இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ராம்லீலா மைதானத்தில் மோடி உரை?குடியுரிமை சட்டம் குறித்து விளக்குவார் என்று எதிர்பார்ப்பு?

advertisement by google

இன்று ராம்லீலா மைதானத்தில் மோடி உரை.. குடியுரிமை சட்டம் குறித்து விளக்குவார் என எதிர்பார்ப்பு.

advertisement by google

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். அப்போது குடியுரிமை சட்டம் குறித்து அவர் விளக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

டெல்லியில் 175 சதுர கி.மீ.க்கும் மேல் பல்வேறு பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத குடியிருப்புகள் கட்டப்பட்டன. இங்கு ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இதில் 1731 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு பட்டா வழங்க அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வந்தனர்.

advertisement by google

இந்த நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று ராம்லீலா மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

advertisement by google

டெல்லியில் சட்டவிரோத குடியிருப்புகளை ஒழுங்குப்படுத்துவது மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் உரிமையை பெறுதவற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. மோடியின் பேரணியை கருத்தில் கொண்டு பல அடுக்குகளை கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை- கமல்ஹாசன்
இந்த விழாவில் மோடி 40 லட்சம் மக்களுக்கு பட்டா வழங்குகிறார். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் அது குறித்து இந்த கூட்டத்தில் பிரதமர் பேசுவார் என தெரிகிறது.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பேரணி, வெள்ளிக்கிழமை வன்முறை நடந்த டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைந்த தூரத்தில் இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button