இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்

தமிழக காவல்துறையை கௌரவித்த கண்பார்வையற்ற பெண்? முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

காவல்துறையை கௌரவித்த கண்பார்வையற்ற பெண்

advertisement by google

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கண் பார்வையற்ற கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது கணவர் கடந்த பிப்ரவரி மாதம்; வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில் அப்பெண் சமூக ஆர்வலர் ஒருவர்; உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் சக்தி குமார்¸ இ.கா.ப அவர்களிடம் புகார் அளித்தார். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அவரை அரசு காப்பகத்தில் சேர்க்கவும் மற்றும் வேண்டிய தேவைகளை செய்து தரவும் உத்தரவிட்டார். இந்நிலையில் மார்ச் 24-ம் தேதி இவருக்கு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் நேசக்கரங்கள் என்ற அமைப்பினரிடம் அடைக்கலம் அடைந்த அவருடைய குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையின் சிகிச்சைக்காக தஞ்சாவூர் சென்று வர போக்குவரத்து அனுமதி சீட்டுகளை பெறவும் மாவட்ட காவல் துறையால் உதவி செய்யப்பட்டது. குழந்தையின் உடல் நலம் தேறியவுடன் தனக்கும் தனது குழந்தைக்கும் அனைத்து வித உதவிகளையும் செய்த காவல்துறையினரை கௌரவிக்க நினைத்த அப்பெண் காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்தி குமார்¸ இ.கா.ப அவர்களை அணுகி தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். அதனை தொடர்ந்து குழந்தைக்கு ‘ஸ்ரீபதி” என பெயர் சூட்டினார். மேலும் குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல விரும்பிய அப்பெண்ணிற்கு வேண்டிய உதவிகள் செய்து வழியனுப்பி வைத்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button