இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்களிடைய ஏற்படுத்தியுள்ள டாஸ்மாக் விவகாரம்? அதிமுக -திமுக மற்றும் எதிர்கட்சிகள் எப்படி கையாள போகின்றன என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

சென்னை: டாஸ்மாக் விவகாரம் ஒன்று போதும்.. இந்த டாஸ்மாக் விவகாரத்தை திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எப்படி கையாள போகின்றன, எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவாகி உள்ளது!

advertisement by google

எடப்பாடியாரை பொறுத்தவரை இந்த 2 மாதமும் மக்களிடம் மிக மிக வேகமாக நெருங்கி வந்தார்.. எளிமையான முதல்வர் மட்டுமல்ல, திறமையான முதல்வரும்கூட என்ற பெயரையும் வெகு சீக்கிரத்திலேயே பெற்று விட்டார்.. எந்த அளவுக்கு நல்ல பெயர் சம்பாதிக்கப்பட்டதோ அவை அத்தனையும் நொறுங்க தொடங்கியது 2 விஷயங்களால்தான்.

advertisement by google

ஒன்று கோயம்பேட்டை திறந்துவிட்டது.. இன்னொன்று டாஸ்மாக்கை திறந்துவிட்டது.. இவை இரண்டையும் ஏன் திறந்தார்கள் என்று இதுவரை நேரடியாக விளக்கம் மக்களுக்கு அளிக்கப்படவில்லை.. ஆனால் தொற்று பாதிப்பு அதிகமாகி வருவதற்கு முக்கிய காரணியாக கோயம்பேடு உள்ளது.. இதை அரசே பலமுறை ஒப்புக் கொண்டும் உள்ளது.
இந்த பதற்றம் அடங்குவதற்குள்தான் டாஸ்மாக் கடைகள் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்டது மக்களால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.. இந்த நிலையில் இப்போது 34 வகையான கடைகளையும் இன்று முதல் திறந்து விட்டுள்ளனர். இதனால் எப்படியும் இன்னொரு லாக்டவுன் போடப்படுமா என்பது கேள்விக்குறிதான்.. நேற்றுகூட 500ஐ தாண்டிய பாதிப்பு, இனிமேல் எந்த அளவுக்கு போகுமோ தெரியாது. அப்படி எண்ணிக்கை கூடினால் அதற்கும் மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டிய நிலைமை வரும்.

advertisement by google

அதேபோல, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் கலங்கி நிற்கும் நிலையில், அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போகாத நிலையில் டாஸ்மாக்கை திறக்க தமிழக அரசு அப்பீலுக்குப் போயிருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.. எனினும் இவைகளை எல்லாம் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.. ஆனால் அரசு எடுத்து வரும் துரித நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமே திமுகவின் “ஒன்றிணைவோம் வா” திட்டம்தான்.

advertisement by google

இந்த திட்டம் மிகப் பெரிய அளவுக்கு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளது. ஸ்டாலினே தினசரி வீடியோவில் உட்கார்ந்து நேரடியாக மக்களிடம் பேசிவருவது அதிமுகவை அசைத்து பார்த்துவிட்டது.. “எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது, எப்ப பாரு குறையை சொல்லி அறிக்கை விட்டுட்டே இருக்காங்க.. ஸ்டாலின் என்ன டாக்டரா?” என்று ஏகப்பட்ட விமர்சனங்களை எடப்பாடியார் முன்வைத்தாலும் திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அவர்களால் இப்போது வரை முறியடிக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு திமுகவினர் மிகப் பெரிய அளவில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இன்று எல்லாவற்றையும் திறந்துவிட விட முக்கியக் காரணமே திமுகவின் அதிரடி செயல்பாடுகள்தான். அதேநேரம் டாஸ்மாக் விவகாரத்தில் திமுக ஆக்கப்பூர்வமான வேகம் காட்டவில்லை என்ற பெயர் வந்து விட்டது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு லெப்ட் & ரைட் வாங்கி மொத்தத்தையும் மாற்றி கொண்டிருப்பதுபோல, ஒரு அதிரடி இங்கும் உடனடியாக தேவைப்படுகிறது.
தமிழகம் நிதி நெருக்கடியிலும் சிக்கி விடக்கூடாது, நம் மக்களும் ஏழ்மையில் மேலும் தவிக்கக்கூடாது, தொற்று எண்ணிக்கையும் அதிகமாகி விடக்கூடாது.. இவைகளை மனதில் வைத்து திமுக இந்த நேரத்தில் அதிமுகவுக்கு ஏதாவது ஆலோசனை தந்தால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்! அதனை அரசும் பரிசீலிக்க முன் வரவேண்டும்.. ஆக மொத்தம் எது நடந்தாலும் அதற்கு முக்கிய திருப்பமாக அமைந்திருப்பது டாஸ்மாக் விவகாரமாகத்தான் இருக்கும்!

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button