இந்தியாதமிழகம்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ,முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

advertisement by google

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை எய்தினார். வயது முதிர்வினால் செந்தமிழன் காலமானார்.

advertisement by google

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயோதிகம் காரணமாக இன்றி காலமானார். சீமானின் அப்பாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

advertisement by google

இதையடுத்து சீமானுக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின், சீமானிடம் தைரியமாக இருங்கள்.. எனது இரங்கலை தெரிவிக்கிறேன். கலங்க வேண்டாம் என்று கூறினார். இதை கேட்ட சீமான் நீங்க என் கூட துணையா இருக்குறது எனக்கு பெருமையா இருக்கு.

advertisement by google

நீங்க என் கூட இப்போ இருக்கிறது எனக்கு ரொம்ப நம்பிக்கையை கொடுக்குது. ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று சீமான் கூறினார். இதை கூறிக்கொண்டு இருக்கும் போதே சீமான் உடைந்து அழுது கண்ணீர்விட்டார்.

advertisement by google

இதை கேட்டதும் ஸ்டாலின் சீமானிடம் தைரியமாக இருங்கள்.. தைரியமாக இருங்கள் என்று கூறினார். இதையடுத்து அப்பாவிற்கு கொரோனா இருந்ததா என்று ஸ்டாலின் சீமானிடம் கேட்டார். இதற்கு சீமான், அப்பாவிற்கு கொரோனா இல்லை, வயோதிகத்தில் இறந்துவிட்டார்.

advertisement by google

அப்பாவின் உடலை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்ய போகிறோம். போன் செய்து இரங்கல் தெரிவித்ததற்கு ரொம்ப நன்றி என்று ஸ்டாலினிடம் சீமான் கூறினார். சீமான் இந்த போன் காலுக்கு பின் அப்படி உடைந்து போய், அப்பாவின் உடல் மீது விழுந்து கண்ணீர்விட்டார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button