கல்விதொழில்நுட்பம்

டான்செட் நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்?

advertisement by google


டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம்.

advertisement by google

முதுநிலைப் பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு, ஜனவரி 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

advertisement by google

தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம், மண்டலக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் M.E, M Tech, M Arch, M Plan, MBA, MCA ஆகிய முதுநிலைப் பொறியியல் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் டான்செட் என்ற நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதி வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், டான்செட் தேர்வை எழுதுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 31-ம் தேதி வரை மாணவர்கள் டான்செட் தேர்வு எழுத ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பம் படிவம் www.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுது விரும்பும் மாணவர்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் அவர்களுக்கு 45 சதவீத மதிப்பெண் போதுமானது. டான்செட் தேர்வுகள் பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button