இந்தியாதொழில்நுட்பம்

விரைவில் மீட்கப்படும் 40 சுரங்க தொழிலாளர்கள்.. வெளியானது புது அப்டேட்..!!

advertisement by google

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கி உள்ள 40 தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. சார்தாம் சாலையில் உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் வகையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக மீட்புப்படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், மீட்பு பணி முடிய 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜன் குழாய் வைத்து தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன்கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மீட்புப்பணிகள் குறித்து உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்நிலையில் கிட்டதிட்ட 10 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர்.தற்போது தொழிலாளர்களின் மீட்பு பணிகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில் தெரிவித்துள்ளதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்காக 6 அங்குல விட்டம் கொண்ட ஒரு கூடுதல் லைஃப்லைனுக்காக துளையிடும் பணியை என்.எச்.ஐ.டி.சி.எல் நிறைவு செய்துள்ளது.80 மீட்டர் முதல் 150 மீட்டர் வரை பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்பட்டு, சுரங்கப்பாதைக்குள் ஒரு சறுக்குவழியை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ராணுவத்தினர் பெட்டிகளை குவித்து வருகின்றனர். ஏற்கனவே இரண்டு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக 6.4 மீட்டர் வரை வழி ஏற்பட்டுள்ளது.மேலும் ஒரு நாளைக்கு மூன்று முறை குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டு சுரங்கம் தோண்டும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுடன் வீடியோ தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீர் அழுத்தத்தைப் பயன்படுத்தி குழாய்க்குள் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களை மீட்பதற்காக கிடைமட்ட துளையிடல் மூலம் நுண்ணிய -சுரங்கப்பாதைக்கான இயந்திரங்களை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மூலம் ஒடிசாவில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.மும்பை மற்றும் காசியாபாதில் இருந்து ஓ.என்.ஜி.சி வாகனங்கள் துளையிடுவதற்காககொண்டு வரப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளது.இந்த நடவடிக்கையின் மூலமாக 40 தொழிலாளர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்ட உடன் ம் சிகிச்சை அளிக்க, சுரங்க நுழைவுப் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஹெலிகாப்டர் மூலம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button