இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

புள்ளிங்கோ கானாபாடல் 4கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்,வெறும்10 ஆயிரம் செலவில் தயாரிக்கப்பட்டது

advertisement by google

advertisement by google

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளஞர்களால் உருவாக்கப்பட்டது தான் புள்ளிங்கோ;கானா பாடல். 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடந்த மார்ச் மாதம் யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த கானாவை இதுவரை 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து, டிரெண்டாக்கியுள்ளனர்.

advertisement by google

அதன்பிறகு வித்தியாசமான ஆடை அலங்காரம். சிகை அலங்காரத்தோடு வலம் வரும் இளைஞர்களை புள்ளிங்கோ என குறிப்பிட்டு,பல்வேறு மீம்ஸ்கள் வலைதளங்களில் குவிந்தன. அரசியல்வாதிகளும் பிரபலங்களும் கூட புள்ளிங்கோ பாணியில் மீம்ஸ்களில் இடம்பெற தொடங்கிவிட்டனர். அவ்வளவு ஏன் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடலில் கூட புள்ளிங்கோ என்ற வார்த்தை இடம்பிடித்திருந்தது, புள்ளிங்கோ-வை மேலும் வெறித்தனமாக்கியுள்ளது.

advertisement by google

இந்த அளவுக்கு டிரெண்டாகியுள்ள இந்த புள்ளிங்கோ பாடலை உருவாக்கியவர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கானா ஸ்டீபன். தற்போது சில திரைப்படங்களில் கானா பாடகராக பிரபலமாகி வருகின்றார்.

advertisement by google

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி முராஜ் – ஜெயா தம்பதியின் மகனான ஸ்டீபன், பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவர். சிறுவயது முதலே கானா பாடல் மீது ஈர்ப்பு இருந்ததால், இறப்பு நிகழ்வுகளுக்கு சென்று கானா பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.

advertisement by google

பல்வேறு இன்னல்களுக்கு பிறகு ஸ்டீபனின் கானா பிரபலமாகியுள்ள நிலையில், ஒருசில மீம்ஸ்கள் தங்களை காயப்படுத்தியுள்ளதாக சிரித்த முகத்துடன் கூறும் ஸ்டீபன், தனக்கு மிகப்பெரிய கனவு எல்லாம் இல்லை என்றும் தன்னைப் போன்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே லட்சியம் எனவும் கூறியுள்ளார்.

advertisement by google

புள்ளிங்கோ மீம்ஸ் உடை, சிகை அலங்காரம் என்பதை சுட்டிக்காட்டியே வலம் வருவது ஒருபுறம் நகைச்சுவை என்றாலும், இது கானா பாடுபவர்களையும், யாருடைய தனிமனித சுதந்திரத்தையும் கிண்டல் செய்யும் அளவுக்கு போய்விடக்கூடாது என்பது பலரின் கருத்தாக உள்ளது.

advertisement by google

கானா ஸ்டீபன் நேர்காணல்:

advertisement by google

Related Articles

Back to top button