கிரைம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்மருத்துவம்

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது! என் அப்பாவை தொடவிடுங்க, பார்க்க விடுங்க என்று குழந்தைகள் கதறியது மனசை கலங்கடித்தது? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

என் அப்பாவை தொட விடுங்க………

advertisement by google

அப்பா முகத்தை பார்க்கணும்”……

advertisement by google

என்று குழந்தைகள் கதறியது மனசை கலங்கடித்து விட்டது………..

advertisement by google

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது,!!!!

advertisement by google

அவரது மகள் கதறியதை கண்டு எதுவும் செய்ய முடியாமல் அனைவரும் கண்ணீருடன் விழித்தனர்……

advertisement by google

சென்னை மாம்பலம் ஸ்டேசனில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாலமுரளி……

advertisement by google

இவர் என்ஜியரிங் படித்தவர். கடந்த 2000ம் ஆண்டு போலீஸ் துறைக்கு வந்தார்……

advertisement by google

சப் இன்ஸ்பெக்டராக தேர்வாகி தன்னுடைய பணியை தொடங்கியவர்…

இவரது மனைவி பெயர் கவிதா.

2 குழந்தைகள் உள்ளனர்..

மகள் பெயர் ஹர்ஷவர்தனி,

மகன் பெயர் நிஷாந்த்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு ஊரடங்கின்போது பாலமுரளிக்கு தொற்று ஏற்பட்டுவிட்டது..

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிரமான சிகிச்சை தந்தனர்..

சிகிச்சையிலிருந்தபோது இன்ஸ்பெக்டரின் உடல்நலம் ரொம்ப மோசமாகி விட்டது…

அதனால் அவருக்கு விலை உயர்ந்த தடுப்பு ஊசிகளை போட டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர்..

ஆனால் அதன் விலை அதிகம் என்பதால் இன்ஸ்பெக்டர் குடும்பத்தினரால் தடுப்பு ஊசிகளை வாங்கி கொடுக்க முடியவில்லை.

இந்த தகவல் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தெரிய வந்தது.

அவர் உடனடியாக 2.25 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு ஊசிகளை வாங்கி தந்தார்..

ஆனால் அந்த மருந்தை செலுத்திய பிறகும் இன்ஸ்பெக்டரின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை…

பாலமுரளியை காப்பாற்ற முடியவில்லை..

ஆஸ்பத்திரியிலேயே உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

கொரோனால் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததால், காவல்துறையினர் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய பாதுகாப்புடன் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றினர்..

சுடுகாட்டுக்கு உடலை கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது, ஆஸ்பத்திரி முன்பு பாலமுரளியின் குடும்பமே நின்று கொண்டிருந்தது..

மனைவியும், குழந்தைகளும் பாலமுரளியை தொட்டு பார்க்க வேண்டும் என்று கதறினர்..

ஆனால், தொற்று பரவிவிடும் என்பதால், யாரும் தொடக்கூடாது என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அவர்களை தடுத்து கொண்டே இருந்தனர்.

அப்போது ஹர்ஷவர்தனி, அவர்கள் அனைவரையும் தள்ளிவிட்டு, அப்பா முகத்தை பார்க்க துடித்தார்.. “

என்னை விடுங்க.. என் அப்பாவை தொடணும்.. அப்பா முகத்தை பாக்கணும்.. தொட விடுங்க” என்று கதறி கதறி அழுதார்.

ஆனால் மனைவி கவிதாவோ, அந்த அமரர் ஊர்தியை பிடித்தபடி கொஞ்ச தூரம் ஓடி கொண்டே வந்தார்…

மகள் கதறுவதும், கவிதா ஓடுவதையும் கண்டு அங்கிருந்தோர் அவர்களை தடுக்க முடியாமலும், ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தனர்..

போலீசாரே மகள் அழுவதை பார்த்து கண்கலங்கி விட்டனர்!

கொரோனா மரணம் எவ்வளவு கொடூரமாக இருக்கிறது?

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button