இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

சந்திரயான்2 விக்ரம் லேண்டர் நாசாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு பொறியாளர் சண்முகசுப்பிரமணியன்?

advertisement by google

சந்திரயான் 2 விக்ரம் லேண்டர்- நாசாவுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு பொறியாளர் சண்முக சுப்பிரமணியன்.

advertisement by google

சென்னை: சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடிக்க அமெரிக்காவின் நாசாவுக்கே வழிகாட்டிய பொறியாளர் சண்முக சுப்பிரமணியன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர்.

advertisement by google

இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2- விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவ பகுதியில் ஆய்வு மேற்கொள்ள தரை இறங்கியது.
ஆனால் விக்ரம் லேண்டருடனான தொடர்புகள் திடீரென துண்டிக்கப்பட்டது. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் சந்திரயான் -2 ஆர்ப்பிட்டரானது தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்தது.
தமிழர் தந்த க்ளூ.. மீண்டும் தேடிய நாசா.. கண்டுபிடிக்கப்பட்டது விக்ரம் லேண்டர்.. என்ன நடந்தது?

advertisement by google

சண்முக சுப்பிரமணியன் மூலம் கண்டுபிடிப்பு
இதனிடையே விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற பொறியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்துவிட்டதாக நாசா அறிவித்துள்ளது.

advertisement by google

மதுரையை சேர்ந்தவர்
மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன், மெக்கானிக்கல் என்ஜினியர். முதலில் காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ரோகிராம் பிரிவில் இருந்தார். பின்னர் சென்னையில் லென்னக்ஸ் இந்தியா டெக்னாலஜி செண்டரில் டெக்னிகல் ஆர்க்கிடெக்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

advertisement by google

நாசா உறுதி செய்தது
விக்ரம் லேண்டர் தொடர்பாக நாசா ஏற்கனவே செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் படம் பிடித்தவற்றை ஆராய்ந்த சண்முக சுப்பிரமணியன், அதன் சிதைந்த பாகங்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பி வைத்தார். இதனடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள் சண்முக சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின் படி விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடங்களை கண்டுபிடித்தது.

advertisement by google

நாசாவின் இ மெயில்
இதனையடுத்து நாசா விண்வெளி ஆய்வு மையமானது சண்முகம் சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்து இ மெயில் அனுப்பியது. நாசா வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடம்பிடிக்கப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

advertisement by google

நாசாவின் படங்கள்
நாசாவின் செய்திக் குறிப்பில், லூனார் ர்கனைஸ்ஸான்ஸ் ஆர்ப்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் தரையிறக்க திட்டமிட்டிருந்த இடத்தின் புகைப்படம் செப்டம்பர் 26-ல் வெளியிடப்பட்டது. இதனை டவுன்லோடு செய்து பல ஆய்வாளர்கள் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

S குறியீடு
சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடத்தை நாசாவுக்கு தெரியப்படுத்தினார். அவரது தகவலின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில்தான் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சண்முக சுப்பிரமணியன் மூலம் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் பகுதிக்கு S என நாசா குறியீடு செய்துள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button