இந்தியா

இந்தியா முழுவதும் ஒரேமாதிரியான பாடத்திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை – மத்திய மந்திரி தகவல்?

advertisement by google

♦இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்துக்கு வாய்ப்பு இல்லை – மத்திய மந்திரி தகவல்

advertisement by google

?மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் சில கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

advertisement by google

?அனைத்து பள்ளிகளின் பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை மேம்படுத்த வழிகாட்டவும், உத்தரவு பிறப்பிக்கவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சில் தேசிய பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.

advertisement by google

?கல்வி அரசியல் சாசனத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் இருந்தாலும், பெரும்பான்மையான பள்ளிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

advertisement by google

?எனவே தேசிய பாடத்திட்டத்தில் உள்ள சீரான பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.

advertisement by google

?எனவே நாடு முழுவதும் ஒரே சீரான பாடத்திட்டம் கொண்டுவர வாய்ப்பு இல்லை. மாநில கல்வி ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மாநில கல்வி வாரியங்கள் தேசிய பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒன்று அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் அல்லது தங்கள் சொந்த பாடப்புத்தகம் மற்றும் பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

advertisement by google

?அந்த மாநிலத்தின் தேவைக்கு எது பொருத்தமானதோ அதனை தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button