இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து பகீர் தகவல்கள்,உறுப்பு திருடும் பிரபல மருத்துவமனைகள்

advertisement by google

விஜய் நடித்த ‘மெர்சல்’ பட ஆம்புலன்ஸ் காட்சியையே ஓவர்டேக் செய்கிறது 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடமிருந்து நமக்குக் கிடைத்த பகீர் தகவல்.

advertisement by google

உயிருக்குப் போராடிக் கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றாமல் கமிஷனுக்காக தூரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கொண்டு போய் சேர்ப்பது…

advertisement by google

மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைத் திருட மூளைச்சலவை செய்து பிரபல தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வது என கமிஷனுக்காக தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களே படுபாதகச் செயல்களில் ஈடுபடுவதாக ஆதாரத்துடன் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக தகவல் நம் இதயத்தில் அணுகுண்டை வீசியது போல் இருந்தது.

advertisement by google

விபத்துக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. உடனடியாக, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்தால் தான் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால், சென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் பெரும்பாக்கத்திலுள்ள பிரபல குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்து அதற்கேற்றார் போல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

advertisement by google

இதற்கு, ஏ.ஆர். எஃப் (ஆம்புலன்ஸ் ரெஃபரல் ஃபீஸ்) என்று பெயர். ஒரு நோயாளியை அட்மிட் செய்து அவர் ஓ.பி. எனப்படும் புறநோயாளியாக மட்டுமே சிகிச்சை பெற்றுச் சென்றால் 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் கமிஷன். அதுவே, உள்நோயாளியாக ஐ.சி.யூவில் அட்மிட் செய்யப்பட்டால் 10,000 ரூபாய்க்கு மேல் கமிஷன். இதைவிட, முக்கியமானது கல்லீரல், இதயம், நுரையீரல் உள்ளிட்ட மனித உறுப்புகள் திருட்டு. இதற்கு, ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவருடன் இருக்கும் இ.எம்.டி. எனப்படும் எமர்ஜென்சி மெடிசன் டெக்னிஷியனுக்கு கமிஷன் 75,000 ரூபாய்.

advertisement by google

மூளைச்சாவு அடைந்தவரின் உயிரை இனி காப்பாற்ற முடியாது என்பது நன்றாகத் தெரிந்தும் பொய்யான நம்பிக்கையையூட்டி குளோபல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் டாக்டர்களுக்கும் 10 சதவீத கமிஷன் என்று லட்சக்கணக்கில் பணம் டிரான்ஸாக்‌ஷன் ஆகிக் கொண்டிருக்கிறது.

advertisement by google

விபத்துக்குள்ளானவர்களையும் மூளைச்சாவு அடைந்தவர்களையும் கொண்டு வந்து சேர்க்க, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சென்னை ஈ.சி.ஆர். சாலையிலுள்ள ரிசார்ட்டுகளில் சரக்கு பார்ட்டி ஏற்பாடு செய்பவர் குளோபல் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி. பாஸ்கர் ரெட்டி தான்.

advertisement by google

காரணம் கல்லீரல், இதயம், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுவதில்லை. குளோபல், அப்பல்லோ, ஃபோர்ட்டிஸ், மியாட், டாக்டர் ரேலா, செட்டிநாடு உள்ளிட்ட பிரபல மருத்துவமனைகளில்தான் செய்யப்படுகின்றன. ட்ரான்ஸ்ப்ளேண்ட் ரேட்டிங்கில் நம்பர்-1 இடத்தில் இருப்பது பிரபல குளோபல் மருத்துவமனை தான். இப்படிப்பட்ட, மருத்துவமனைகள் புரோக்கர்களுக்கு இவ்வளவு லட்சம் கமிஷனே கொடுக்கின்றன என்றால் எத்தனை லட்சம் நோயாளிகளிடமிருந்து பிடுங்குவார்கள்?

மேலும், பகீரூட்டும் ஆதாரங்களுடன் விரிவான தகவல்கள் “உறுப்பு திருடும் தனியார் மருத்துவமனைகள்… துணை போகும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள்” என்ற தலைப்பில் 2019 செப்டம்பர்-28 ந்தேதி இன்று வெளியான நக்கீரனில்…

advertisement by google

Related Articles

Back to top button