இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் தலைவர் A.P.K பழனிச் செல்வம் தலைமையில்கொரனா நிவாரண நிதி 4லட்சம் ரூபாய்,அமைச்சர் கடம்பூர்ராஜீவிடம் வழங்கப்பட்டது முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

கோவில்பட்டி வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டில் அமைக்கப்பட்டு இருந்த கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கபாதை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்;ந்து கோவில்பட்டி ஸ்ரீ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரிவினை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்;. கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் ரூ 4லட்சம் முதல்வர் நிவராண நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ.சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிசெல்வம், மருத்துவர் வெங்கடேஷ், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரைப்பாண்டியன், கோவில்பட்டி பால்நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் ராமசந்திரன் என்ற தாமோதரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜெமினி(எ) அருணாச்சலசாமி, பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் சுய ஊரடங்கினை கடைபிடிக்க வேண்டும், உலக பேரிடராக இருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் பாதிப்பு பணிகளுக்கு தான் எம்.பி. எம்.எல்.ஏக்கள் நிதி பயன்படுத்தபட உள்ளது. இதில் யாருடைய உரிமையும் பறிக்கப்படவில்லை.நிதிகளை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்த மத்திய மாநில அரசு முடிவு செய்துள்ளது.வேறுபாடின்றி அனைவரும் ஒத்துழைத்து , இந்தப் பேரிடரில் இருந்து மனிதனர்களை காக்க பணியாற்ற வேண்டும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து முதல்வரும் அந்த துறை அமைச்சரும் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும்,

advertisement by google

மத்திய அரசினை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விமர்சனம் செய்தது குறித்து கேட்டதற்கு இது விமர்சனம் செய்யும் நேரம் கிடையாது. நல்ல ஆலோசனைகளை வழங்கலாம்,மக்களை காக்க வேண்டிய பொறுப்பில் அரசு உள்ளது.தொழில் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புக்களை தாண்டிதான் அரசு மக்களுக்கு நிவாரணம் அடுத்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறதுஇந்த நேரத்தில் இது விமர்சிப்பது என்பது சரியான கருத்து கிடையாது என்றும், நடமாடும் அம்மா உணவகங்கள் அமைப்பது சாத்தியமில்லாது, மக்களின் கூட்டத்திற்கு ஏற்ப அம்மா உணவகத்தில் உணவு தயாரித்து கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button