பனைமரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பனைத்தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க விடுதலை சிறுத்தை கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
பனையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பனைத்தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு இளஞ்சிறுத்தைகள் மனு.
மே 30
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, மூலக்கரைப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட எடுப்பல் கிராமத்தை சேர்ந்த தாசன் நாடார் (வயது 62) என்பவர் தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே சோலைகுடியிருப்பு கிராமத்தில் வாழும் சந்தோசம் என்பவருக்கு பனைஏறும் தொழிலுக்காக வந்திருந்தார். மே 22 அன்று காலையில் பதனீர் எடுக்க பனையேறிய நிலையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு எண் 90/2020.
அன்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பின் அவரது சொந்த கிராமமான எடுப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பனையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த ஏழை பனைத்தொழிலாளி தாசன் என்பவரது குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் வழியாக அல்லது தமிழக முதல்வர் நிவாரண நிதி கிடைத்திட உரிய வழிவகைகள் மேற்கொள்ள வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் சார்பில் உயர்திரு. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு பதிவுத்தபால் (Registered Post) அனுப்பினோம்.
இளஞ்சிறுத்தைகளின் மாவட்ட துணை அமைப்பாளர் இராவணன், திருச்செந்தூர் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சுந்தர் ஆகியோருடன் இணைந்து இப்பணியில் ஈடுபட்டோம்.
தமிழக அரசே!
மாவட்ட நிர்வாகமே!
பனையேறும் தொழிலாளர்களுக்கு நவீன இயந்திரங்களை வழங்கி அவர்களின் உயிரைப் பாதுகாத்திடு!
இவண்
சு.விடுதலைச்செழியன்
மாவட்ட அமைப்பாளர் – இசிஎபா
விசிக, தூத்துக்குடி தெற்கு