இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்விவசாயம்

அநியாய வட்டி மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் நுண் நிதிநிறுவணங்கள், பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் மாதர் சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார்? முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

அநியாய வட்டி – நெருக்கடி ஏற்படுத்தும் நுண்நிதி நிறுவனங்கள்

advertisement by google

பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் மாதர் சங்கத்தினர் ஆட்சியரிடம் புகார்

advertisement by google

கோவை, வருவாயின்றி நெருக்கடியில் உள்ள மக்களிடம் தவணை காலத்திற்கான நீட்டிப்பை அளித்துவிட்டு நுண்நிதி நிறுவனங்கள் அநியாய வட்டியை வசூலிப்பதாக குற்றம்சாட்டி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

advertisement by google

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 25 ஆம்தேதி முதல் தற்போதுவரை ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால் இயல்பான பணிக்கு சென்று வருவாயை ஈட்ட முடியாத நிலையில் பொதுமக்கள் உள்ளனர். அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் கூலி என்கிற நிலையில் வீடுகளில் பெண்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கந்துவட்டி, மைக்ரோ ஃபைனான்ஸ் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்களில் இவர்கள் பெற்ற கடனை கட்டுவதில் தற்போது எதிர்பாராத நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். நிதிநிறுவனங்கள் தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டபோதிலும் இந்த காலநீட்டிப்பு காலத்திற்கு அபராதமாக இரண்டு தவணைகள் சேர்த்துக்கட்ட வேண்டும் என்று நுண்நிதி நிறுவனங்கள் நிர்பந்தம் செய்வது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருக்கு தொடர்ச்சியான புகார் வந்ததது.

advertisement by google

நுண்நிதிய நிறுவனங்கள் அரசின் உத்தரவுகளை மதிக்காமல் பெண்கள் அங்கம் வகிக்கும் சுய உதவிக் குழுக்களிடம் உடனடியாக நிலுவை தொகைகளை வட்டியுடன் செலுத்த நிர்பந்திக்கின்றனர். சில இடங்களில் பெண்களிடம் அவகரமான வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். நீட்டிக்கப்பட்ட தவணைகாலத்திற்கு கூடுதலாக இரண்டு தவனைகள் கட்ட வேண்டும் என அநியாய வட்டியை வசூலிக்கின்றனர். ஏற்கனவே எவ்வித வருவாயுமின்றி பெண்கள் வீட்டில் முடங்கிக்கிடக்கின்றன நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் இதுபோன்ற நெருக்கடியை ஏற்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.

advertisement by google

முன்னதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிம் கூறுகையில், *சுயஉதவிக்குழுக்களின் மூலம் பெண்கள் பெற்ற கடன்களை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென்று நெருக்கடி கொடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
*ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் எவ்வித வேலையுமின்றி வருவாயுமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பெற்ற கடனை உடனே கட்டச்சொல்வது, வட்டிக்குமேல் வட்டியை நிர்ணயிப்பது போன்றவை சட்டவிரோதமான நடவடிக்கை. உடனடியாக இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.
*மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு முழுமையாக இயல்பு நிலை திரும்பும் வரையில் தவனை காலத்தை நீட்டிக்கப்பட வேண்டும்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button