என் உயிர் தமிழினமே

22 – 3 – 2023 ; புதன் கிழமை ;
திருக்குறள் ;
அதிகாரம் ; 108 ; கயமை ;
குறள் ; 1071 ;
மக்களே போல்வர் கயவர் , அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்.
விளக்க உரை ;
கயவரும் மனிதரைப்
போலவே இருக்கிறார்கள்
குணங்களால் வேறுபட்ட
இருவேறு வகையார்
இப்படி உருவத்தாலொத்
திருப்பதைப் பிற எங்குங்
கண்டதில்லை ,
அதாவது கெட்ட எண்ணம்
கொண்டவரும் மற்ற
மனிதரைப் போலவே
இருப்பார்கள் ,
இந்த வகையான
ஒற்றுமையை நாம் வேறு
எங்கும் கண்டதில்லை .
நல்லவனும் கெட்டவனும்
உருவத்தால் ஒற்றுமை,
உள்ளவரே.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்
