இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

லாபகரமான சுருள்பாசி வளர்ப்பு தொழில்? 1கிலோ சுருள் பாசி 2500ரூபாயா? தொட்டியில் வளர்ப்பா? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கர் நிலம் இருந்தது. அதில் சுமார் 1 ஏக்கரில் மட்டும் இந்த சுருள்பாசி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகிறேன். 5 தொட்டிகளில் 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரில் செயற்கை முறையில் சுருள்பாசி வளர்த்து வருகிறேன்.

advertisement by google

இதை தினந்தோறும் கண்காணித்து இதன் வளர்ச்சியை ஆய்வு செய்வதற்காக ஓர் லேப் டெக்னீஷியன் இருக்கிறார். இவர் தவிர 4 பணியாளர்களை நியமித்துள்ளேன். இவர்கள் தினந்தோறும் இதன் வளர்ச்சியை ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் இயற்கையான ஆர்கானிக் உரங்கள் செலுத்தப்பட்டு, பாசி வளர்க்கப்படுகிறது.

advertisement by google

அறுவடை செய்து நூடுல்ஸ் போல வெட்டியெடுத்து சூரிய ஓளியில் காய வைத்திருக்கும் சுருள்பாசி.

advertisement by google

இதனை தினசரி அறுவடை செய்ய வேண்டும். இன்று ஓர் தொட்டியில் அறுவடை செய்தால் நாளை மற்றொரு தொட்டி என நான்கு நாள்களுக்கு ஓர் தொட்டியில் அறுவடை செய்து, அதனை சூரிய ஓளியில் நன்கு காய வைத்து பின்பு பொடி செய்து பாக்கெட்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவோம்.

advertisement by google

ஓர் நாளைக்கு ஓர் தொட்டியில் இருந்து மட்டும் சுமார் 15 கிலோ வரை சுருள்பாசி பவுடர் கிடைக்கும். மாதமொன்றுக்கு சுமார் 500 கிலோ வரை கிடைக்கும். 1 கிலோ இன்றைய தேதியில் ரூ. 2500க்கு விற்பனையாகிறது.

advertisement by google

இதற்கு குறைந்தபட்சமாக நான் பத்து லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். பொதுவாக மிகக் குறைந்த முதலீடு, குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் என சிரமமில்லாத தொழில்.

advertisement by google

அதே நேரத்தில் 1 கிலோ சுருள்பாசி பவுடர் பெற குறைந்தபட்சம் ரூ.600 வரை மட்டுமே செலவாகும். போக்குவரத்து, விற்பனை, விளம்பரம் என எல்லாம் தவிர்த்து பார்த்தாலும் இது மிகுந்த லாபமளிக்கும் தொழிலாகும். இதனை கால் கிலோ, அரை கிலோ மற்றும் 1 கிலோ பாக்கெட்களில் பேக் செய்து அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.

advertisement by google

பொதுவாக இந்த சுருள்பாசியில் இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவக் குணங்கள் இருந்தாலும், இதன் மோசமான வாசனை காரணமாக இந்திய மக்களுக்கு இதன்மேல் அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படவில்லை.

ஆனால் வெளிநாட்டினருக்கு இதன் வாசனை பிடிக்கும் என்பதால் அங்கு இது நன்கு விற்பனையாகிறது. மேலும் உடற்பயிற்சிக் கூடங்கள், டயட்டீஷியன்கள், நியூட்ரீஷியன்கள் இதனைத் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கின்றனர் என்கிறார்.

இந்திய சந்தையைப் பிடிப்பதற்காக இந்த சுருள்பாசி பவுடர் மற்றும் நூடுல்ஸ்லில் சாக்லேட் வாசனை போன்ற வாசனைப் பொருள்களைச் சேர்த்து, இதனை இந்திய மக்களின் விருப்ப உணவாகவும் மாற்றும் முயற்சியில் ஆகஸ் ஈடுபட்டுள்ளார்.

பொதுவாக இந்தியா மற்றும் தமிழகத்தில் இது குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், அதிக உணவு உட்கொள்ள முடியாதவர்கள் தங்களின் உடல் நலனை மேம்படுத்திக் கொள்ள இதனை மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்

நல்ல லாபம் தரும் தொழிலான இதனை நமக்கு இருக்கும் இடத்தைப் பொறுத்து நாமே உருவாக்கலாம். ஏன் சொந்தப் பயன்பாட்டுக்காக வீட்டின் மாடியில் கூட இதனை வளர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கான நல்ல ஊட்டச் சத்துள்ள உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

சைவ உணவுப் பிரியர்களுக்கு இது ஏற்ற உணவு. இதில் ஆர்கானிக் சர்டிபைடு உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாடுகளில் தற்போது பெரும்பாலான மக்கள் சைவ உணவுகளையே விரும்புவதால், இது நன்கு விற்பனையாகிறது. மேலும், இவை தற்போது கேப்சூல் வடிவிலும் கிடைக்கிறது.

விற்பனைக்குச் செல்லும் சுருள்பாசி பவுடர் பேக்கெட் எதிர்காலத் திட்டமாக தற்போது நாங்கள் இதனை டேப்லட் வடிவில் விற்பனைக்கு கொண்டு வருவது பற்றியும், இதில் உள்ள நீலப் பொருளின் மருத்துவக் குணம் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் இந்த பாசிப் பொருள்களின் வாசனையை மாற்றுவது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் நிலையான 15 பி2பி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள Prolgae Spirulina supplies நிறுவனம், அண்மையில் அமேசானில் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

“இந்த ஆண்டு இரண்டாம் கட்டமாக ஸ்லோவாக்கியன் முதலீட்டாளரிடம் இருந்து விதை நிதி பெற்றுள்ளோம். இந்த முதலீட்டைக் கொண்டு உற்பத்தியை பெருக்கி, உலகமெங்கும் இருக்கும் ஸ்பைரூலினாவின் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் இதற்கான ஆராய்ச்சிப் பணிகளிலும் இந்த முதலீட்டை செலவிட உள்ளோம்,” என்கிறார் ஆகஸ்.

இவரின் இம்முயற்சிகள் வெற்றி பெற்று விட்டால் இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு என்ற பேச்சுக்கே இடமின்றி போய் விடும். இந்தியா ஆரோக்கியமான வளர்ந்த நாடாகி விடும் என்பதில் ஐயமில்லை.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button