இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

காலை விரிவான செய்திகள்(22. 9.2019)Flash மோடி தமிழகம் வருகை

advertisement by google

????விண்மீண்நியூஸ்????பிரதமர் நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி சென்னை வருகிறார். கிண்டியில் உள்ள சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர், கலந்து கொள்கிறார்.

advertisement by google

மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி தமிழகத்துக்கு பரப்புரைக்காக வந்தார். 2-வது முறையாக அவர் பிரதமர் ஆக பதவியேற்ற பிறகு மோடி தமிழகம் வருவது இதுவே முதல்முறை. வரும் 30-ஆம் தேதி விமானப்படை விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வருகிறார். அங்கு நடைபெறும் 56-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.

advertisement by google

இந்‌த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, ஹெலிகாப்டர் மூலம் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து டெல்லி திரும்புகிறார்.
[9/22, 11:55 AM] விண்மீண்நியூஸ்2: இந்தியாவில்1,50 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்
சி.ஐ.டி.யு. அகில இந்திய பொதுச் செயலா் தபன்சென்.

advertisement by google

காஞ்சிபுரம்: இந்தியாவில் பொருளாதார மந்த நிலையால் சுமாா் 1.50 கோடி போ் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சி.ஐ.டி.யு. அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலா் தபன்சென் சனிக்கிழமை கூறினாா்.
காஞ்சிபுரம் அருணா மஹாலில் சி.ஐ.டி.யு. அமைப்பின் 14 -ஆவது மாநில மாநாடு செப்.19-இல் தொடங்கியது. மாநாட்டின் 3-ஆவது நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றதுடன் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில் பங்கேற்க வந்திருந்த அகில இந்திய பொதுச் செயலா் தபன்சென் செய்தியாளா்களிடம் கூறியது: உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்திய மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்து விட்டது. வாங்கும் சக்தி குறைந்து போனதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சுமாா் 1.50 கோடி போ் வேலையிழக்கும் அபாய நிலையில் உள்ளனா். இது தொடா்ந்தால் மக்களின் வாங்கும் சக்தி மேலும் வீழ்ச்சியடைந்துவிடும்.
பல தொழிற்சாலைகளில் தொழிலாளா்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வேலையிழந்து வருகின்றனா்.
சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோா், பாதுகாப்புத் துறையில் பணியாற்றுவோா், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் சங்கத்தினா் உள்பட பலரும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனா்.
மத்திய அரசு முதலாளிகளுக்கு ஏற்றவாறு சலுகைகளை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
மத்திய அரசின் இச்செயலைக் கண்டித்தும், இப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தியும் வரும் 30-ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் என்றும் தபன்சென் தெரிவித்தாா்.
நிகழ்வில், சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவா் அ.செளந்தரராஜன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் இ.முத்துக்குமாா், விவசாயிகள் சங்கத் தலைவா் கே.நேரு உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
[9/22, 11:55 AM] விண்மீண்நியூஸ்2: பரபரப்பான சென்னைக்குள் பார்க்கப்படாத பகுதி.?? சாக்கடைக்குள் நடந்துசெல்லும் குழந…

advertisement by google

சாக்கடைக்குள் இறங்கி நடந்துதான் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.

advertisement by google

கவனத்தில் விழாத ஒதுக்குப்புறத்தின் கதையல்ல இது. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளையும் தலைநகரத்துடன் இணைக்கும் பிரதான சாலையின் பின்பகுதி.
தெற்கில் தொ ழில்நுட்பப் பூங்காக்களும், வடக்கில் தலைநகர் சென்னையின் முக்கியப் பகுதிகளும் அருகிலேயே பிரபலமான ஊடக நிறுவனங்களும் எனப் பரபரப்புக்கு பஞ்சமிலாத பகுதி.

advertisement by google

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிறுவனங்களும் வர்த்தக நடவடிக்கைளும் மையம் கொண்டுள்ள சென்னையின் முக்கியமான முனையமாக விளங்கும் ஈக்காட்டுத்தாங்கலுக்கு அருகில் உள்ள பர்மா காலனியில்தான் இந்த நிலை. இந்தப் பகுதியை ஊடறுத்துச் செல்லும் அடையாற்றின் ஒரு பகுதிதான் இந்தச் சாக்கடைப் பாதையாக மாறியிருக்கிறது..

advertisement by google

70களின் இறுதி வரைக்கும் தூய்மையான நீர்நிலைகளில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதியில் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தனர் மக்கள். ஆனால், தற்போது கூவத்தைப் போலவே இதுவும் துர்நாற்றமெடுக்கும் சாக்கடையாக மாறிவிட்டது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என எல்லோரும் பயன்படுத்தும் பொதுப்பாதையாக இந்த அடையாற்றின் சாக்கடைப் பகுதிதான் இருக்கிறது.

எதிர்ப்புறம் இருக்கும் பள்ளிக்குச் செல்ல, சாலைகளில், சுற்றிக்கொண்டு போனால், குறைந்தது 20இலிருந்து 25 நிமிடங்கள் ஆகலாம். ஆனால், சாக்கடைக்குள் நடந்து சென்றால் அதிக பட்சம் ஐந்தாறு நிமிடங்கள்தான் ஆகும் என்பதால் இந்த பாதையையே இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
https://tamil.samayam.com/
“அவசர உதவிகளுக்கும் இந்த பாதையைத்தான் பயன்படுத்திவருகிறோம். எவ்வளவோ பேரிடம் எவ்வளவோ மனு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எதுவும் மாறவில்லை. எங்கள் அவதியும் தீரவில்லை” என்கிறார் 22 ஆண்டுகளாக இங்கு வசித்துவரும் வெங்கடேஷ்.

மக்களின் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்தும், இங்கே ஒரு பாலம் கட்டித்தரக்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசுக்கு கொடுக்கும் கடிதங்களும், மனுக்களும் காகிதக் கண்ணீராகவே காய்ந்து போகின்றன.

இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தில், சுகாதாரக் குறைபாடு 37 விழுக்காடு காரணம் என்பதை வெறும் தரவாக மட்டும் பதிவுசெய்தால் போதுமா? மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனச் சகலரும் பயன்படுத்தும் இந்த பாதையில், அரசு சரியான வழி ஏற்படுத்தித் தருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!
[9/22, 11:55 AM] விண்மீண்நியூஸ்2: சென்னை: பயணியிடம் அவதூறாகப் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
கன்னியாகுமாரி மாவட்டம் வடசேரியைச் சோ்ந்த ரமேஷ் குமார் என்பவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி, நாகா்கோவில் செல்வதற்காக 2வி வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்தில் ஏறியதில் இருந்து நடத்துநா் அனைத்து பயணியிடமும் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்.
இந்நிலையில் பேருந்து எப்போதும் செல்லும் பாதையில் செல்லாமல், மணக்குடி கிராமம் வழியாக சென்றது. இதுகுறித்து பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு அவா் என்னை அவதூறாக பேசியதுடன், பேருந்தில் பயணம் செய்ய வேண்டுமானால் இரு, இல்லையென்றால் இறங்கு எனக் கூறினார்.
என்னுடன் பயணித்த ரவிச்சந்திரம் மற்றும் ஜகன் ஆகியோர் ஓட்டுநரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, அவா்களையும் அவா் அவதூறாகப் பேசினார். மேலும் தாறுமாறாக பேருந்தை இயக்கியது குறித்து ஓட்டுநரிடம் கேட்டதற்கு, சித்தன்குடியிருப்பு அருகே பேருந்தை நிறுத்தி, என் சட்டையைப் பிடித்து இழுத்து கீழே இறக்கினார். அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவானது மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவா், கன்னியாகுமரி பணிமனையைச் சோ்ந்த ஓட்டுனா் சிதம்பர செல்வன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா், மனுதாரருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக 8 வாரத்துக்குள் வழங்கிவிட்டு, அந்தத் தொகையை ஓட்டுநரிடம் இருந்து வசூல் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
[9/22, 11:55 AM] விண்மீண்நியூஸ்2: வேதாரண்யம் அருகே இணைப்பு பாலம் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் ஆற்றைக் கடக்க மக்கள் திண்டாடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அவரிக்காடு, வண்டல், குண்டூரான்வெளி ஆகிய கிராமங்கள் அடப்பாறு, மல்லாற்று நல்லாறு ஆகிய ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் மழைக்காலங்களில் இந்த ஆறுகளை கடந்து தான் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு 14 கோடி ரூபாய் மதிப்பில் வண்டல் – அவுரிக்காடு இணைப்புப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது எனவும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மழை வெள்ள காலங்களில் கிராம மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வெளியூர்களுக்கும், பள்ளிக்கும் செல்ல சிரமப்படுகின்றனர்.

மழைக்காலங்களில் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் இணைப்பு பாலப்பணிகள் முடிவடையாததால் ஆற்றைக் கடக்க பள்ளி மாணவ மாணவிகள் கிராம மக்கள் ஏணிப்படி வழியாக பாலத்தின் மீது ஏறி கடக்க வேண்டியுள்ளது எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை பருவமழை துவங்கும் முன்னர் விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2:

திண்டுக்கல்லில் 17 மற்றும் பழனியில் 11 டாஸ்மாக் பார்கள் அனுமதியின்றி செயல்பட்டு வந்ததையடுத்து அந்த பார்களுக்கு சீல்வைத்து கலால்துறை அதிகாரிகள் நடவடிக்கை


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்

கர்நாடகா ராம்நகர் பகுதியில் கஸ்தூரி கன்னட அமைப்பினர், ஒரே மொழி, ஒரே ரேசன்கார்டு திட்டங்களை செயல்படுத்துவதை கண்டித்து அமித்ஷா உருவ பொம்மையை எரித்து போராட்டம்


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ®®உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் இளைஞரணியில் தகுதியான நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் – சத்தியமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

®®ஊடகதளம்
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தி மொழிக்கு எதிராக திமுக போராடினால் ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்ட நிலை தான் ஸ்டாலினுக்கும் வரும்

என மத்திய அரசு
மிரட்டியதையடுத்து திமுக போராட்டத்தை நடத்தவில்லை

_அமைச்சர் செல்லூர் ராஜூ


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2:

தமிழக முதல்வர் அவருடைய தலைவரான பிரதமர் மோடியை பின்பற்றி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார்

காங். செயலாளர் சஞ்சய் தத்


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்

நெல்லையில் தடை செய்யப்பட்ட அன்சருல்லா அமைப்பைச் சேர்ந்த திவான் முஜுபூர் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில்

செல்போன், சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தகவல்


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ®®சென்னை கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 6 டன் குட்கா பறிமுதல் – இருவர் கைது

Winmeennews.comஊடகதளம்
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என நிரூபித்து காட்டி வருகிறோம்

மதுரையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்


[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிளாஸ்டிக் பயன்பாடுகளின் தீமைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார்.மேலும் பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சி அரவை இயந்திரத்தை தொடங்கி வைத்தார்.மேலும் அம்மா அரசின் மிக முக்கிய திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்..
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஓய்வூதிய திட்டத்தில்‌, தகுதிவாய்ந்த 18 -40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள்‌ பங்கு பெற்று பயனடைலாம்‌, என மாவட்ட ஆட்சித்தலைவர்‌, கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் உள்ள அணைத்து விவசாகிகளையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி இனி வரும் 100 நாட்களில் 1 கோடி விவசாகிகளை இணைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆப., அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது:

பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா என்னும்‌ சிறு குறு விவசாயிகளுக்கான புதிய ஓய்வூதியத்‌ திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில்‌, இணைக்கப்படவுள்ள சிறு குறு விவசாயிகள்‌ 60 வயது பூர்த்தியடையும்‌ நிலையில்‌ ஒய்வூதியம்‌ வழங்கிடவும்‌ இதற்கென மத்திய அரசின்‌ வேளாண்‌ கூட்டுறவுத்துறை மற்றும்‌ விவசாயிகளின்‌ நலன்கள்‌ துறையும்‌ ஆயுள்‌ காப்பீட்டு கழகம்‌ இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
சிறு குறு விவசாயிகள்‌ செலுத்தும்‌ ஒய்வூதிய காப்புறுதி தவணை கட்டணத்திற்குச்‌ சமமாக மத்திய அரசும்‌ தனது பங்குத்தொகையினை இந்த ஓய்வுதிய திட்டத்திற்கு வழங்க உள்ளது. இதன்படி தகுதிவாய்ந்த 18-40 வயது வரையுள்ள சிறு குறு விவசாயிகள்‌ அவர்களின்‌ வயதிற்கேற்ப தன்னார்வத்துடன்‌ இத்திட்டத்தில்‌ இணைந்து தங்களது வயதிற்கு ஏற்ப மாதம்‌ ரூ.50 முதல்‌ ரூ.200 வரை காப்பீடு கட்டணம்‌ செலுத்தும்‌ நிலையில்‌ 60 வயது நிறைவடையும்‌ போது மாதத்திற்கு ரூ.3000/- (ரூபாய்‌ மூவாயிரம்‌ மட்டும்‌) ஓய்வூதியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், எதிர்பாராத விதமாக பணம்‌ கட்டும்‌ விவசாயி இறந்து விட்டால்‌ அவரது வாரிசுதாரர்களுக்கு தொடர்ந்து மாதந்தோறும்‌ ரூ.1500/- ஓய்வூதியமாக கிடைக்கும்‌. விவசாயிகள்‌ இத்திட்டத்தில்‌ சேர்ந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இத்திட்டத்தில்‌ தொடர விருப்பம்‌ இல்லையென்றால்‌ கட்டிய பணத்தினை வட்டியுடன்‌ திரும்ப பெறும்‌ வசதியும்‌ உள்ளது.
ஓய்வூதிய காப்புறுதி கட்டணத்தினை மாதந்தோறும்‌ குறிப்பிட்ட நாளில்‌ அல்லது காலாண்டு அரையாண்டு, ஆண்டு தவணையாக செலுத்திடலாம்‌.
இதனை, தங்களுக்கு வங்கி கணக்கிலிருந்து ஆட்டோடெபிட்‌ முறையிலோ அல்லது ஏற்கனவே பிரதம மந்திரி கிஸான்‌ சமான்‌ நிதி திட்டத்தில்‌ இணைந்திருப்பின்‌ அதிலிருந்தோ செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சிறு குறு விவசாயிகள்‌ 60 வயது நிரம்பியபின்‌ இந்த ஒய்வூதிய திட்டத்திலிருந்து மாதந்தோறும்‌ ரூ.3000/- விவசாயிகளுக்கு வழங்கப்படும்‌.

தகுதிவாய்ந்த சிறு குறு விவாசாயிகள்‌ தங்களது அருகிலுள்ள பொது சேவை மையத்தை தொடர்பு கொண்டு தங்களது ஆதார்‌ கார்டு வங்கி கணக்கு விவரங்கள்‌ அளித்து கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளாம்‌.
கீழ்காணும்‌ விபரங்கள்‌ நேரடியாக இதற்கென உள்ள தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்படும்‌. பெயர்‌ ஆதார்‌ என்‌, பிறந்த தேதி, துணைவன்‌, துணைவி பெயர்‌ வாரிசுதாரர்‌ போன்‌ எண்‌ போன்ற விபரங்கள்‌ தேவைப்படும்‌. தங்களது வங்கி கணக்கிலிருந்து மாத/காலாண்டு/அரையாண்டு/ வருட தவணை குறிப்பிட்ட நாளில்‌ எடுத்துக்‌ கொள்ள வழிவகை செய்ய்பட்டுள்ளது.

இதனை பொது சேவை மையத்திலுள்ள அலுவலர்‌ பதிந்து கையொப்பம்‌ பெற்று முதல்‌ தவணை விபரங்களுடன்‌ பதிந்து இரசீது வழங்குவர்‌. பதிவு செய்பவருக்கு, பிரதம மந்திரி கிஸான்‌ மாந்தன்‌ யோஜனா ஒய்வூதிய திட்ட அடையாள அட்டை மற்றும்‌ ஒய்வூதிய கணக்கு எண்ணுடன்‌ வழங்கப்படும்‌.

எனவே, இத்திட்டத்தில்‌ அனைத்து சிறுகுறு விவாசாயிகளும்‌ தங்களது பகுதியில்‌ உள்ள பொது சேவை மையத்தினை அணுகி இலவசமாக திட்டத்தில்‌ இணைந்து பயன்பெறுமாறும்‌ மேலும்‌ தொடர்புக்கு தங்கள்‌ பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு திட்டம்‌ தொடர்பான விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

மாதாந்திர பிரிமியம்‌ விவரம்:

18வயதிற்கு ரூ.55/-
19வயதினருக்கு ரூ.58/-
20வயதினருக்கு ரூ.61/-
21வயதினருக்கு ரூ.64/-
22வயதினருக்கு ரூ.68/- 23வயதினருக்கு ரூ.72/-
24வயதினருக்கு ரூ.76/- 25வயதினருக்கு ரூ.80/- 26வயதினருக்கு ரூ.85/- 27வயதினருக்கு ரூ.90/- 28வயதினருக்கு ரூ.95/- 29வயதினருக்கு ரூ.100/- 30வயதினருக்கு ரூ.105/- 31வயதினருக்கு ரூ.110/-
32வயதினருக்கு ரூ.120/-
33வயதினருக்கு ரூ.130/- 34வயதினருக்கு ரூ.140/- 35வயதினருக்கு ரூ.150/- 36வயதினருக்கு ரூ.160/-
37வயதினருக்கு ரூ.170/- 38வயதினருக்கு ரூ.180/- 39வயதினருக்கு ரூ.190/-
40வயதினருக்கு ரூ.200/-

மாதாந்திர பிரீமியம்‌ தொகையாக வழங்கப்படும்‌.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மலை ரயில் போக்குவரத்தில் காலதாமதமின்றி அனைவரும் பயணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றும் ஊட்டியில் இரண்டாவது மலர் கண்காட்சி சீசனுக்காவும், அடுத்த மாதம் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு மலை ரயில் சேவையை துவக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் சேவை இயக்கபட்டு வருகிறது. காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறபட்டு அடர்ந்த காடுகளின் நடுவே பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணித்து ஆர்பரிக்கும் அருவிகள் வானுயர்ந்த மரங்கள், வனவிலங்குகள் என கொட்டி கிடக்கும் நீலமலையின் இயற்கை அழகினை ரசிக்க இந்தியா மற்றும் இன்றி பல்வேறு வெளிநாட்டினரும் இந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முன்பதிவு செய்து பயணிக்கும் வகையில் உள்ள இந்த மலை ரயில் போக்குவரத்தானது நான்கு பெட்டிகள் மட்டுமே கொண்டதாக இருப்பதால் இதில் 150 பயணிகளுக்கு மேல் செல்ல முடியாது. தினசரி ஒரு ரயில் போக்குவரத்து மட்டுமே உள்ளதால் இதில் பயணிக்க முன்பதிவு செய்து பல மாதங்கள் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
தெற்கு ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்பை தொடர்ந்து, தினசரி இயக்கப்படும் மலை ரயில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு சென்றபின் இந்த மலை ரயில் காலை 9.10 க்கு புறப்பட்டு உதகை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
வாரத்தின் இரண்டு விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களுக்கு இந்த மலை ரயில் சிறப்பு கட்டணத்தில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, இவரது வீட்டதுகே குடியிருந்து வரும் கந்தசாமி (34) பனியன் தொழிலாளி. இதனிடையே, இன்று காலை முதலே குடிபோதையில் வீட்டில் இருந்து வந்த கந்தசாமி, தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடி வர, சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் கந்தசாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமியை கந்தாசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.

நான்கு வயது சிறுமியை பலாத்காரம்.செய்தவரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ செப்டம்பர்‌ 2019-ம்‌ மாதத்திற்கான கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ முறையீட்டுக்‌ கூட்டம்‌ 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள முதன்மை கூட்ட அரங்கில்‌ நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சித்‌ தலைவா்‌ கு.இராசாமணி அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ள இக்கூட்டத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட விவசாயிகள்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள்‌ அளிக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இன்று காலை சரக்கு வாகனத்தில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாலித்தீன் பைகள் இறக்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பாபுலால் என்பவருக்கு சொந்தமான கடை உட்பட மூன்று கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து சுமார் ஒரு டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததற்காக அபராதமும் விதித்தனர்.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ✍?✅கோவை : ரயில்வே பணியில் 90% வட மாநிலத்தவர்களின் நியமனத்தை கண்டித்து தென்னக ரயில்வே மதுரை மண்டல அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தென்னக ரயில்வேயில் உள்ள கடைநிலை ஊழியர்களுக்கான கேட் கீப்பர், கேங் மேன், சிக்னல் ஆபரேட்டர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. மதுரை மண்டலத்தில் நடைபெற்ற தேர்வில் 572 பேர் தேர்ச்சி பெற்றனர், இதில் 11பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்ற அனைவரும் வட மாநிலத்த சேர்ந்தவர்கள்.
இதேபோல கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருச்சி மண்டலத்தில் நடைபெற்ற தேர்வில் 1200 பேர் தேர்வாகியிருந்தனர். இதில் 1050 வட மாநிலத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக்த்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:

தென்னக ரயில்வேயின் சார்பில் காலி பணியிடங்களை நிரம்பும்போது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் தேர்வை, மாநில மொழிகளில் கட்டாயம் நடத்தினால் மட்டுமே அந்தந்த மாநில இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும்.
வட மாநிலத்தவர்கள் எளிதாக மலைவாழ் மக்கள் என சான்றிதழை பெற்று, ரயில்வேயில் வேலை வாய்ப்பை பெற்று விடுகின்றனர். இதனால் ஹிந்தி தெரியாத மாநிலத்தில் இருக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசு மின்சாரத்துறையில் உதவி பொறியாளர் பணியினை வட மாநிலத்தவர்களுக்கு வழங்கியதும், தமிழக அமைச்சர் ஒருவர் தேர்வு எழுதும் தமிழர்களுக்கு தகுதி இல்லாததால் தான் வேலை கிடைக்கவில்லை எனக்கூறிவது கண்டனத்துக்குரியது.
கடை நிலை ஊழியர்களுக்கான தேர்வில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி மதுரை ரயில்வே கோட்டத்தை தோழமை கட்சிகளுடன் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ஹோட்டல்களிலோ, சாலையோர கடைகளிலோ விரும்பி வாங்கும் உணவு வகைகளில் பரோட்டாவுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஹோட்டல்களில், பரோட்டோவுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் நிலையில், பரோட்டோ தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கும் இளைஞருக்கு வரவேற்பு கூடியுள்ளது.

வெண்ணிற பரோட்டாவில் பொன்னிற புள்ளிகளுடன் மென்மையாக காட்சியளிக்கும் பரோட்டாவை சால்னாவில் பிச்சுப்போட்டு சாப்பிட்டால், பரோட்டோ சூரி போல கோட்டை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து சாப்பிடத் தொடங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஆனால், பல உணவகங்களில் பரோட்டா மாஸ்டர்களுக்குத்தான் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இதையறிந்த மதுரை கூடல்நகரைச் சேர்ந்த முகமது ஷாசிம் என்ற இளைஞர், பரோட்டா பயிற்சி மையத்தை தொடங்கி நடத்திவருகிறார். மூன்று தலைமுறையாக உணவகத்தொழிலில் இருந்த அனுபவத்தில் இந்தப் பயிற்சி மையத்தை முகமது ஹாசிம் தொடங்கி நடத்திவருகிறார்.

20 முதல் 30 நாட்களுக்குள் பலவிதமான பரோட்டாக்களை தயார் செய்ய கற்றுதரும் இவர், தன்னிடம் பயின்றவர்கள் வெளிநாடுகளில் பரோட்டா மாஸ்டராக பட்டையை கிளப்புவதாக கூறுகிறார். தன்னிடம் பரோட்டா போட கற்றுக்கொள்ள வருபவர்களில் பலர் பட்டதாரிகள் என்றும் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

பரோட்டா மாஸ்டர்களுக்கு அதிக தேவை இருப்பதோடு நல்ல ஊதியமும் கிடைப்பதால், வேலையில்லா பட்டதாரிகள் பலர் பரோட்டோ மாஸ்டராக விரும்புகிறார்கள் என்பதற்கு இவரிடம் பயிற்சி பெற வருவோரின் எண்ணிக்கையே எடுத்துக்காட்டாக உள்ளது.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: பெருகிவரும் பாட்டில் குடிநீர் கம்பெனிகளால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகும் அபாயம்

  • நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக விவசாயிகள் புகார்

கம்பம்: தேனி மாவட்டம் முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பியே கம்பம் பள்ளத்தாக்கில், லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை மொத்தம் 14,700 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. முப்போகம் விளைந்த இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒருபோகத்திற்கே வழியில்லாத நிலை உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 870 மினரல் வாட்டர் கம்பெனிகள் இருப்பதாக அரசு கூறினாலும், அரசு அனுமதியில்லாமல் ஆயிரக்கணக்கான கேன் வாட்டர் கம்பெனிகள் முறைகேடாக இயங்கி வருகின்றன. தேனி மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் 11 மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். ஆனால் கம்பம் பள்ளத்தாக்கில் மட்டுமே 15 கம்பெனிகள் செயல்படுகின்றன.தண்ணியில்லா காடாகும் தேனி?: கேன் வாட்டர் கம்பெனிகள் பெருகுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மழை பொய்த்ததால் பல இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக ஆற்றங்கரையோரங்களில் இருக்கும் கேன் வாட்டர் கம்பெனிகள், தண்ணீரை உறிஞ்சி ஒரு கேன் ₹10 முதல் ₹30 வரை விற்கின்றனர்.

முல்லைப்பெரியாறு கரையோரமாக பெயரளவில் 2 சென்ட் இடத்தை வாங்கிப்போட்டு, அதில் போர்வெல் அமைத்து சுற்றி கட்டிடம் எழுப்பி நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தேனி மாவட்டம் வெகு விரைவில் ராமநாதபுரம் மாவட்டம் போல மாறும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தயாரிப்பது எப்படி?: ஒரு கேன் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க குறைந்தபட்சம் 2,000 சதுர அடி இடம் கொண்ட கட்டடம் தேவைப்படும். கட்டடத்தில் பலவிதமான பணிகள் செய்ய தனித்தனியே அறைகள் அமைக்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்ப ஒரு அறை, அதனை சுத்திகரிக்க, ஆராய ஒரு பரிசோதனைக்கூடம், ஆரோ பிளான்டில் சுத்தம் செய்ய ஒரு அறை தேவைப்படும். ஆர்ஓ யூனிட், தண்ணீர் சேகரித்து வைக்க டேங்க் மற்றும் சில உபகரணங்கள் தேவைப்படும். இந்த இயந்திரங்கள் அனைத்துமே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். தண்ணீரின் தூய்மையை பரிசோதிக்கும் ஆய்வகத்தில் இன்குபேட்டர், வாட்டர் பாத், மைக்ரோஸ்கோப் போன்றவைகளுடன், இத்தொழிலுக்கு குறைந்த பட்சம் 8 பேர் முதல் 20 பேர் வரை தேவை.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஆய்வு செய்ய மைக்ரோ லேபில் பிஎஸ்சி மைக்ரோபயாலஜி படித்த ஒருவரும், கெமிக்கல் லேபில் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்த ஒருவரும் தேவை. மற்ற தொழிலில் மூலப்பொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அது மட்டுமல்லாது 10 லிட்டர் தண்ணீரை சுத்திகரித்தால், 4 லிட்டர் மட்டுமே இறுதியாக சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கிறது. இதனால் தண்ணீர் அதிகளவில் தேவைப்படுகிறது.
காற்றில் பறக்கும் விதிகள் : சட்டப்படி இங்கு வேலை செய்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தண்ணீர் நிரப்பும் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் கண்டிப்பாக பூ, பொட்டு, வளையல் போன்றவை அணியக்கூடாது. ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் தேவை. கையில் உறை, வாய், மூக்கை மூடிய நிலையில் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும். வாட்டர் கேன்களை மறுபடி உபயோகப்படுத்தும்போது சோப் ஆயில், குளோரின், கொதிநீரால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் மேலேயுள்ள எந்த விதிமுறைகளும் பின்பற்றுபடுவதில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தரச்சான்றும் இல்லை…: ஐஎஸ்ஐ தரச்சான்று பெற வருடம் ₹97,000 முதல் ₹2 லட்சம் வரை கம்பெனிகளை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு அஞ்சியே பெரும்பாலான கம்பெனிகள் ஐஎஸ்ஐ தரச்சான்றை புதுப்பிப்பதில்லை. ஒரு சிலர் வீடுகளில் ஆர்ஓ பிளான்ட் அமைத்து, அதில் வரும் நீரை பிடித்து வியாபாரம் செய்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினாலும் சீல் வைப்பதும், ஓரிரு நாளில் திரும்ப திறப்பதுமாக உள்ளனர். மாவட்ட நிர்வாகம், மத்திய நிலத்தடிநீர் பிரிவு அதிகாரி, பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு அதிகாரி, பெரியாறு – வைகை பாசன பிரிவு செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதி பெற்றே, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள், குழுவிடம் அனுமதி பெறுவது இல்லை என தெரிகிறது. இதுகுறித்து கம்பம் விவசாயி பொன்.காட்சிகண்ணன் கூறுகையில், ‘‘தூய்மையான முல்லை பெரியாற்று நீரை பருகாமல், தேனி மாவட்ட கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் கேன் வாட்டர் பிடியில் சிக்கி, பென்னிக்குக்கின் கனவை சிதைக்கின்றனர். பெரியாறு தண்ணீரை நன்கு காய்ச்சி பருகினாலே போதும். உடலுக்கு எந்த பிரச்னையும் வராது. இதற்கான அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட வேண்டும். 50 ஆண்டுகளாக பிளாஸ்டிக்கை ஊக்குவித்து இன்று பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியாமல் திணறுவது போல, தற்போது தண்ணீர் பிரச்னை இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மிரட்டும் நியூட்ரினோ: 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாஸ் கூறுகையில், ‘‘அம்மா குடிநீர் திட்டத்திற்காக லோயர்கேம்பில் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க திட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், விவசாயம் மட்டுமல்ல. குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்படும். எனவே, விவசாய பூமியான கம்பம் பள்ளத்தாக்கை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைய உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் உப்புக்கோட்டையிலிருந்து கொண்டு செல்லப்படும். இத்திட்டத்திற்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட உள்ளது. இதனாலும், பெரியாறு அணை பாசனம் பெரிதும் பாதிக்கும்’’ என்றார்.

கண்காணிப்பு இல்லை
வாட்டர் கேன் நிறுவனங்கள் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான லிட்டர் நீரை உறிஞ்சுகின்றன. இந்த அளவை கண்காணிக்க ஒரு லட்சம் லிட்டர் வரை எஸ்டிஓக்கள், 2 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க இஇக்கள், 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க எஸ்சிக்களிடமும் அனுமதி பெற வேண்டும். ஆனால், இவற்றை முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. இதனால் இஷ்டம் போல தண்ணீர் சுருட்டப்படுகிறது.

வீட்டுமனையாகும் விவசாய நிலங்கள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உத்தமபாளையம் பைபாஸ் முதல் தேனி வரை, பல இடங்களில் வயல்களை அழித்து பல்வேறு வகையான வர்த்தக நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காரணம், விவசாயத்திற்கான நீர் போதுமானதாக இல்லை. பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறந்து விட்டால், வைகை அணைக்கு வெறும் 300 கன அடி மட்டுமே வந்து சேர்கிறது. மீதமுள்ள 400 கன அடி தண்ணீர் மின்மோட்டார்கள் மற்றும் வாட்டர் நிறுவனங்களால் உறிஞ்சப்படுகிறது.

அது இருந்தால் இது இல்லை
ஒரு கேன் வாட்டர் கம்பெனி ஆரம்பிக்க வேண்டுமென்றால் முதலில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதை வைத்து பொதுப்பணித்துறையினரிடம் விண்ணப்பித்த பின்னரே, ஐஎஸ்ஐ தரச்சான்று பெற வேண்டும். அதன் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான கம்பெனிகளில் ஒன்றிருந்தால் ஒன்றில்லை என்ற நிலைதான் உள்ளது. ஐஎஸ்ஐ தரச்சான்று இருந்தால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரச்சான்று இல்லாமலிருக்கும். பொதுப்பணித்துறை சான்று இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை சான்று இல்லாமல் இருக்கும். இது அரசை ஏமாற்றும் செயல் மட்டுமல்ல… உடல்நலனோடு விளையாடும் விபரீத விளையாட்டு என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

விதிமீறல் உண்மைதான்
கேன் வாட்டர் கம்பெனி உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘தேனி மாவட்டத்தில் பல கேன் வாட்டர் கம்பெனிகள் முறையாக அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுவது உண்மைதான். வீடுகளில் ஆர்ஓ பிளான்ட் அமைத்து அதன்மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்திருக்கிறோம். எங்கள் சங்கம் சார்பாக பொதுப்பணித்துறை மற்றும் தமிழக அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்’’ என்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆறு, குளம், ஏரி போன்ற நீராதாரங்களை விட்டு 200 மீட்டர் தூரம் தள்ளித்தான் ஆரம்பிக்க வேண்டும்’’ என்றனர்.

புதிய அனுமதி இல்லை
நீதிமன்ற உத்தரவுப்படி 2013ம் ஆண்டுக்கு பிறகு, புதிதாக கேன் வாட்டர் தொழில் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை அதற்கு முன்பு லைசென்ஸ் உள்ளவர்கள், பழைய லைசென்சை புதுப்பித்து தற்போது வரை நடத்திக் கொள்ளலாம்.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: கோப்புப்படம்

நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாங்குநேரி இடைத்தோ்தலுக்கான அறிவிப்பை மத்திய தலைமைத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 30-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்டோபா் 1-ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. அக்டோபா் 3-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறற கடைசி நாளாகும். அக்டோபா் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இப்போது முதலே தோ்தல் நடைத்தை விதிமுறைகள் மற்றும் வாக்காளா் செலவின கண்காணிப்பு பணிகள் அமலுக்கு வந்துள்ளன.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி ஆண் வாக்காளா்கள் 1,27,025, பெண் வாக்காளா்கள் 1,29,385, மூன்றாம் பாலினத்தவா்கள் 4 என மொத்தம் 2,56,414 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த மாா்ச் 27 முதல் செப்டம்பா் 20 வரையில் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்காளா்களிடம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பெறறப்பட்ட 1,673 மனுக்கள் வாக்காளா் பட்டியலில் பதிவேற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 299 வாக்குசாவடிகளும், 170 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. தொகுதியில் 1,231 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
நாங்குநேரி இடைத்தோ்தலுக்காக 719 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 589 கன்ட்ரோல் யூனிட், 585 விவிபேட் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன.
வாக்காளா்கள், வாக்காளா் பட்டியல் தொடா்பாக 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மாவட்ட தொடா்பு மையத்தில் தொடா்பு கொண்டு தங்கள் குறைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும் வாக்காளா் உதவி செயலி மூலமாகவும் வாக்காளா்கள், பொதுமக்கள், வேட்பாளா்கள் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்யலாம்.
தோ்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசியல் கட்சிகளின் செலவின விதி மீறல்களை பொதுமக்கள் தோ்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தெரிவிக்கவும் சிவிஜில் என்ற இணையதள செயலி மூலமாக தோ்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புகைப்படமாகவோ அல்லது 2 நிமிட விடியோவாகவோ அனுப்பலாம்.
சுவிதா என்பது தோ்தலில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய பொதுக்கூட்டம், ஊா்வலம், உபயோகப்படுத்தும் வாகனங்கள், கட்சி அலுவலகம் ஒலிப்பெருக்கிகள், வானூா்திகள் ஆகியவைகளின் அனுமதிக்காக உருவாக்கப்பட்ட செயலியாகும்.
தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது முதல் தோ்தல் நடத்தை விதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமலுக்கு வருவதால் நாங்குநேரி தொகுதியில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றன. மாவட்டத்தில் உள்ள எஞ்சிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு பறக்கும் படை, ஒரு நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு வாகன தணிக்கை பணிகள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக வாகனங்களில் கொண்டு செல்லக்கூடாது” என்றாா்.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் சக்தி குமாா் கூறுகையில்,
“நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். மொத்தமுள்ள 299 வாக்குச்சாவடிகளில் 292 வாக்குச்சாவடிகள் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டிலும், 7 வாக்குச்சாவடிகள் மாநகர காவல் துறையின் கட்டுப்பாட்டிலும் வருகின்றன.
மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் வரும் வாக்குச்சாவடிகளில் சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் 28, நாங்குநேரி உட்கோட்டத்தில் 195, தாழையூத்து ஊரக உட்கோட்டத்தில் 54, வள்ளியூா் உட்கோட்டத்தில் 15 வாக்குச்சாவடிகள் உள்ளன.
90 இடங்களில் ஒரு வாக்குச்சாவடியும், 43 இடங்களில் இரு வாக்குச்சாவடிகளும், 9 இடங்களில் 3 வாக்குச்சாவடிகளும், 12 இடங்களில் 4 வாக்குச்சாவடிகளும், 5 இடங்களில் 5 வாக்குச்சாவடிகளும், ஓா் இடத்தில் 7 வாக்குச்சாவடிகளும், ஓா் இடத்தில் 9 வாக்குச்சாவடிகளும் இடம்பெறுகின்றன.
பொதுமக்கள் புகாா் தெரிவிப்பதற்கு ஏதுவாக மாவட்ட காவல் காணிப்பாளா் அலுவலகத்திலும் காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படும். இதேபோல் வருவாய்த் துறையினருடன் இணைந்தும் காவல் துறையின் கட்டுப்பாட்டு அலுவலகம் தனியாக செயல்படும்’ என்றாா்.
[9/22, 12:00 PM] விண்மீண்நியூஸ்2: ஆறுமுகநேரி: தாமிரபரணி ஆற்றில் புதைந்துள்ள புராதன கட்டிடங்களை பார்க்க பள்ளி மாணவ, மாணவிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த இடம் திருவிழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பெருமை சேர்ப்பது வற்றாத ஜீவநதி தாமிரபரணியாகும். இந்த நதி இரு மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு இறுதியில் தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணி ஆறு ஆத்தூர்-முக்காணி பாலத்திற்கு மேற்கு பகுதியில் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் பழைமை வாய்ந்த கட்டிடங்கள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து கடந்த 11ம்தேதி முதன் முதலாக தமிழ் முரசில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பிறகு அந்த இடம் தற்போது சுற்றுலா தலம் போல் ஆகிவிட்டது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பார்த்து சென்று உள்ளனர். தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த புராதன இடத்தை பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள். நேற்று முன்தினம் திருச்செந்தூர் சங்கரா மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளை 3 பஸ்களில் ஆசிரியர்கள் அழைத்து வந்தனர். அவர்கள் மண்ணில் புதைந்து போயிருந்த கல்வெட்டு சிற்பங்கள், கட்டிட பாகங்கள், கல் நங்கூரம் ஆகியவற்றை பார்த்து வியப்படைந்தனர். அவர்களுக்கு ஆத்தூர் சமூக ஆர்வலர் நெடுஞ்செழியபாண்டியன் விளக்கி கூறினார்.
இதுபோல் நேற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர்கள் 175 பேர் 3 பஸ்களில் வந்து பார்த்து சென்றார்கள். இந்த மாணவர்கள் கூறும்போது, பாட புத்தகங்களில்தான் நாங்கள் கொற்கை வரலாற்றை படித்துள்ளோம். ஆனால் அவர்கள் ஆண்ட பகுதியை தற்போது பார்ப்பதால் எங்களுக்கு மனதில் நன்றாக பதிந்து விட்டது. எங்களுடன் வந்த ஆசிரியர்களும் மன்னர் காலத்து வரலாற்றை விளக்கி கூறினார்கள். இதுபோன்ற பழைமை வாய்ந்த இடங்களை பார்ப்பது எங்களுக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்றனர்.

இதுபோல் இன்று காலை ஆறுமுகநேரி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2 பஸ்சில் சென்று தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் கட்டிட பாகங்களை கண்டுகளித்தனர். அவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும் வந்திருந்தனர். மேலும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் தனிச்செயலாளரும் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவருமான சுந்தரேசன் இன்று மாலை அந்த இடத்தை பார்வையிடுகிறார். தினமும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கான பேர் இங்கு வந்து செல்வதால் அந்த இடம் ஒரு சுற்றுலா தலம் போல் மாறிவிட்டது. தற்போது வெளியில் தெரிவது 10 சதவீத கட்டிட பாகங்கள்தான். 90 சதவீதம் உள்ளே புதைந்து கிடக்கிறது. அதை தோண்டினால் இன்னும் பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.

advertisement by google

Related Articles

Back to top button