கல்வி

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி பள்ளி வளாகத்தில் 11 மற்றும் 12.5.2023 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்று பயிற்சி✍️ முழு விவரம்✍️ விண்மீன்நியூஸ்

advertisement by google

ஆசிரியர்களுக்கான இரண்டு நாள்கள் ஹார்ட்ஃபுல்னஸ் வே புத்தாக்க பயிற்சி

advertisement by google

கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம பள்ளியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி பள்ளி வளாகத்தில் 11 மற்றும் 12.5.2023 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

advertisement by google

பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் பழனிச்செல்வம் மற்றும் பொருளாளர் ரத்னராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இப்பயிற்சிக்கு பள்ளிக்குழு உறுப்பினர் தாழையப்பன் அவர்கள் தலைமை வகித்து ஆசிரியர்களுக்கான ஹார்ட்ஃபுல்னஸ் வே புத்தாக்க
பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

advertisement by google

பள்ளி முதல்வர் பிரபு வரவேற்றார்.

advertisement by google

நிகழ்ச்சியில் பள்ளிக் குழு உறுப்பினர்கள் பால்ராஜ் மனோகரன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

advertisement by google

21 ஆம் நூற்றாண்டிற்கான சர்வதேச கல்வி ஆணையம், “ஒவ்வொரு நபரின் மனம் மற்றும் உடல், நுண்ணறிவு, உணர்திறன், அழகியல் உணர்வு, தனிப்பட்ட பொறுப்பு மற்றும் ஆன்மீக விழுமியங்கள் – ஒவ்வொரு நபரின் அனைத்து வகையான வளர்ச்சிக்கும் கல்வி பங்களிக்க வேண்டும்” என்பதை ஒரு அடிப்படைப்பயிற்சியாக கொண்டு முதன்மையாக தெளிவாக அமைக்கிறது.

advertisement by google

இதனைக் கருத்தில் கொண்டு ஹார்ட்ஃபுல்னஸ் வே பயிற்றுனர்களான மருத்துவர் துரைராஜ், இதய நிறைவு இளைஞர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சித்திரைச் செல்வன் தொழில் வளனார் இன்ஜினியர் டோனி, பொறிஞர் பெவின் டேனியல், ஓய்வு பெற்ற வாட்டர் போர்டு இன்ஜினியர் ஞானசேகர், விலங்கியல் துறை பேராசிரியர் பாரதி, ஹார்ட் புல்னஸ் பயிற்சியாளர் உமா துரைராஜ் ஆகியோர் பாடம் சார்ந்த கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் இதயப்பூர்வமான நடைமுறைகள், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தரமான கல்வி விளைவுகளுக்கான அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சியை நடத்தினர்.

advertisement by google

இப்பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சங்கீதா நன்றி கூறினார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button