இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

அமிர்தா பச்சன் தொகுத்து வழங்கிய கோன்பனேகா குரோர்பதியில் பங்கேற்று 1 கோடி பரிசு வென்ற சிறுவன் ரவி மோகன் சைனி இன்று ஐபிஎஸ் அதிகாரி?முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

அன்று ”கோன் பனேகா குரோர்பதி’யில் வந்த சிறுவன்.. இன்று ஐபிஎஸ் அதிகாரியான கதை..

advertisement by google

ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்று 1 கோடி ரூபாய் வென்ற சிறுவன் இன்று ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

advertisement by google

கடந்த 2001 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய “கோன் பனேகா குரோர்பதி” நிகழ்ச்சியில் பங்கேற்ற 14 வயது சிறுவன் ரவி மோகன் சைனி. இந்நிகழ்ச்சியில் ரவியிடம் கேட்கப்பட்ட 15 கேள்விகளுக்கும் அவர் சரியான விடையளித்ததால் அவருக்கு நிகழ்ச்சியின் அதிகபட்சத் தொகையான ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆன நிலையில், தற்போது போர் பந்தர் மாநிலத்தின் எஸ்.பியாக ரவி மோகன் சைனி பொறுப்பேற்றுள்ளார்.

advertisement by google

இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ”பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நான் ஜெய்ப்பூரில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றேன். அதனைத்தொடர்ந்து மருத்துவப் பயிற்சியை நிறைவு செய்த நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக என்னைத் தயார்ப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றேன்.

advertisement by google

எனது தந்தை கடற்படையில் வேலை செய்தார். அவரின் மூலமாகத்தான் எனக்கு காவல்துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. தற்போது போர் பந்தர் மாநிலத்தின் எஸ்.பியாக பொறுப்பேற்பிற்கும் நான் கொரோனா ஊரடங்கு குறித்த வேலைகளைக் கவனித்து வருகிறேன். அங்குச் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

advertisement by google

கடந்த 2014 ஆம் ஆண்டு காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அகில இந்திய அளவில் 461 இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button