இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து தமிழகரசின் டாஸ்மாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

தமிழகத்தில் மதுக்கடை மூடலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துஉள்ளது..

advertisement by google

மூடியது மூடியதாகவே இருக்கட்டுமே, அப்பீல் செய்யாதீங்க” என்று தமிழக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ஆன்லைன் மூலம் இந்த மேல்முறையீட்டுக்கான நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

advertisement by google

டாஸ்மாக் திறந்த முதல் நாளே சமூக விலகல் கடைப்பிடிக்கப்படவில்லை.. சமூக விலகலுக்காகவே குடையை எடுத்து வர வேண்டும் என்று சொன்னால், அந்த குடைக்குள் பாட்டில்களை நிரப்பி கொண்டு போன குடிமகன்கள்தான் அதிகம்.

advertisement by google

சரக்கு வாங்கி அங்கேயே திறந்து குடித்துவிட்டு, கடைமுன்னாடியே விழுந்து கிடந்தவர்களும் ஏராளம்..

advertisement by google

சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, வட்டம், சதுரம் என டிசைன் டிசைனாக படம் வரைந்து அதற்குள் குடிமகன்களை நிற்க சொன்னால், தள்ளுமுள்ளு, மோதல், நெருக்கி தள்ளுதல் வரை சென்றது..

advertisement by google

இதை பார்த்த பாதுகாப்பு போலீசார் சில இடங்களில் தடியடியும் நடத்தினர்.. ரகளை செய்து ரத்தம் சொட்ட சொட்ட கையில் பாட்டிலும், வாயில் சிரிப்புமாய் நடந்து போன குடிமகன்களும் உண்டு

advertisement by google

இதுதொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது எடுத்து வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையில், ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக் கூடாது, ஆன்லைனில் வேண்டுமானால் மது விற்பனை செய்துகொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

advertisement by google

இது தமிழக அரசுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது..

கடையை திறந்த அடுத்தநாளே கோர்ட் இப்படி சொல்லும் என எதிர்பார்க்கவே இல்லை.. ஆனால் கோர்ட்டின் இந்த உத்தரவை திமுக, தேமுதிக, பாஜக, என கட்சி பாகுபாடில்லாமல் அனைவருமே வரவேற்றுள்ளனர்.

எனினும் ஹைகோர்ட்டின் உத்தரவை மீறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய போவதாக ஒரு தகவல் கசிந்தது.. இதற்கு காரணம் இந்த 2 நாளில் அரசு கண்ணெதிரே பார்த்த லாபம்தான்.. முதல் நாளிலேயே ரூ.172 கோடிக்கு மது விற்பனையானது…

2-வது நாளான நேற்று 122 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது…

இந்த 2 நாட்களில் மொத்தம் 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல.. 2 நாளில் இந்த வருமானம் என்றால் ஊரடங்கு முடிய இன்னும் 8 நாள் இருக்கிறது.. அந்த கணக்கையும் சேர்த்தால் எப்படியும் ஆயிரம் கோடி ரூபாயை எட்டிவிடும். ஏற்கனவே நிதி இல்லாமல் நெருக்கடியில் தத்தளித்து வரும் மாநில அரசு இப்படி ஒரு வருவாயை இழக்க விரும்புமா என்பது சந்தேகம்தான்

எம்மாடியோவ்.. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் இரு நாட்களில் வசூல் ஜோர்.. மதுரைக்கு முதலிடம்

இந்த நிலையில் அப்பீலுக்கான வேலைகளை டாஸ்மாக் நிறுவனம் செய்து வருவதாக தெரிகிறது. அதேசமயம், இந்த வழக்கில் தங்களை கேட்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று கேவியட் மனு தாக்கல் செய்ய எதிர்த்தரப்பில் வழக்கறிஞர் ராஜேஷ் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

advertisement by google

Related Articles

Back to top button