இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

வாய்கொழுப்பா?கால்கொழுப்பா?தானாக சென்று கலெக்டரிடம் மாட்டிக் கொண்ட நடிகர் ராதாரவி ? இப்பொழுது குடுபத்துடன் தனிமைபடுத்தி கண்கானிப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோத்தகிரி வந்த ராதாரவி.. ஊட்டிக்கு வந்து கலெக்டரை சந்தித்து பாராட்டி.. பரபரப்பு.. இப்போது தனிமையில்!

advertisement by google

ஊட்டி: கோத்தகிரி பங்களாவுக்கு வந்த ராதாரவி சும்மா இருந்திருந்தால் பரவாயில்லை.. ஊட்டி கலெக்டரை பார்த்து ஒரு நன்றி சொல்லலாம் என்று கிளம்பி வந்ததுதான் சிக்கல் ஆகிவிட்டது… குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் 8 பேருடன் சேர்த்து அவரது சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தி விட்டனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். இந்த சம்பவத்தினால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

இப்போதைக்கு பாஜகவை சேர்ந்தவர் ராதாரவி.. அக்கட்சியில் பேச்சாளராக இருக்கிறார்.. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எம்.கைகாட்டியில் மார்வளா செல்லும் ரோட்டில் இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்கிறது.
கடந்த 10-ந் தேதி சென்னையில் இருந்து குடும்பத்துடன் இங்கு வந்து தங்கி ரெஸ்ட் எடுக்கலாம் என கிளம்பிவந்துள்ளார். சென்னையில் தொற்று அதிகம் என்பதால் யாரும், எங்கும் செல்ல தடை உள்ளது. பக்கத்து மாவட்டங்களுக்குகூட செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது- வாழ பழக வேண்டும்- கைவிரித்த உலக சுகாதார நிறுவனம்

advertisement by google

கோத்தகிரி
இந்த நேரத்தில் ராதாரவி அங்கிருந்து கோத்தகிரி வந்துள்ளார்.. 2 நாளைக்கு முன்பு ஊட்டி கலெக்டரையும் இவர் சந்தித்து பேசிவிட்டு போயுள்ளார்.. கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து, சிறப்பான முறையில்

advertisement by google

“கொரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்கிறீர்கள், என்னுடைய பாராட்டுக்கள்” என்று சொல்லி விட்டு சென்றுள்ளார்.

advertisement by google

இ-பாஸ்
ஊட்டி வந்துபோன பிறகுதான் விஷயம் சுகாதாரத்துறையினருக்கு தெரிந்துள்ளது.. உடனடியாக ராதாரவியின் கோத்தகிரி வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் அவர் இ-பாஸ் பெற்று வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அந்த பங்களா முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் கொரோனா மெடிக்கல் செக்கப் செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.

advertisement by google

அதிகாரிகள்
அதன்படி, ராதாரவியும் அவரது அவரது குடும்பத்தினரும் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வதற்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சளி மாதிரி டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதன்பிறகு பங்களாவுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.. இப்போது அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.. மேலும், அவரது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுக்க ஏதுவாக, தன்னார்வலர்களையும் பணியமர்த்த அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

advertisement by google

டெஸ்ட் ரிசல்ட்
அதற்குள் எக்குத்தப்பாக விஷயம் பரவிவிட்டது.. தொற்று என்பதால்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் கிளம்பின.. ஆனால் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.. டெஸ்ட் ரிசல்ட் இன்னமும் வரவே இல்லை என்று சொல்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த சம்பவத்தினால் ஊட்டி, கோத்தகிரியில் சற்று பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button