இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கடலில் உருவான மர்ம நுரை? அச்சத்தில் மக்கள்?பிண்ணனி என்ன?

advertisement by google

அச்சத்தில் மக்கள்.. மீனவர்கள் அச்சம்.. சென்னையில் பல பீச்களில் குவிந்த மர்ம நுரை படலம்.. என்ன பின்னணி?

advertisement by google

பீச்களில் குவிந்த மர்ம நுரை படலம்..என்ன பின்னணி?
சென்னை: சென்னையில் பல பீச்களில் திடீர் என்று மர்ம நுரை படலம் கரை ஒதுங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான முழு விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

advertisement by google

பட்டினபாக்கம் அடுத்துள்ள சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், இராயப்பேட்டை அருகே இருக்கும் மற்ற கடல் பகுதியிலும் இன்று அதிக அளவில் நுரை கரை ஒதுங்கியது. மொத்தமாக கரையை மூடும் அளவிற்கு நுரை கரை ஒதுங்கியது.

advertisement by google

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கடல் பகுதி வண்ண நிறமாக மாறியது. அப்போது கடலில் ஏற்பட்ட மாசு தன்மைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

advertisement by google

மாசு படலம்
இந்த நிலையில் தற்போது உருவாகி உள்ள நுரை படலத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி சென்னையில் உள்ள அடையார் ரசாயன ஆலைகள் காரணமாக இந்த நுரை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அங்கு இருக்கும் ரசாயன ஆலைகளில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் நுரை ஏற்பட்டு இருக்கலாம்.

advertisement by google

இரண்டு நாட்கள்
அதேபோல் இன்னொரு பக்கம் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இந்த கழிவு நீர் கடலில் கலந்ததும், ஆழத்திற்கு சென்றுவிடும். ஆனால் மழை காரணமாக கடலில் தற்போது அதிக தண்ணீர் சேர்கிறது. இதனால் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

advertisement by google

Ad
கழிவு நீர்
ஆகவே கழிவு நீர் கடலுக்குள் செல்லாமல், வெளியே வந்து நுரையாக மாறி கரைக்கு வருகிறது என்று கடலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள், அங்கு இருக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்த நுரை இப்படிதான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

advertisement by google

இதனால் மீன்கள் அதிக அளவில் பலியாக வாய்ப்புள்ளது. கடல் அதிக அளவில் மாசு ஆனதுதான் இதற்கு காரணம். இந்த பருவமழை முடியும் வரையில் இந்த நுரை காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

advertisement by google

Related Articles

Back to top button