இன்றைய சிந்தனைஉலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

ஓட்டகம் 100லிட்டர் தண்ணீரை10நிமிடத்தில் குடிக்கும் அதிசயம்? ஒட்டகம் பற்றி அறிய வேண்டிய தகவல் ?|முழுவிபரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

ஒட்டகம் பற்றி நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள்: 100 லிட்டர் தண்ணீர் 10 நிமிடங்களில் குடிக்கும் உயிரினம். அதிசய விலங்கு என்று கூற காரணம் நீரின்றி, உணவின்றி, பல மாதங்கள் வாழக்கூடியது.ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் ஒரு தாவர உண்ணி. குட்டிகளை ஈன்று பாலூட்டும் வகையை சார்ந்த ஒரு வீட்டுவிலங்கு எனலாம். ?ஒட்டகத்தின் உடல் அமைப்பு மற்றும் சிறப்புகள் : ஒட்டகத்தின் உடல் எடை 250 லிருந்து 680 கிலோ வரை வளரும். இதன் உயரம் 7 முதல் 8 அடி வரை இருக்கும். இவை சராசரியாக 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. பார்ப்பதற்கு சாதுவான விலங்காக இருந்தாலும் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் தன்மை கொண்டவை. 200 கிலோ வரையிலான எடையைச் சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது. . கொதிக்கும் மணலிலும் 50° செல்சியஸ் வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். அதன் எடையில் 22% இழந்தபின்னும் உயிர் வாழும் தன்மை கொண்டவை. கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும். மேய்வதற்குப் புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்து கொள்ளும். இடையில் நீர் கூட அருந்தாமல் இருக்கக் முடியும். இடையில் சிறிது தண்ணீர் கிடைத்து விட்டால் போதும், இன்னும் அதிகமான நாட்கள் உணவின்றி, நீரின்றி இருக்கும். ?திமில் அமைப்பு: ஒட்டகத்தின் உடல் அமைப்பு மற்றும் உடல் கூறுகள் மற்ற விலங்கினக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை எனலாம். இதன் உடலில் மிக முக்கிய பகுதியாக முதுகிலுள்ள தசை முண்டு அல்லது புடைப்புப் (hump) பகுதியாகும். ஒட்டகம் தனக்கு தேவையான உணவு மாற்று தண்ணீரை அதன் தசைமுண்டு பகுதியில் சேமித்து கொள்ளும். காலியாக இருக்கையில் தன் வடிவத்தை இழந்து ஒரு பக்கமாகச் சாய்ந்து தொங்கும் (flops). அதே நேரத்தில் ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button