இரவு மட்டும் 58 மில்லி மீட்டர் வரை மழை பதிவு

“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்!” – வானிலை மையம்

திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, அடையார், திருவான்மியூர், கிண்டி, மீனம்பாக்கம் போன்ற இடங்களில் காலையிலும் லேசான மழை
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ♨கோவில் நிலங்களுக்கு பட்டா-தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

?கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

?கோவில் நிலங்களை தனியாருக்கு ஒதுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

?இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

?இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு குறித்து வரும் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

♦Friends Social Media
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ♨கோவை அருகே அட்டகாசம் செய்த யானைகள் விரட்டியடிப்பு

?கோவை அருகே வாளையார், கஞ்சிக்கோடு காட்டில் இருந்து வெளியேறிய 3 யானைகள் ஊருக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தின.

?இதனால் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், வாளையார் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும், டிரம்ப்ஸ் அடித்தும் நேற்று முன்தினம் விரட்டினர்.

?விரட்டப்பட்ட 3 யானைகள் கஞ்சிக்கோடு அருகே கொட்டேக்காடு ஆற்றில் சுகமாக குளியல் போட்டு, நீந்தி விளையாடியபடி வனப்பகுதிக்குள் புகுந்தது. காட்டுக்குள் சென்ற யானைகள் எந்த நேரத்திலும் மீண்டும் ஊருக்குள் வரலாம். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

♦Friends Social Media
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: களம் விரைவு செய்திகள்.
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று வேலைநிறுத்தம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யவும், மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கொண்டு வந்தது.
புதிய சட்டத்தால், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவில் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக அபராதத் தொகை வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வேலைநிறுத்தத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சுமார் 45 லட்சம் லாரிகள் ஓடாது என எதிர்பார்க்கப் படுகிறது. லாரிகள் வேலைநிறுத்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து, ஓலா, உபர் வாடகை கார்களும், தனியார் பேருந்துகள் வேலைநிறுத்ததில் ஈடுபடுகின்றன. பள்ளி வாகனங்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், மாணவர்கள் சிரமம் அடைவதை தவிர்க்க டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?? செப்-19: பெட்ரோல் விலை ரூ.75.56, டீசல் விலை ரூ.69.77

??சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

?? அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.56, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.77 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

?? இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

??ஊடகதளம்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ♨அயோத்தி விவகாரம்- அக்.18-ம் தேதியோடு விசாரணை நிறைவடைந்து நவம்பரில் தீர்ப்பு?

?அயோத்தியில் ராமர் கோயில் –  பாபர் மசூதி தொடர்புடைய சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பங்கிட்டு கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ல் தீர்ப்பளித்தது.

?இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதம் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டு கடந்த ஜூலை வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இதனால், இவ்வழக்கு  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

?இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று 2 மனுதாரர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்தியஸ்தம் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

?இது தொடர்பாக நேற்றைய 26ம் நாள் விசாரணையில் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘மனுதாரர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம். இது விசாரணைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

?பேச்சுவார்த்தையானது தொடர்ந்து ரகசியமாக நடத்தப்பட்டு வரும். தற்போது வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. திட்டமிட்டபடி விசாரணை தொடர்ந்து நடந்தால், அடுத்த மாதம் 18ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதத்தையும் நிறைவு செய்ய முடியும்,’’ என்றார்.

?தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ல் ஓய்வு பெறுகிறார். அதற்குள் இவ்வழக்கில் அவர் தீர்ப்பளிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அக்.18ம் தேதியுடன் விசாரணை முடியும் பட்சத்தில், அயோத்தி வழக்கில் நவம்பரில் தீர்ப்பு வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

♦Friends Social Media
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

உத்தரபிரதேசத்தில், ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை எஸ்சி பிரிவில் சேர்க்க யோகி ஆதித்யநாத் அரசு எடுத்த முடிவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மாநில அரசிடம் பதில் கோரியுள்ளது. இதுபோன்ற முடிவை எடுக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று உயர் நீதிமன்றம் யோகி அரசுக்கு தெரிவித்துள்ளது. எஸ்.டி / எஸ்.சி ஜாதி பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர பாராளுமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் ஹைகோர்ட் தெரிிவித்துள்ளது.உத்தரபிரதேசத்தில், கடந்த பல தசாப்தங்களாக இந்த 17 சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் இருந்து பட்டியல் ஜாதி பிரிவில், சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முந்தைய பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி அரசுகளும் இதை முயற்சித்தன. ஆனால் மாநில அரசின் அதிகாரத்திற்கு வெளியே முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால், அதைச் செயல்படுத்த முடியவில்லை. சமீபத்தில், யோகி அரசு ஜூன் 24ம் தேதியன்று ஒரு ஆணையை வெளியிட்டது . ஓபிசி பிரிவை சேர்ந்த 17 ஜாதிகளை மீண்டும் எஸ்சி பிரிவில், சேர்க்க ஏற்பாடு செய்தது. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்..புதிய கல்வித் திட்டத்திற்கு கமல் கண்டனம் மாவட்டங்களின் டி.எம்-க்கள், இவர்களுக்கு, பட்டியல் சாதி சான்றிதழ்களை வழங்கவும் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னர், இப்போது இந்த 17 ஜாதிகளின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல மாறிவிட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரித்தபோது, ​​நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி ராஜீவ் மிஸ்ரா ஆகியோரின் டிவிஷன் பெஞ்ச் யோகி அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.அரசின் முடிவை நீதிமன்றம் தவறாக கருதுகிறது. இதுபோன்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வருடம் சுமார் 5000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் இருக்கக் கூடிய அனைத்து மொழி பேசும் பெரும்பான்மையான மக்கள் வாழும் நகரம் திருப்பூர். அந்த அளவிற்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் தொழில்தான் பின்னலாடை உற்பத்தி. பின்னலாடையை, ;
ஏற்றுமதி வியாபாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி என இருவகையாக பிரிக்கலாம். இதில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் பின்னலாடை ஏற்றுமதியின் மூலம் 26 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது.

அந்நிய செலாவணி விகிதத்தை அதிகளவில் ஈட்டி தரக்கூடியது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி. அதே 2018-19 ஆம் வருடத்தில் உள்நாட்டு உற்பத்தி மட்டும் சுமார் 21 ஆயிரம் கோடியைத்தான் தாண்டும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். ஆனால், தற்போதைய நிலையில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டிருந்த பனியன் நிறுவனங்கள் தற்போது 12 மணி நேரம் மட்டுமே செயல்பட்டு அதனுடைய உற்பத்தியை குறைத்துள்ளது. நேரிடையாக 6 லட்சம் பேர் , மறைமுகமாக 4 லட்சம் பேர் என சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வந்த திருப்பூரில் சமீப நாட்களில் மட்டும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். 

பின்னலாடை தொழிலில் பெரு நிறுவனங்கள் சுமார் 2000 கம்பெனிகளும் , சிறு குறு நிறுவனங்களாக மட்டும் சுமார் 8000 ஆயிரம் கம்பெனிகளும் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என்பது சுமார் 60% அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள். ஒரு பனியன் உருவாக மொத்தம் 7 நிலைகளை கடந்து உருவாக வேண்டும் என்றும் , ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனியே ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பின்னலாடை ஏற்றுமதிகள் இல்லாதபோது கை கொடுக்க வேண்டிய உள்நாட்டு வியாபாரம் நிலவி வரும் பொருளாதாரா மந்த நிலையால் அதுவும் செயலற்ற நிலையிலேயே உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர் .

நடப்பு ஆண்டின் வியாபாரம் என்பது , 2018-19 ஆண்டுகளை ஒப்பிடும் போது , ஏற்றுமதியும் சரி , உள்நாட்டு வியாபாரமும் சரி சராசரியாக 30% அளவிற்கு குறையும் என கணிக்கின்றனர் உற்பத்தியாளர்கள். பின்னலாடை வியாபாரத்தில் ஆண்டு முழுக்க நடைபெற வேண்டிய மொத்த வியாபாரத்திற்கு நிகராக தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகையின் போது மட்டும் விற்பனை நடக்கும், ஆனால் இந்த வருடம் தீபாவளி நெருங்கி வருகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் பின்னலாடை நிறுவனங்களுக்கு தெரியவில்லை என்றும் வேதனை தெரிவிகின்றனர்.
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

?அரியலூர் மாவட்டம் – கடலூர் மாவட்டம் இரண்டையும் இனைக்கும் வெள்ளாற்று பாலம் கனமழையால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது

?போக்குவரத்து பாதிப்பு பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்

? நேரலை செய்திகள்
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?% சென்னை : மண்ணடி ஐயப்பசெட்டி தெருவில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து ஜெரினா பானு என்ற பெண் பலி

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்

? தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டதில் கொட்டிதீர்த கனமழை

? இதில் அதிக மழை பதிவான நான்கு இடங்கள்

? திருவள்ளூர் – 216 mm

? திருத்தனி – 150mm

? பூண்டி – 206.4mm

? தாமரைபாக்கம் – 154mm
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?% துபாயில் இருந்து விமானத்தில் கடத்திய 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

?% 46 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பஷில் அகமதுவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்

?% 7 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த முகமது சுலைமான் என்பவரிடம் சுங்கத்துறை விசாரணை

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/19, 12:06 PM] விண்மீண்நியூஸ்2: ?% மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 13.000 கன அடியாக குறைந்தது

?% டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது

?% கிழக்கு , மேற்கு கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

════ ?% N҉ e҉ w҉ s҉ ════

advertisement by google

Related Articles

Back to top button