இந்தியாதமிழகம்

ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருக்கும் வரை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது – நிர்மலாதேவியின் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

advertisement by google

பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருக்கும் வரை பேராசியர் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது என நிர்மலாதேவியின் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார்.

advertisement by google

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிர்மலா தேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை.

advertisement by google

வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 27ஆம் தேதி மூவரும் ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலாதேவிக்கும் அவரது குடும்பத்திற்கும் அரசியல் மிரட்டல்கள் இருப்பதாக கூறினார். மேலும், பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநராக இருக்கும் வரை பேராசியர் நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணை நடைபெறாது குற்றம்சாட்டினார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button