கல்வி

மருத்துவர் கனவு,நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 55 வயது விவசாயி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

நீட் தேர்வு எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த 55 வயது ஆடவர்

advertisement by google

மதுரையில் அண்மையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) எழுத பல மாணவர்கள் வரிசையில் காத்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் மற்றவர்களைவிட தனித்து தோன்றினார். 55 வயதான கே. ராஜ்யக்கொடி வரிசையிலிருந்து வெளியேறுமாறு பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டை அவர் எடுத்துக்காட்டிய போது, சுற்றியுள்ள அனைவரும் திகைத்தனர்.

advertisement by google

விவசாயியான ராஜ்யக்கொடிக்கு 1984ல் மருத்துவம் படிக்க தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. பணவசதி இல்லை. அவரால் மருத்துவம் படிக்க முடியவில்லை. இயற்பியல் பாடத்தை தேர்ந்‌தெடுத்தார். பின் குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் கைவிட்டார்.

advertisement by google

பல ஆண்டுகள் கழித்தும், மருத்துவராக வேண்டும் என்ற வேட்கை மட்டுமூ அவரைவிட்டு நீங்கவில்லை. சென்றாண்டு ஒரிசாவில் 64 வயது ஆடவர் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த செய்தி அவருடைய கனவை மீண்டும் தட்டி எழுப்பியது.

advertisement by google

“சென்றாண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டேன். என் இளைய மகன் சென்றாண்டு நீட் தேர்வு எழுதி சிறப்பாக தேர்ச்சியடைந்தான். அவனுக்கு கடலூரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவனை என்னுடைய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன். அவனுடைய புத்தகங்களையும் குறிப்புகளையும் நான் பயன்படுத்திக்கொண்டேன்”, என்று கூறினார் ராஜ்யக்கொடி.

advertisement by google

நீட் தேர்வில் கொடுக்கப்பட்ட இயற்பியல், வேதியியல் தொடர்பான கேள்விகள் சுலபமாக இருந்ததாக ராஜ்யக்கொடி சொன்னார். தான் 460 மதிப்பெண்கள் பெறக்கூடும் என அவர் நம்புகிறார். அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தால், நிச்சயம் அதில் சேர்ந்து தன் கனவை நிறைவேற்றப்போவதாக அவர் உறுதிகொண்டுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button