t

??விரிவான செய்திகள்???

advertisement by google
??????விண்மீண்நியூஸ்???? நேரலை செய்திகள்*
?வெங்கையா நாயுடு அஞ்சலி
?மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அஞ்சலி.
[9/8, 11:17 AM] விண்மீண்நியூஸ்2: ?% அவசரநிலை காலத்தில் பொது சுதந்திரத்திற்கான அவரது துணிச்சல் . போராட்டம் நினைவில் கொள்ளப்படும்
முன்னாள் மத்திய அமைச்சர் ராம்ஜெத்மலானி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/8, 11:17 AM] விண்மீண்நியூஸ்2: ?% மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சர் செங்கோட்டையன்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/8, 11:17 AM] விண்மீண்நியூஸ்2: ?% முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி உடலுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு நேரில் அஞ்சலி
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/8, 11:17 AM] விண்மீண்நியூஸ்2: Update
?% பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனர்களிடம் ஆலோசிக்கப்படும் , ஆலோசித்த பின் முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
?% புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற முடியும்
?% தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே 1,500 ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும்
அமைச்சர் செங்கோட்டையன்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???கொடைக்கானலில் ‘ஆப் சீசன்’ துவக்கம்
‘மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதம் சீசன் காலங்களாகும்.
செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாம் சீசனான ‘ஆப் சீசன்’ எனப்படும்.
இந்த சமயத்தில் வெயிலின் தாக்கமின்றி இதமான குளிர் இருக்கும்.
ஆப் சீசனை அனுபவிக்கும் விதமாகவும், வார விடுமுறையை கொண்டாடும் விதமாகவும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பைன் பாரஸ்ட், கிரீன் வேலி, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் தலைகளாகவே தென்பட்டன.
இதில் தூண்பாறை, கிரீன்வேலி பகுதிகளில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் காண முடியாமல் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???2020-21 கல்வியாண்டு முதல் விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்ப்பு
2020- 21ம் கல்வியாண்டு முதல் விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.
வரும் 2020- 21ம் கல்வியாண்டு முதல் விஐடி நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றுடன் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களின் பரிந்துரைப்படி இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் உள்ள முன்னோடி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களின் திறனாய்வு திறனை பரிசோதிக்க இந்த பிரிவினை நுழைவுத் தேர்வுகளில் வைத்துள்ளன.
இந்த நுழைவு தேர்வில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்கப்படும்.
இயற்பியல் 35, வேதியியல் 35, கணிதம் அல்லது உயிரியல் 40, திறனாய்வு 10, ஆங்கிலம் 5. நுழைவுத் தேர்வின் கால அளவு இரண்டரை மணி நேரம்.
நுழைவுத்தேர்வில் நெகட்டிவ் மதிபெண் கிடையாது.
புதிய நுழைவுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் விரைவில் விஐடியின் www.vit.ac.in இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???திருப்பூரில் கடலெண்ணெய் பாக்கெட்டில் பாமாயில் அடைத்து விற்பனை
திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று பல்லடம் ரோட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல்லடம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடலை எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 1310 லிட்டர் எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பகுப்பாய்வு அறிக்கையின் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???தெருநாயை சுட்டுக்கொன்ற டாக்டர் மீது வழக்கு
திருவனந்தபுரம் பூஜப்புரா பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு.
டாக்டர். இவர் வசித்துவரும் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருந்து வருவதாக தெரிகிறது.
சாலையில் ஓடும் நாய்களால் விபத்துக்களும் ஏற்பட்டு வந்தன.
இதனால் நாய்கள் மீது விஷ்ணு கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷ்ணு வீட்டு முன் ஒரு தெருநாய் நின்று கொண்டிருந்தது.
இதைக்கண்டு கோபமடைந்த அவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் பலத்த காயமடைந்த நாய் சிகிச்சை பலனின்றி இறந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விலங்குகள் நலவாரியத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் டாக்டர் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ??????விசாரணைக்கு சென்ற இடத்தில் தகராறு எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற போலீஸ் சஸ்பெண்ட்
மதுரையில் புகாரை விசாரிக்க, போதையில் வந்த போலீஸ்காரரை எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிபவர் ராமு.
ஒரு புகார் மனு ெதாடர்பாக, மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அழகேசன், அவரது மனைவி லட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று முன்தினம் ஒத்தக்கடைக்கு ராமு வந்தார்.
குடிபோதையில் இருந்த ராமு, 2 பேரிடமும் விசாரணை என்ற பெயரில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில்அழகேசன் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் ராமுவை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார், விசாரிக்க முயன்றனர்.
இதில் ஆத்திரமடைந்த ராமு, அங்கிருந்த தனிப்பிரிவு சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணனை தாக்க முயன்றதாகவும், அவரை சக போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி எஸ்பி மணிவண்ணனிடம் சிறப்பு எஸ்ஐ முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து ராமுவை சஸ்பெண்ட் செய்து, எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???மதுரையில் காவல் துணை ஆய்வாளரை தாக்க முயன்ற 5 பேர் கைது
மதுரை வைகை தென்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணை ஆய்வாளரை தாக்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்த ராஜகணேஷ் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ??????சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய 2-வது நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த கஞ்சாவை ரோந்து போலீஸ் கைப்பற்றியது.
பேருந்து நிலையத்தில் உள்ள சி.சி,டி.வி. பதிவுகளைக் கொண்டு கஞ்சாவை விட்டுச்சென்றது யார் என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகின்றன.
??செய்திகுழுமம்*
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ?
அசாம்: கார்பி ஆங்லாங் பகுதியில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு.!
இமாச்சல பிரதேசம் சம்பாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் அசாமிலும் நில அதிர்வு பதிவாகி உள்ளது.
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ???ஆப்கான் அதிபர், தாலிபன் தலைவர்கள் ரகசிய சந்திப்பை ரத்து செய்தார் டிரம்ப்
ஆப்கான் அதிபர் மற்றும் முக்கியமான தாலிபன் தலைவர்கள் தனித்தனியாக ரகசியமாக அமெரிக்கா வரவழைக்கப்ட்டு தம்மை சந்திக்க இருந்த நிலையில், காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு அமெரிக்க வீரரும், 11 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தையை தாம் ரத்து செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கேம்ப் டேவிட் எனுமிடத்தில் ஆப்கான் அதிபரையும் தாலிபன் தலைவர்களையும் ரகசியமாக சந்திக்க இருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
??செய்திகுழுமம்
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ?
சாதிய, வகுப்புவாதத்தைப் பரப்பும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான கேள்வித்தாள் போலியானது – CBSE விளக்கம்.!
தலித் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் உலா வரும் வினாத்தாள் போலி என்று CBSE விளக்கம் அளித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான கேள்வித்தாள்களில் சாதி பாகுபாட்டையும், வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் இடம் பெற்று இருந்ததாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தத் தகவலில் உண்மை இல்லை என்று கேந்திரிய வித்யாலயா மற்றும் CBSE சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், எந்த ஒரு பள்ளியிலும் இதுபோன்ற கேள்வித்தாள் உருவாக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னை மண்டல இணை ஆணையர் மாணிக்கசாமி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிவரும் வினாத்தாள் வடிவமைப்பு CBSE பள்ளிகளையோ, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையோ சார்ந்தது அல்ல என்றும், 6-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் என்று உலா வரும் தகவலும் போலி என்றும் CBSE விளக்கம் அளித்துள்ளது.
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ? New News …..
?வடபழனி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு எழுத்தர் பணியிடை நீக்கம்
?சென்னை வடபழனி காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு எழுத்தர் சுரேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஜீவன் என்பவரை தாக்கிய புகாரில் தெற்கு இணை ஆணையர் மகேஸ்வரி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ?% தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகைக்கு ஆளுநராக பதவியேற்கவுள்ள தமிழிசை சௌந்தரராஜன் வருகை – தெலுங்கானா முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்
════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்திகள்
✍??திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் வலது கரையில், 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு.
[9/8, 11:19 AM] விண்மீண்நியூஸ்2: ?அரசியல் சூழ்ச்சி ??
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார்
ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா – பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது.ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். ராம் ஜெத்மலானி பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகவும் இருந்தவர். முக்கிய வழக்குகள் பலவற்றில் இவர் ஆஜராகி வாதம் செய்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 7 தமிழர்களுக்காக இவர் 2011ல் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர் ஆனார். பாஜக மூத்த உறுப்பினர் அத்வானியின் ஹவாலா வழக்கு, 2 ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழிக்காக ஆஜர் ஆனார்.ஜெகன் மோகன் ரெட்டி சிபிஐ வழக்கு, எடியூரப்பா பண மோசடி வழக்கு, ஆசாரம் பாபு பாலியல் குற்ற வழக்கு, லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி இருக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். இந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக இவர் உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரின் உடலுக்கு இன்று முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button