இந்தியாஉலக செய்திகள்

சீனஅதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக உள்நாட்டு அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அவருக்கு எதிராக உள்நாட்டு அழுத்தம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

advertisement by google

மோடி சென்ற லடாக்கின் நிமு.. சிந்து, ஜான்ஸ்கர் நதிகளின் சங்கமம்..நீர் சறுக்கு சாகசகாரர்களின் சரணாலயம் லடாக் பிரச்சனை காரணமாக இந்தியா மற்றும் சீனாவின் பூகோள அரசியலில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

லடாக் பிரச்சனைதான் இரண்டு நாட்டு அரசியலை மட்டுமின்றி ஆசியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறுகிறார்கள்.

advertisement by google

முக்கியமாக இந்தியாவில் மத்திய அரசு மீதான மக்களின் ஆதரவும், சீனாவில் அதிபர் ஜிங்பிங்கிற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவும் லடாக் பிரச்னையை பொறுத்துதான் இனி இருக்கும் என்கிறார்கள்.

advertisement by google

இதை இரண்டு நாடும் எப்படி கையாள்கிறது என்பதை பொறுத்தே அந்த நாட்டில் ஆட்சி நிலைக்கும்.

advertisement by google

கிரீன் சிக்னல் காட்டிய புடின்.. முதல்நாள் போன் கால்.. மறுநாளே லடாக் விசிட்.. மோடியின் ராஜதந்திரம்

advertisement by google

லடாக்கைக் கைப்பற்ற சீனா துடிப்பது ஏன்.. பின்னணியில் நடப்பது என்ன?

advertisement by google

பிரதமர் மோடிஇந்த லடாக் பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாகவே முதிர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில் அதை இந்தியா மிகவும் முதிர்ச்சியாக எதிர்கொண்டது. முதலில் இந்த மரணம் தொடர்பாக இந்தியா அவசரப்பட்டு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. சண்டையை தொடர்ந்து உடனடியாக இந்தியா பேச்சுவார்த்தை என்ற முடிவை எடுத்தது.

செம வெளிப்படைஇன்னொரு பக்கம் தொடக்கத்தில் இருந்து இந்தியா வெளிப்படையாக இதை அணுகியது. எல்லையில் நடக்கும் அனைத்தும் விஷயங்களை இந்தியா தொடர்ந்து பகிர்ந்து வந்தது. கல்வான் ஆக்கிரமிப்பு தொடங்கி டெப்சாங் ஆக்கிரமிப்பு வரை தொடர்ந்து இந்தியா வெளிப்படையாக இருந்தது.

அதிலும் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த தகவலை அன்றே இந்தியா வெளிப்படையாக வெளியிட்டது.இந்தியா பேச்சுவார்த்தைநாங்கள் மோதலை விரும்பவில்லை. அமைதியை விரும்புகிறோம். அதே சமயம் இந்தியாவதுடன் மோதினால் கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தொடக்கத்திலேயே வெளிப்படையாக பேசிவிட்டார்

இந்தியா இந்த சண்டையை தொடர்ச்சியாக ராஜாங்க ரீதியாக எதிர்கொண்டு வந்தது. தொடர்ந்து சீனாவுடன் எல்லையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும் தொடர்ந்து இந்தியா பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.

இன்று மோடி அதிரடிஇன்னொரு பக்கம் உலக நாடுகளின் ஆதரவை தொடர்ந்து பெற்று வந்தது. இந்தநிலையில் இன்று பிரதமர் மோடி அதிரடியாக லடாக் எல்லைக்கே சென்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

இந்தியா – சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார். எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார்.

முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார்.

பெரிய ஆதரவுபிரதமர் மோடியின் இந்த லடாக் பயணம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா முழுக்க பிரதமர் மோடியின் பயணத்தை மக்கள் பாராட்டி இருக்கிறார்கள். அவருக்கு ஆதரவு பெருகி உள்ளது . இந்தியாவில் பிரதமர் மோடிக்கு இப்படி ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் சீனாவில் அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

தொடக்கத்தில் இருந்து அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜிங்பிங் எதிர்ப்புஆம் ஜிங்பிங் இந்தியாவை எதிர்க்க தொடங்கியதில் இருந்தே அந்த நாட்டு மக்கள் தொடங்கி ராணுவத்தினர் வரை அவரை தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். மொத்தம் மூன்று விதமான எதிர்ப்புகளை ஜிங்பிங் எதிர்கொண்டு வருகிறார்.

மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பு, முன்னாள் அரசியல் தலைவர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பு, ராணுவ வீரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பு ஆகியவை ஆகும்.

மக்கள் எப்படிலடாக் மோதலில் சீன வீரர்கள் எத்தனை பேர் பலியானார்கள் என்று சீனா இன்னும் தகவல் வெளியிடவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் சீன அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். சீனாவின் ராணுவத்தை அதிபர் ஜி மதிக்கவில்லை. இந்தியா போல அவர் வெளிப்படையாக செயல்படவில்லை. சீன தரப்பில் அதிக பேர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டு மக்கள் அதிபருக்கு எதிராக கொதித்து உள்ளனர்.

முன்னாள் அரசியல் தலைவர்கள் வீரர்கள்இன்னொரு பக்கம் சீனாவில் கண்டிப்பாக ராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது,

அங்கு ஆயுத புரட்சி வெடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டின் மூத்த தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் மகன் ஜியான்லி யாங் இது பற்றி பேசியுள்ளார்

அந்நாட்டில் ராணுவ புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது என்று சீனாவின் முன்னாள் அரசியல் தலைவர்கள் பலர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராணுவ வீரர்கள்இன்னொரு பக்கம் ராணுவ வீரர்களும் அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக குதித்து இருக்கிறார்கள். தேவையில்லாமல் எல்லை பிரச்னையை ஜிங்பிங் கையில் எடுத்துள்ளார் என்று அங்கு பிஎல்ஏ ராணுவத்தை சேர்ந்த வீரர்களே கொதிக்க தொடங்கி உள்ளனர்

எப்போது வேண்டுமானாலும் இவர்கள் அதிபருக்கு எதிராக குதிக்க வாய்ப்புள்ளது. ஒரு பக்கம் இந்திய பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் அதிபர் ஜிங்பிங்கிற்கு தொடர்ந்து எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button