இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

திருச்சியில் ஒயிட்ரோஸ் பொது நலச் சங்கம் , அஸ்வின் ஹோமியோபதி கிளினிக் இனைந்துகொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 ஓமியோபதி மருத்து வழங்கப்பட்டது?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 ஓமியோபதி மருந்து!

advertisement by google

ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ,அஸ்வின் ஹோமியோ கிளினிக் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஓமியோபதி மருந்தினை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகளால் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்கவும்,
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ (arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, இருமல், தும்மல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் பெரியவர்கள் நான்கு, சிறியவர்கள் இரண்டு மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஓமியோபதி மாத்திரைகள் எடுத்துக் கொண்டபின் 30 நிமிடங்களுக்கு காபி,டீ உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.
இதன் மூலம், சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள ‘ஆரோக்கியம்’ திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது என ஓமியோபதி மருத்துவர் ரகு தெரிவித்து இந்து அறநிலையத் துறை, அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் அலுவலகத்தில் உதவி ஆணையர், செயல் அலுவலர் விஜயராணியிடம் வழங்கினார். ஒயிட் ரோஸ் பொது நல சங்க சங்க தலைவர் சங்கர், இ.ஆர்.பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button