கல்வி

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி 8ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு மாற்றம்! – மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி!✍️ முழுவிவரம்?விண்மீன்நியூஸ்

advertisement by google

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி சிவப்பிரியா என்பவரை மீண்டும் ஏழாம் வகுப்பிற்கு மாற்றியதால், மனம் உடைந்து தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியை சார்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணபெருமாள். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இதில் இவரது இரண்டாவது மகள் சிவப்பிரியா என்பவர் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

advertisement by google

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி சிவப்பிரியாவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் வகுப்பு ஆசிரியர் ஏழாம் வகுப்புக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மாணவியும் பெற்றோருக்கு இது குறித்து சொல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக உடன் படிக்கும் மாணவிகளின் கேலி கிண்டலால் மனம் உடைந்து காணப்பட்ட சிவப்பிரியா, நேற்று இரவு வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கியுள்ளார்.

advertisement by google

காலை பள்ளிக்கு செல்ல மகளை அவரது தாய் எழுப்பிய போது மாணவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் மாணவியை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement by google

இன்னும் 5மணி நேரத்தில் தீர்ந்துபோகும் ஆக்ஸிஜன்! கடலுக்குள் சென்றவர்களின் கதி என்னவாகும்? தேடும் பணி தீவிரம்!

advertisement by google

அரசு பள்ளி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button