இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்விவசாயம்

டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்படுகிறதா?வருமானத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியூகம்? அதிர்ச்சியடைந்த பிரசாந்த் கிஷோர்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

இழுத்து மூடப்படுகிறதா டாஸ்மாக் கடைகள்!வருமானத்திற்கு மாற்று ஏற்பாடு! பிரசாந்த் கிஷோரை அதிர்ச்சியடையச் செய்த எடப்பாடி!

advertisement by google

advertisement by google

சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெற முதல்வர் எடப்பாடி அதிரடி திட்டத்துடன் தயார் நிலையில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இது தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மீண்டும் முதல்வரான ஜெயலலிதா தேர்தலில் அளித்த வாக்குறுதி போல் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்தார்.

advertisement by google

அதன் பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறையவில்லை. அதனால் தற்போது ஒட்டு மொத்த டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடி, தமிழக மக்கள் மத்தியில் பேராதரவை பெற அருமையான திட்டத்துடன் தயார் நிலையில் உள்ளார் முதல்வர் பழனிச்சாமி. அரசின் வருமானத்திற்கு மாற்று ஏற்பாடுகளுக்கு குறித்து சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ள முதல்வர் பழனிச்சாமி, அதற்கான வழிமுறைகளையும் தயார்படுத்தியுள்ளார்

advertisement by google

தனியார் மருத்துவமனை, தனியார் பள்ளிகள், கல்லூரி போன்றவற்றில் 30% பங்குகளை அரசுடமையாக்க திட்டமிட்டுள்ளார். இது மதுபான விற்பனையில் வரும் வருமானத்தை விட 3 மடங்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளதால், டாஸ்மாக் கடைகளை மூட தயார் நிலையில் இருக்கிறாராம் முதல்வர் பழனிச்சாமி. இந்த தகவல் திமுக அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காதுக்கு செல்ல, இது நடந்தால் தமிழக மக்கள் பேராதரவை பெற்று விடுவார் எடப்பாடி பழனிசாமி என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார் பி கே.

advertisement by google

இந்நிலையில் எடப்பாடியின் இந்த வியூகத்தை திமுகவிற்கு சாதகமாக மாற்ற முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர், ஊரடங்கு உத்தரவு முடிந்த உடன் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார். அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால் அதற்கு திமுக நடத்திய போராட்டம் தான் காரணம் என்றும், இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்றும் மக்கள் மத்தியில் திமுக பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிரசாந்த் கிஷோர் குழு.

advertisement by google

மதுபான ஆலைகள் பெரும்பாலும் திமுக தலைவர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமானது. தற்போது டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டால் திமுக தலைவர்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும். மேலும் தமிழகத்தில் பள்ளி, கல்லுரி மற்றும் மருத்துவமனைகள் பெரும்பாலும் திமுகவினருக்கு சொந்தமானது. அங்கே இருந்து 30% வருமானத்தை அரசு எடுக்க இருப்பதால் திமுகவினருக்கு மேலும் பலத்த அடி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button