பயனுள்ள தகவல்மருத்துவம்விவசாயம்

மீல் மேக்கர் எதிலிருந்து தயாரிக்கபடுகிறது நன்மைகள் என்ன? தெரிந்தால் பல ஆண்கள் சாப்பிட மாட்டீங்க? முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

மீல் மேக்கர் எதிலிருந்து வருகிறது தெரிந்தால் பலர் சாப்பிட மாட்டீங்க

advertisement by google

பலரும் இந்த உணவுப் பொருள் எதிலிருந்து வருகிறதென்று தெரியாமலே சாப்பிட்டிருப்போம் அதில் குறிப்பாக சொல்லப்போனால் மீல்மேக்கரை சொல்லலாம். இந்த செய்தியில் மீல் மேக்கர் எதில் இருந்து கிடைக்கிறது இதை சாப்பிடலாமா வேண்டாமா நன்மைகள் தீமைகள் என்ன இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது இப்படி மீல்மேக்கரை பற்றி தெரிந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறோம் நீங்களும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளலாம். மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான் இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் .இது சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இந்தப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பெயர் மீல்மேக்கர் அதனாலேயே இதை நான் மீல்மேக்கர் மீல்மேக்கர் என்று அழைத்து வருகிறோம். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கடினமான நிலையில் இருக்கும் காய்கறி புரதம் என்று சொல்லலாம். சோயா பீன்சிலிருந்து பல பொருட்கள் கிடைக்கின்றன சோயா பால் ,சோயா புரதம், சோயா எண்ணெய் இப்படி பல பொருட்கள் சொல்லலாம்.

advertisement by google

குறிப்பா சோயா எண்ணெய் தயாரிக்கும்போது சோயா பீன்சை செக்கில் போட்டு பிழிந்து எண்ணெய் எடுத்துருக்காங்க அதற்குப் பிறகு சக்கை அல்லது புண்ணாக்கு கிடைக்கும் அல்லவா இப்படி கிடைக்கக்கூடிய இந்த பொருளைதான் இறைச்சித் துண்டுகள் போன்று இருப்பதற்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டில் அடைத்து மீல் மேக்கர் என்று சொல்லி விற்பனை செய்கிறார்கள். ஒருவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால் அவர் இறைச்சியின் சுவையை அனுபவிக்க விரும்பினால் சோயாவிலிருந்து தயாரிக்கப்பட்ட மீல் மேக்கர் ஒரு சரியான சாய்ஸ் இதில் புரதச்சத்து அதிகமாக உள்ளது எனவே இதை இறைச்சிக்கு சமமாகவே கருதலாம் இந்த மீல்மேக்கர் உணவு இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று உணவு யாரெல்லாம் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் அல்லது இறைச்சி சாப்பிட பிடிக்கலையோ அவர்கள் இந்த சோயா சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துக்களை இதில் பெற முடியும் . இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த மீல் மேக்கரானது 1980களில் கல்யாண விருந்துகள்ல வெஜ் பிரியாணி களில் தென்பட ஆரம்பித்தது இதனுடைய சுவை பிடித்துப்போனதால் இதை கடைகளில் தேடிப்பிடித்துசமைக்க ஆரம்பித்தார்கள் வெஜ் பிரியாணி செய்யும்போது பீன்ஸ் கேரட் பட்டாணி இதன் கூடவே இந்த மேலும் ஏக்கரும் கண்டிப்பா இருக்கும்.புரதச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சோயா ஒரு நல்ல மருந்து என்று சொல்லலாம் அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து வரலாம் சோயா பால் சோயா சீஸ் இதையெல்லாம் புரதச் சத்து அதிகமாக உள்ளது தானிய வகைகளிலேயே சோயாவில் தான் அதிகமாக புரதச்சத்து உள்ளது 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் இருக்கிறது இந்த புரதத்தில் நம் உடலுக்குத் அடிப்படைத் தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கு. மாமிச உணவுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரதம் சோயா பீன்ஸ்.

advertisement by google

அப்படி இருந்தாலும் சோயாவில் கொழுப்புச் சத்து குறைவாகவே இருக்கும் 100 கிராம் சோயாவில் 20 கிராம் கொழுப்பு தான் உள்ளது. சோயாவில் கார்போஹைட்ரேட்டின் அளவு மிக மிகக் குறைவுதான். சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த இதயத்திற்கு சோர்வடைந்த உடலுக்கு சோயாவின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது . சுவையான ஒரு இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், மினரல்கள் சோயாவில் அதிகமாக உள்ளது இதனால சுவையா பற்களுக்கும் எலும்புகளுக்கும் பாதுகாப்பு வழங்கும், இது தவிர சோயாவில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எவ்வளவுதான் நன்மைகள் தந்தாலும் அளவுக்கு அதிகமாக இதை எடுத்துக் கொள்ளும்போது இது நமது உடலில் பாதிப்பை உண்டாக்கும் .இது ஏற்கனவே சொன்னது போல் மீல்மேக்கர் உடைய முக்கியமான பொருள் சோயாபீன்ஸ் இந்த சோயா பீன்சானது பருப்பு குடும்பத்தை சார்ந்தது உங்களுக்கு பருப்பு சார்ந்த உணவுப் பொருட்கள் அலர்ஜி ஒத்துக்கொள்ளாது என்றாள் மீல்மேக்கரை தவிர்ப்பது நல்லது. சோயா சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்து வந்தால் உங்களுக்கு ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்தும் அதேபோல உங்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கைகளை குறைப்பது இது போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button