இந்தியாதமிழகம்

ஊரடங்கு கால நெறிமுறை காரணமாக,என்னை நேரில் பார்க்க வர வேண்டாம்! முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

என்னை நேரில் பார்க்க வர வேண்டாம்! முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

advertisement by google

வளர்ச்சிப் பணிக்களை பார்வையிட மாவட்டங்களுக்கு வரும்போது நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம் என தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

advertisement by google

வளர்ச்சித் திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நாளை(ஜூன் 11) திருச்சி, தஞ்சை மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் சேலம் மாவட்டத்திற்கும் செல்லவுள்ளார். இந்நிலையில், கடந்த பயணித்தின் போது அறிவுறுத்தியது போலவே இம்முறையும் திமுக தொண்டர்கள் நேரில் வரவேண்டாம் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில், “திருச்சி – தஞ்சை மாவட்டங்களில் காவிரிப் பாசனப் பகுதிகளில் நடைபெறும் தூர்வாரும் பணிகளைப் பார்வையிடவும், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையினைத் திறந்து காவிரி நீரைக் குறுவை சாகுபடிக்கு வழங்கிடவும் இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறேன்.

advertisement by google

மக்கள் நலன் காக்கும் மற்றொரு பயணமாக, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ளவிருப்பவை முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் அந்தந்த மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் – கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம் என்பதையும், வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என்பதையும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நான் ஏற்கனவே திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததுபோல, கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்யும் நாள்தான் மகிழ்ச்சியான நாளாக – வெற்றிகரமான நாளாக அமையும்.

advertisement by google

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாளொன்றுக்கு 35 ஆயிரத்திற்கும் மேல் இருந்த நோய்த்தொற்று எண்ணிக்கை ஏறத்தாழ சரிபாதியாகக் குறைந்து, 17ஆயிரம் என்கிற அளவிற்கு இறங்கி வந்துள்ளது. எனினும், முழுமையான அளவில் நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க வேண்டியுள்ளது. அதிலும், நான் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மூன்று மாவட்டங்களில் தஞ்சையும் சேலமும் நோய்த்தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள். எனவே, நீங்களும் உங்களில் ஒருவனான நானும் ஊரடங்குக் கால நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நோய்த் தொற்று இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிவிட்டு உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன்” என தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button