t

பெண்னை கூட்டுப்பாலியல் கொடுமை செய்து கொன்று புதைத்தவனை போலீசார் கைது செய்தனர்?

advertisement by google

advertisement by google

2012ம் ஆண்டு நெல்லை அருகே கூட்டுப்பாலியல் கொடுமை செய்து பெண் கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில்

advertisement by google

அந்தப் பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்தவன் 7 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளான்

advertisement by google

புதைத்த இடத்தில் இருந்து பெண்ணின் எலும்புகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

advertisement by google

நெல்லை டவுனைச் சேர்ந்த மணிகண்டன்,

advertisement by google

ராமையன்பட்டியைச் சேர்ந்த ஆசீர்செல்வம்

advertisement by google

ஆகியோரை கொலை மிரட்டல் தொடர்பான வழக்கில் கடந்த 5ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, வேறொரு சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

இவ்விருவரும் சேரன்மாதேவியைச் சேர்ந்த சிவகுமார் என்பவனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது

நெல்லை சந்திப்பு பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தவன் சிவக்குமார். ஏற்கனவே திருமணமான சிவகுமாருக்கு, கணவரைப் பிரிந்து பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணான புஷ்பா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமலேயே அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளான் சிவக்குமார்

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்யும்படி புஷ்பா வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட சிவகுமார் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. புஷ்பா மயக்கம் அடைந்த நிலையில், அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இரவு நேரத்தில் உடலை தச்சநல்லூர் வாசுடையார் சாஸ்தா கோவில் அருகே உள்ள பகுதியில் குழிதோண்டி புதைத்து விட்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பின் சிவகுமார் மும்பைக்கு சென்று வேலைசெய்து வருவதுடன் அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டன், ஆசிர் செல்வம் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனை நெல்லைக்கு அழைத்து வந்த போலீசார், படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்

சிவகுமார் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் பிணத்தை புதைத்ததாக கூறப்படும் இடத்தில், நெல்லை வட்டாட்சியர், அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கி 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. அதன் பயனாக ஓரிடத்தில் இருந்து எலும்புத் துண்டுகளும் புஷ்பா அணிந்திருந்த ஆடை கிழிந்த பகுதிகளும் கிடைத்தன

இதனையடுத்து சிவக்குமாரிடம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள போலீசார், புஷ்பாவின் முழு பின்னணி குறித்த விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்

advertisement by google

Related Articles

Back to top button