இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

டிரைவிங் லைசன்ஸ் வாங்க கல்வித்தகுதி தேவையில்லை -மத்தியஅரசு அதிரடி

advertisement by google

இனி ஓட்டுநர் லைசன்ஸ் வாங்க கல்வித் தகுதி தேவையில்லை…மத்திய அரசு அதிரடி!!

advertisement by google

தற்போதைய நடைமுறையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8இன் படி, போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

advertisement by google

தற்போதைய நடைமுறையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8இன் படி, போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

advertisement by google

சமீபத்தில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அரியானா மாநிலம் மேவாத் பிராந்தியத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் ஓட்டுனர் தொழிலே வாழ்வாதாரமாக இருப்பதாக தெரிவித்தது. இந்த கல்வித்தகுதி நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியது.

advertisement by google

இதை பரிசீலித்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் லைசன்ஸ் வாங்க குறைந்தபட்ச கல்வித்தகுதியை விட திறமை தான் முக்கியம் என குறைந்தபட்ச கல்வித்தகுதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

advertisement by google

இதற்கான வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும். ஓட்டுநர் உரிமத்திற்கான கல்வித் தகுதியை நீக்குவதன் மூலம் வேலைவாய்ப்பற்ற ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

மத்திய அரசின் இந்த அதிரடியான அறிவிப்பால், கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களுக்கு ஓட்டுனர் வேலை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே சமயத்தில், ஓட்டுனர்களின் திறமையையும், பயிற்சியையும் நன்றாக பரிசோதித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், சாலையில் உள்ள போக்குவரத்து குறியீடுகளின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளும் வகையில், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் கற்றுத்தர வேண்டும் என்றும் அமைச்சகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button