இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்விளையாட்டு

வேலூர் இந்தியாவின் ஓர் சரித்திர பூமி?வேலூரின் சுற்றுலா அதிசயம்? முழு இடங்களின் விளக்கமும் படங்களும் – விண்மீன் நியூஸ் cell:9444433119

advertisement by google

வேலூர் – இந்தியாவின் ஓர் சரித்திர பூமி..!!

advertisement by google

சந்தனம் விளையும் ஜவ்வாது மலை..!!
சாப்பிட்டு ருசிக்க ஆம்பூர் பிரியாணி..!!
சுற்றுலா தலமாய் ஏலகிரி மலை..!!

advertisement by google

வேலூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை மற்றும் அதில் உள்ள கோவிலாகும். இது பெருமளவு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகும். வேலூரில் பாலாறு மற்றும் பொன்னாறு ஆகிய 2 ஆறுகள் இங்கு ஓடுகின்றன. இங்கு உள்ள சர்ச் ஒன்று பழைய இடுகாடு ஒன்றில் கட்டப்பட்டுள்ளது. மாவீரன் திப்பு சுல்தான் கிபி1799இல் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி ஒருவரின் கல்லறை எங்கு உள்ளது இந்த நினைவிடம் கிபி 1806 நடந்த’ வேலூர் கழகத்திற்கு’ சாட்சியாக உள்ளது. மாவீரன் திப்பு சுல்தான் இரண்டாவது மகன் தலைமையில் நடந்த இந்த விடுதலை எழுச்சி ஆற்காட்டில் இருந்து சென்ற ஆங்கிலேயரின் அதிரடிப்படையால் தான் முறியடிக்க முடிந்தது. வேலூர் சென்னையிலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வேலூரின் மொத்த பரப்பளவு 6,077 சதுர கிலோமீட்டர்.

advertisement by google

ஏலகிரி மலை :

advertisement by google

கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஜவ்வாது மலையில் மனதைக் கவரும் வகையில் நான்கு மலைகளுக்கு இடையில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 920 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஏலகிரி மலையில் 14 கிராமங்களில் வாழும் தொல்குடியினர் விவசாயம், தோட்டக்கலை, காடு வளர்ப்பு முதலான தொழில்களில் ஈடுபடுகின்றனர். இவர்களது வாழ்க்கை முறை தனித்தன்மையுடனும், சடங்குகள், குடில்கள், தேவாலயம் தொல்குடி, நவீன பூங்கா இவைகள் அனைத்தும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மிகவும் கவரும் விதத்தில் இருக்கின்றன. விடுமுறைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் இங்கு கண்டுகளிக்க பல இடங்கள் உள்ளன. இங்குள்ள முருகன் கோயிலில் ஆடி மாதத்தின் போது திருவிழாக் கோலம் பூணுகிறது. இங்கு ஆயுர்வேத மூலிகைப் பண்ணை ஒன்று உள்ளது.. இங்கு குழந்தைகள் பூங்கா, பிராணிகள் காட்சிசாலை ஆகியவை குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. எங்கு கிடைக்கும் மறை பொருட்களை வாங்கி செல்லலாம்.

advertisement by google

வேலூர் கோட்டை :

advertisement by google

வேலூர் என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது வேலூர் கோட்டை ஆகும். இக்கோட்டையின் பிரதானமாக உள்ள கோட்டை மேடையானது, வட்ட கோபுரங்கள், செங்கோண மாடங்கள் போன்றவற்றால் சீரற்ற இடைவெளிகளை கொண்டுள்ளது. கோட்டை சுவர்கள் உட்பொருந்தும் செங்கோண கற்களால் கட்டப்பட்டது. இவற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது பின்னால் வந்த ஆங்கிலேயர்களின் பொறியியல் பணிகள் இவன் என்று நிச்சயமாகக் கூறலாம். கோட்டையைச் சுற்றி வரும் குறுகிய படிகள் வழியே கோட்டையின் நுழைவாயிலை அடையலாம். கோட்டையின் பிரதான சுவர், கருங்கற்களால் ஆன கட்டுறுதியான சுவர். சாந்து பூச்சு இல்லாமல் இந்த சுவர் கட்டப்பட்டுள்ளது. வெளிச்சுவரில் சில இடங்களில் கோட்டைச் சுவரில் நடப்பதற்கான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு புறத்தில் கோட்டைக்காவலர் நிற்பதற்கான பட்டி இருப்பதுடன் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பக்கங்களில் இரண்டு சிறிய கண்காணிப்பு கோபுரங்களும் உள்ளன. இக்கோட்டையின் பழைய வாசல், பல கதவுகளுடன், சாலை வழியும், அதை தற்காக்கும் இழுவைப் பாலமும் கொண்டுள்ளது. இந்த வாசல் 18ம் நூற்றாண்டில் திருத்தி அமைக்கப்பட்டு காலாட்படையினரால் காட்டப்பட்டது. கோட்டையைச் சுற்றி அகழியும் அதற்குச் செல்லும் கீழ் வழிகளும் உள்ளன. இவை எல்லாவற்றையும் வைத்து பார்த்தான் வேலூர் கோட்டை எந்த அளவு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம். கோட்டையை சூழ்ந்துள்ள அகழியின் நீளம் 8000 அடியும் 20 அடி வரையிலும் உள்ளது. தற்பொழுது இக்கோட்டையும் கோவிலும் A.S.I. என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில்1921-ல் வந்தது. இக்கோட்டையின் வெளிப்புற நீளம் 2500 அடி, அகலம் 1500 அடி ஆகும். வெளிப்புற மதிலின் உயரம் 30 அடி, அகலம் 25 அடி ஆகும்.

advertisement by google

தொகுப்பு : விண்மீன்நியூஸ்

ஜலகண்டேஸ்வரர் ஆலயம் :

ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரரைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையும் மிகப்பெரிய மகா மண்டபமும் வடக்கு முகம் நோக்கிய நடராஜர் சிலையும் இன்னும் பல குலதெய்வங்களும் இக்கோயிலில் உள்ளன. இக்கோயிலில் உள்பிரகாரம் வெளிப் பிரகாரம் என இரு பிரகாரங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிற்கால விஜயநகர கட்டடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண்களில் கலைநயத்துடன் மண்டபத்தின் மேற்கூரையில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அக்கால கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை வேலை திறனுக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளன.

வேலூர் சிறைச்சாலை :

வேலூர் சிறைச்சாலை 19.3.1867-ல் 160 கைதிகளுடன் துவங்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் பெரிய சிறைச்சாலை. இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்த வினோபாபாவே, கர்மவீரர் காமராஜர் போன்ற தேச பக்தர்களும் மொழி போராட்டத்திற்கு தலைமை தாங்கிய அறிஞர் அண்ணாவும் இருந்த சிறப்பு பெற்ற சிறைச்சாலை இது. ஆங்கிலேய ஆட்சியின்போது அந்தமானுக்கு அடுத்தபடியாக மிகக் கொடிய சிறைச்சாலையாக கருதப்படுகிறது. இங்குள்ள கடுங்காவல் கைதிகளின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இந்த சிறைச்சாலை செலவுகள் ஈடு செய்யப்படுகின்றன. வழக்கு விசாரணை செய்திகள் மற்றும் நாவல் செய்திகளுக்கு என்று சிறைச்சாலை ஒன்று இதனுடன் இணைந்து உள்ளது. காவல் செய்திகளுக்காகவும், விசாரணைக்கு எங்களுக்காகவும் துணை சிறை ஒன்று மத்திய சிறைச்சாலை உடன் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆற்காடு :

ஆற்காடு என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆற்காடை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அரசர்கள். இங்குள்ள கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோட்டை சவுத்கானால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 8 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டது. இது திப்புசுல்தான் படையெடுப்பின் போது அளிக்கப்பட்டது. இது தேன்இந்தியாவை கைப்பற்ற கிபி 1751ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் முதலாவதாக கைப்பற்றப்பட்ட தற்காப்பு கோட்டை இது.

அமிர்தி விலங்கியல் பூங்கா :

அமிர்தி விலங்கியல் பூங்காவில் பலவகைப்பட்ட பறவைகளும் விலங்குகளும் இந்த பூங்காவில் உள்ளன. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சலும், சந்தன மரங்களும் மற்றும் பிற மதங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. வேலூரில் இருந்து இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ஜவ்வாது மலைத்தொடரின் கீழ்ப்புறமும் அமிர்தி ஆற்றங்கரையில் இந்த விலங்கியல் பூங்கா உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 25 ஏக்கர். இங்கு ஒரு அழகான அருவியும் உள்ளது.

மணிக்கூண்டு :

மணிக்கூண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதவி பதவி ஏற்றதின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த 22 ஆங்கிலேயே படை வீரர்களாகவும் அர்ப்பணிக்கப்பட்ட மணிக்கூண்டு இது.

தென்னிந்தியத் திருச்சபை :

இந்தப் பழமையான திருச்சபை ஆற்காடு மாவட்டத்திற்கு வந்த அமெரிக்க கிறித்தவ திருச்சபை குழுவால் நிறுவப்பட்டது இந்த தேவாலயம். இது 150 ஆண்டுகள் பழமையான இந்த திருச்சபை ஆற்றுப்படுகை முன்னால் அமைந்துள்ளது. வேலூர் சிப்பாய் கலகத்தின்போது உயிரிழந்த ஆங்கிலேய படைவீரர்கள் இந்த திருச்சபைக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளனர். இந்த படைவீரர்களின் இடுகாட்டை பராமரிக்க ஆங்கில அரசு தேவாலயத்திற்கு தனி அதிகாரத்தை வழங்கியது.

ஜவ்வாது மலைத்தொடர் :

இது கிழக்கு மலைத் தொடரில் உள்ளது. சந்தன மரங்களுக்கும், பழ மரங்களுக்கும் புகழ்பெற்ற ஜவ்வாது மலைகளின் முக்கிய கிராமம் ஜமானமரத்தூர். அடர்ந்த காட்டில் இருக்கும் பீமன்மடவு அருவியும், காவலூர் வானிலை ஆய்வு மையமும் இதன் அருகில் உள்ளன.

எருக்கம்பட்டு :

எருக்கும்பட்டு வள்ளிமலைக்கும் மேல் பாடிக்கும் நெருத்தமாக அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறிய ரெங்கநாதர் கோவில் ஏரிக்கரையில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் தோண்டியபொழுது கிடைத்த உடைந்த ஆனால் அழகிய போகசயன மூர்த்தி சிலை உருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இது மத்திய சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அரசு அருங்காட்சியகம் :

இந்த அருங்காட்சியகத்தில் பழமையான பொருட்கள் மற்றும் அபூர்வமான பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன காந்தவியல், நிலவியல், கலை பொருட்கள், தொல்பொருளியல், தாவரவியல், புவியியல் ஆகியவை இங்கு வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி வடஆர்க்காடு மாவட்டத்தில் கிடைத்த வரலாற்றுச் சின்னங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காவேரிபாக்கம் :

காவேரிப்பாக்கம் அணைக்கரை கட்டியவன் பல்லவப் பேரரசு சேர்ந்த மூன்றாம் நந்திவர்மன். காவேரிப்பாக்கம் ஏரி நீளம் 8.35 கிலோ மீட்டர் ஆகும். இது இம்மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி ஆகும்.

கைலாசகிரி :

கைலாசகிரியில் முருகன் ஒரு சிறிய மலையின் மீது. இக்கோயில் சுற்றுப்புறத்தில் சிற்றோடைகள் உள்ளன. நவாப் காலத்தைச் சேர்ந்தது என்று சொல்லப்படும் கோட்டை சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது. இம்மலையின் மீது இருந்து சுற்றுப்புறத்திலுள்ள நகரின் அழகிய காட்சிகளை காணலாம். இது ஆம்பூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

காஞ்சனகிரி :

காஞ்சனகிரி யிலுள்ள சிவன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு சுயம்புவாக உருவான பல லிங்கங்களை இங்கு காணலாம். இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது ராணிப்பேட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மதராசிய முகமதிய மசூதி :

மதராசிய முகமதிய மசூதியின் வடதிசையில் இதற்கான நுழைவாயில் உள்ளது. இந்த மசூதியின் உச்சி ஒலிபெருக்கிகள் அமைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியின் நான்கு பக்கங்களும் ‘ ஆர்ச்’ எனப்படும் வில்வளைவு அமைந்துள்ளன. இது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இதை நவாப் சந்தா சாகிப் மிகவும் அழகாக காட்டியுள்ளார்.

மகேந்திரவாடி :

மகேந்திரவாடி பல்லவர்களின் குடைவரைக் கோயில்களில் மிகவும் புகழ்பெற்றது. இது கிபி 580 லிருந்து கிபி 630 வரை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவன் கட்டினார். மிகப்பெரிய பாறை ஒன்றின் மீது இக்கோயில் முழுவதும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கர்ப்பகிரகத்தில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரத்தை காண முடியும். இக்கோவில் குணபரன் என்பவரால் உடைந்து செதுக்கப்பட்ட கோயில் பல்லவ கிரந்த கல்வெட்டு கூறுகிறது.

தொகுப்பு : விண்மீன்நியூஸ் 9444433119

மேல்பாடி சமாதி கோயில் :

மேல் மாடியில் உள்ள இக்கோயிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தனது பாட்டனார் அரிஞ்சயன் நினைவாக எழுப்பியதாக கருதப்படுகிறது. இதனால் இக்கோயில் பள்ளிப்படை கோயில் எனவும் இது அழைக்கப்படுகின்றது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் இக்கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் மானியமாக தரப்பட்டுள்ளன. அதன்படி இன்றளவும் அந்த நிலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

மேல்விசாரம் :

மேல்விசாரத்தில் உள்ள மசூதி மிகவும் புகழ் பெற்றதாகும். ஆற்காடு நவாப் காலத்தில் இங்கு ஏராளமான முஸ்லிம்கள் வாழ்ந்தனர். இன்றும் அவ்வழி வந்த இனத்தவர் அங்கு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வூர் இயற்கை எழில் சூழ்ந்த நகரமாக உள்ளது. அப்துல் ஹக்கீம் கல்லூரியும், புதிதாக கட்டப்பட்ட அரபிக் கல்லூரியும் இங்கு உள்ளன.

முத்து மண்டபம் :

விக்கிரம இராஜசிங்கன் என்பவன் கண்டியை ஆண்ட கடைசி தமிழ அரசன் இம்மன்னனின். இன்னொரு பெயர் கண்ணுசாமி மதுரை நாயக்கப் பேரரசின் வழி வந்தவன். 16 ஆண்டுகள் போரிட்டவன். 1815-ல் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டான். வேலூர் சிறையில் 1832-ல் இம்மாவீரன் சிறையிலேயே மரணமடைந்தான். மன்னனின் கல்லறை 1983-ல் கண்டுபிடிக்கப்பட்டது. விக்ரம ராஜ சிங்கன் மகன் 27.07.1832-ல் இக்கலவையை கட்டியுள்ளான். ராஜசிங்கனின் நினைவாக 1.07.1990-ல் இந்த முத்து மண்டபம் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

பள்ளிகொண்டா :

பள்ளிகொண்டாவில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கிபி பத்தாம் நூற்றாண்டில் விக்கிரம சோழனுக்கு முந்தி ஆட்சியாளர்களால் கட்டப்பட்டதாக இக்கோயில் பக்கச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த கோயிலில் குலசேகர சம்புவராயன் மற்றும் பல்லவ மன்னனான கம்பவர்மன்ஆகியோர் இந்தக் கோயிலை மேலும் வெளிப்படுத்தினர் என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இடிபாடுகளாக காணப்படும் இடத்தில் ஒரு காலத்தில் பெரிய மதில் சுவருடன் கூடிய கோட்டைக்குள் இருந்ததை அறிய முடிகிறது.

கோட்டை மசூதி :

கோட்டை மசூதி கிபி 1750 ல் கருங்கல்லால் கட்டப்பட்டு முன்புறத்தில் பீரங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இப்பொழுது இங்கு தொழுகை நடப்பதில்லை. இது செங்கோன் வடிவ மசூதி. இந்த மசூதி இந்து கோயில் கட்டிட பானையின் மீது மெல்ல மெல்ல இஸ்லாமியக் கட்டடக் கலை வளர்ந்த இடம். இன்றுள்ள ஏராளமான மசூதிகளும் இந்தோ இஸ்லாமிய பாணியில் அமைந்துள்ளது. இந்த கோட்டை மசூதி இப்போது ஏ.எஸ்.ஐ கட்டுப்பாட்டில் உள்ளது.

பலமாத்தி மலைகள் :

பலமாத்தி மலையில் கட்டப்பட்ட முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த இடம் வேலூரின் புறநகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1800 அடி உயரத்தில் உள்ளது.

ரத்னகிரி :

ரத்னகிரியில் உள்ள முருகன் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இது பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள சிறிய மலையின் மீது அமைந்துள்ள இக்கோயில் வேலூரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தக்கோலம் :

தக்கோலம் தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாகும். கிபி 949- ல் சோழர்களுக்கும் இராஷ்டிரகூடருக்குமிடையே இங்குதான் போர் நடந்தது. இங்கு உள்ள கோயிலை பல்லவ பேரரசர்களால் கட்டப்பட்டது என்றும் பின்பு சோழர்கள் அதை புதுப்பித்து இன்னும் சிறப்பாக கட்டினார்கள் என்று இங்குள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இது ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் அழகிய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் உள்ளன.

செம்பாக்கம் :

செம்பாக்கத்தில் ஸ்ரீ செல்வ விநாயகரும், சோமசுந்தரேஸ்வரரும் கோயில் கொண்டுள்ள புகழ் பெற்ற இடம் இது. இக்கோயிலுக்கு பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இங்குள்ள செல்வ விநாயகருக்கு அபிஷேகமும் பூஜைகளும் திறந்தவெளியில் நடைபெறுவதற்காக சுற்றியுள்ள பிரகாரம் தனித்தன்மையுடன் கட்டப்பட்டுள்ளது. இவ்விடத்தை சுற்றியே செண்பக மரங்கள் நிறைந்து இருந்தது இவ்விடத்திற்கு செண்பக வனம் என்று பெயர். தற்பொழுது அவ்விடத்தில் செண்பக மரங்கள் எதுவும் இல்லை.

திருவலம் :

திருவலத்தில் வீற்றிருக்கும் வல்லநாதிஸ்வரரைப் போற்றி சைவக் குறவர் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. வழக்கமாக சிவனை பார்க்கும்படி அமைந்திருக்கும் நந்தி. இங்கு சிவனைப் பார்க்காமல் எதிர் திசையை பார்ப்பதாக அமைந்திருப்பது இக்கோயிலின் தனித்தன்மை ஆகும். இங்குள்ள பலிபீடத்தின் கீழ் சுரங்க நடைபாதை ஒன்று உள்ளது. இக்கோயிலில் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

சோளிங்கர் :

ஸ்ரீ யோகலட்சுமி நரசிம்மர் சோளிங்கர் மலை மீது 750 அடி உயரத்தில் கோவில் கொண்டுள்ளார். இக்கோயிலுக்குச் செல்ல மலைமீது 1305 படிக்கட்டுகள் ஏறிச் செல்ல வேண்டும். இதுபோன்று இம்மலையின் அருகில் அமைந்துள்ள இன்னொரு மலையில் 350 அடி உயரத்தில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவிலும் மிகவும் புகழ்பெற்றதாகும். இக்கோயிலுக்குச் செல்ல மலைமீது 406 படிகட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இங்கு பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் திருப்பாவை உற்சவ திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா ஆகும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தொலைபேசி எண் 0417-262335, 262258.

தொகுப்பு : விண்மீன்நியூஸ்


திருமால்பூர் :

திருமால்பூரில் உள்ள கோயில் கிபி 907-955ல் ஆட்சி செய்த பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்பது அங்கு உள்ள கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. சிற்பங்கள் இல்லாத இக்கோயிலில் கிபி 10 முதல் 13 நூற்றாண்டு வரையிலான பல சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு சோழ ராணிகள் உட்பட ஏராளமானோர் இக்கோயிலுக்கு அன்பளிப்புகளை வாரி வழங்கி உள்ளார்கள்.

விலப்பாக்கம் :

விலப்பக்கத்தில் உள்ள மலையை பஞ்சபாண்டவ மலை என்று அழைக்கிறார்கள். இங்கு மத்திய காலத்தில் சமண மதம் செழித்தோங்கி இருந்த தடயங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள குடைவரைக் கோயில்களில் காணப்படும் சமணர்களின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் சமணர்கள் செல்வாக்குடன் இருந்ததை தெரிவிக்கின்றது.

விரிஞ்சிபுரம் :

விரிஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில் ‘ பாஸ்கர சேத்திரம்’ என்று புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு பங்குனி மாதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுவதால் சூரிய பகவான் இங்கு வழிபடுவதாக ஐதீகம். சம்புவராயர்கள் என்ற குலோத்துங்க சோழனுக்கு கீழிருந்த குறுநில மன்னன்இக்கோயிலின் கருவறை மண்டபத்தை நிர்மாணித்ததாக சொல்லப்படுகின்றது. ஐந்து பிரகாரங்களைக் கொண்டது இந்த கோயில். கருவறை லிங்கத்தில் இடதுபுறத்தில் சிங்கமும் சிற்பம் ஒன்றும் உள்ளது. இக்கோயிலிலுள்ள சிம்ம தீர்த்தம் புனித நீராகக் கருதப்படுகிறது.

வைனுபாப்பு வானிலை மையம் (காவலூர்) :

வைனுபாப்பு வானிலை மையம் ஒரு பழமையான வானிலை மையம் ஆகும். வில்லியம் பெட்டரி என்பவர் கிபி 1786-ல் சென்னை எழும்பூரில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் தனது ஆராய்ச்சிக்காக ஒரு ஆய்வு மையத்தை அமைத்தார். அப்போது அதன் பெயர் மெட்ராஸ் வானிலை ஆய்வு மையம். பின்னர் இது கொடைக்கானலுக்கு நகர்த்தப்பட்டு அங்கு கொடைக்கானல் வானிலை மையம் என்ற பெயரில் 1889 வரை இயங்கியது. இந்த வானியல் ஆராய்ச்சி மையத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். தொலைபேசி 0417-265222, 265255.

வள்ளிமலை :

வள்ளிமலை மத்திய காலத்தில் சமண மதத்தின் முக்கியமாக மையமாக நிகழ்ந்துள்ளது. இங்கு இயற்கை சுனைகள் நிறைந்த பாதுகாப்பான பகுதி. இங்குள்ள ஒரு கல்வெட்டின்படி கிபி 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மேற்கு கங்கை பேரரசின் ராஜம் மல்லா என்ற இளவரசன் இம்மலையில் இயற்கையாக அமைந்த குகையை சமண பள்ளியாக மாற்றியமைத்துள்ளார்.

வெயிலுக்கும் ஜெயிலுக்கும் பேர் போனது மட்டுமல்ல வேலூர்.

சொர்கமே என்றாலும் நம்ம
வேலூரை போல வருமா?

இந்திய இராணுவத்தில் அதிக இராணுவ வீரர்கள் தருகின்ற எங்கள் ஊர் இராணுவப்பேட்டை Raanuvapettai

அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து “சிப்பாய் புரட்சி “செய்த ஊர்.

அறுபத்து நான்காவது நாயன்மார் என அழைக்கப்பட்ட “திருமுருக கிருபானந்த வாரியார் “பிறந்த ஊர் காங்கேயநல்லூர்.

சுதந்திர இந்தியாவின் டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய தேசியக்கொடியை தயாரித்து தந்த ஊர் குடியாத்தம்.

கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம்.

விக்டோரியா மகாராணிக்கு பிரசவம் பார்த்த ஆற்காடு லட்சுமணசாமி முதலியார்.

தமிழ்நாட்டின் முதல் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட வாலாஜாப்பேட்டை.

இந்தியாவின் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரி.

புகழ்பெற்ற ராஜாளி கப்பல்படை விமானதளம் உள்ள அரக்கோணம்.

ஆசியாவின் மிகப்பெரிய வான் தொலைநோக்கி உள்ள ஆலாங்காயம் அடுத்த காவனூர்.

திருக்குறள் தெளிவுரை தந்த டாக்டர்.மு.வரதராசனாரை தந்த வாலாஜாப்பேட்டை அடுத்த வேலம்.

நடிகர்திலகம் சிவாஜிகணேசனை தான் தயாரித்த “பராசக்தி “படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் பிறந்த பூட்டுதாக்கு.

சிந்தனை செல்வர் சி.பி.சிற்றரசுவை தந்த வேலூர்.

“பாட்டுப்பாடவா பார்த்து பேசவா “புகழ் ஏ.எம்.ராஜா பிறந்த கிளித்தான் பட்டறை.

பாடகி வாணி ஜெயராம் சொந்த ஊர் வேலூர்.

டால்மியாபுரத்தை கல்லக்குடியாக்கும் போராட்டத்தில் கலைஞர்.மு.கருணாநிதியோடு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த ஆலாங்காயம் அடுத்த முல்லை சத்தியின் ஊர்.

மனுநீதி நாள் திட்டத்தை அறிமுகப்படுத்திய பத்மநாபன். IAS பிறந்த ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி.

சென்னை வானொலியில் “இன்று ஒரு தகவல் “நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய வானொலி நிலைய இயக்குநர் கோபால் பிறந்த ஆற்காடு.

கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரனின் மாமியார் ஊர் சோளிங்கர்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் நடிகை “குமாரி சச்சு “வை தந்த ஆற்காடு அடுத்த புதுப்பாடி.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் “தேனிசை தென்றல் “தேவாவின் சொந்த ஊர் ஆற்காடு அடுத்த மாங்காடு.

இரண்டு “ஆஸ்கார் அவார்டு “களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு “பீலே “படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை குடியாத்தம் சேகரை தந்த ஊர்.

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அவர்கள் பிறந்த வாலாஜா செங்காடு.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்துக்கும் மாமியார் ஊர்.

முன்னாள் தமிழக முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா பெரும்பாலான ஆடைகள் தந்து அழகு பார்த்த எம்.ஜி.நாயுடு பிறந்த ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு (எ) காந்திநகர்.

சந்தனம் விளையும் ஜவ்வாது மலை.
சாப்பிட்டு ருசிக்க ஆம்பூர் பிரியாணி.
சுற்றுலா தலமாய் ஏலகிரி மலை.
சுவாமிக்கு தங்க கோயில் உள்ள அரியூர்.

சொர்கமே என்றாலும் நம்ம
வேலூரை போல வருமா? ??????


advertisement by google

Related Articles

Back to top button